இந்தியா ஆவலுடன் எதிர்பார்க்கும் எம்ஜி ஹெக்டர் காருக்கான முன்பதிவு தொடங்கியது?

இந்தியா ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் எம்ஜி ஹெக்டர் காருக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியா ஆவலுடன் எதிர்பார்க்கும் எம்ஜி ஹெக்டர் காருக்கான முன்பதிவு தொடங்கியது?

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள ஹெக்டர் (MG Hector), வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜி நிறுவனம் சமீபத்தில்தான் ஹெக்டர் காரை இந்திய மார்க்கெட்டில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா ஆவலுடன் எதிர்பார்க்கும் எம்ஜி ஹெக்டர் காருக்கான முன்பதிவு தொடங்கியது?

எம்ஜி நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் களமிறக்கவுள்ள முதல் தயாரிப்பு ஹெக்டர்தான். எம்ஜி ஹெக்டர் கார் இந்திய மார்க்கெட்டில் வரும் ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் எம்ஜி ஹெக்டர் காருக்கான முன்பதிவு அதிகாரப்பூர்வமற்ற முறையில் தொடங்கியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா ஆவலுடன் எதிர்பார்க்கும் எம்ஜி ஹெக்டர் காருக்கான முன்பதிவு தொடங்கியது?

இதுகுறித்து ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது. மும்பை மற்றும் கோவாவில் விரைவில் செயல்பாட்டிற்கு வரவுள்ள டீலர்ஷிப்களில்தான் எம்ஜி ஹெக்டர் காருக்கான முன்பதிவை ஏற்க தொடங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 51 ஆயிரம் ரூபாய் முன்பணத்துடன் புக்கிங் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா ஆவலுடன் எதிர்பார்க்கும் எம்ஜி ஹெக்டர் காருக்கான முன்பதிவு தொடங்கியது?

ஆனால் டீலர்ஷிப்கள் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. முதல் ஷோரூம் டெல்லியில் வரும் ஜூன் 4ம் தேதி முதல்தான் செயல்பாட்டிற்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எம்ஜி ஹெக்டர் கார் தோற்றத்தில் மிக பிரம்மாண்டமாக விற்பனைக்கு வரவுள்ளது. இது 5 சீட்டர் எஸ்யூவி ரக கார் ஆகும். வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை ஹெக்டர் காரில் எம்ஜி நிறுவனம் வழங்கவுள்ளது.

இந்தியா ஆவலுடன் எதிர்பார்க்கும் எம்ஜி ஹெக்டர் காருக்கான முன்பதிவு தொடங்கியது?

அத்துடன் தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகளும் எம்ஜி ஹெக்டர் காரில் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏர் பேக்குகள், இபிடி உடனான ஏபிஎஸ், பிரேக் அஸிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டிராக்ஸன் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் ஆகியவை இதில் குறிப்பிடத்தகுந்த அம்சங்கள் ஆகும்.

இந்தியா ஆவலுடன் எதிர்பார்க்கும் எம்ஜி ஹெக்டர் காருக்கான முன்பதிவு தொடங்கியது?

மெக்கானிக்கலாக எடுத்து கொண்டால், 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது. இதில், 2.0 லிட்டர் டீசல் இன்ஜினானது, ஜீப் காம்பஸ் மற்றும் டாடா ஹாரியர் ஆகிய கார்களில் இருக்கும் அதே இன்ஜின்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஹெக்டர் காரில் இந்த இன்ஜின் 168 பிஎச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை உருவாக்கும். இதில், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படவுள்ளது.

இந்தியா ஆவலுடன் எதிர்பார்க்கும் எம்ஜி ஹெக்டர் காருக்கான முன்பதிவு தொடங்கியது?

அதே சமயம் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 141 பிஎச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வல்லமை வாய்ந்ததாக இருக்கும். இதில், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா ஆவலுடன் எதிர்பார்க்கும் எம்ஜி ஹெக்டர் காருக்கான முன்பதிவு தொடங்கியது?

எம்ஜி ஹெக்டர் கார் ரூ.16-20 லட்ச ரூபாய் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானவுடன் டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ், மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் ஹூண்டாய் கிரெட்டா உள்ளிட்ட கார்களுடன் எம்ஜி ஹெக்டர் போட்டியிடவுள்ளது.

இந்தியா ஆவலுடன் எதிர்பார்க்கும் எம்ஜி ஹெக்டர் காருக்கான முன்பதிவு தொடங்கியது?

முன்னதாக ஹெக்டர் காரின் 7 சீட்டர் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளிலும் எம்ஜி மோட்டார் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஹெக்டர் வெளியீட்டு விழாவில் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 7 சீட்டர் ஹெக்டர் அனேகமாக அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
MG Hector Bookings Unofficially Begin — To Rival The Tata Harrier. Read in Tamil
Story first published: Saturday, May 25, 2019, 18:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X