வரலாறு காணாத புக்கிங்குகளை குவிக்கும் எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ்: நகர வாரியான விலை விபரம்!

இந்தியா வாகனத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வரும் கியா செல்டோஸ் மற்றும் எம்ஜி ஹெக்டர் கார்கள் எந்தெந்த நகரத்தில் என்ன விலையில் விற்பனையாகின்றது என்ற தகவலை இந்த பதிவில் காணலாம்.

வரலாறு காணாத புக்கிங்குகளை குவிக்கும் எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ்: நகர வாரியான விலை விபரம்!

2019ம் ஆண்டு துவங்கிய முதலிலிருந்தே இந்தியா வாகனத்துறை படுமோசமான மந்த நிலையைச் சந்தித்து வருகின்றது. இதன்காரணமாக, வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதன் உற்பத்தியை கணிசமாக குறைத்துள்ளன.

இத்துடன், நிதி நெருக்கடியைச் சீர் செய்யும் விதமாக தற்காலிக பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்து வருகின்றது. மேலும், தேங்கி கிடக்கும் வாகனங்களை சலுகை விலையில் விற்பனைச் செய்ய திட்டம் தீட்டி வருகின்றது.

வரலாறு காணாத புக்கிங்குகளை குவிக்கும் எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ்: நகர வாரியான விலை விபரம்!

இவ்வாறு, இந்திய வாகனத்துறையே படுமோசமான நிலையைச் சந்தித்து வரும் சூழ்நிலையில், அண்மையில் இந்தியாவில் கால் தடம் பதித்த எம்ஜி மற்றும் கியா ஆகிய இரு நிறுவனங்களும் ஏகபோகமான வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இந்த இரு நிறுவனங்களும் அறிமுகம் செய்த கார்கள் பெற்று வரும் புக்கிங்குகள், இதுவரை இந்திய வாகனத்துறைச் சந்திக்காத அளவிலான, இமாலய வெற்றியைப் பெற்றிருக்கின்றன.

வரலாறு காணாத புக்கிங்குகளை குவிக்கும் எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ்: நகர வாரியான விலை விபரம்!

அந்தவகையில், இந்தியாவிற்கான முதல் மாடலாக, கியா நிறுவனம் செல்டோஸையும், எம்ஜி நிறுவனம் ஹெக்டரையும் அறிமுகம் செய்துள்ளது. இவை எஸ்யூவி ரக கார்களாகும்.

இந்த இரு கார்களும் யாரும் எதிர்பாராத விலையில், அதிக சிறப்பம்சங்களைக் கொண்டதாக களமிறங்கியதே இத்தகைய வெற்றிக்கான காரணமாக பார்க்கப்படுகின்றது.

வரலாறு காணாத புக்கிங்குகளை குவிக்கும் எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ்: நகர வாரியான விலை விபரம்!

இதில் கியா நிறுவனத்தின் செல்டோஸ் கார் குறித்து பார்ப்போமேயானால், இது 5 இருக்கைக் கொண்ட மாடலாக களமிறங்கியுள்ளது. இந்த கார் அறிமுகத்தின்போதே 32 ஆயிரம் புக்கிங்குளை அள்ளிக் குவித்தது.

இதன் ஆரம்பநிலை மாடலுக்கு ரூ. 9.7 லட்சமும், இறுதி நிலை மாடலுக்கு 16 லட்சம் ரூபாய் என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

வரலாறு காணாத புக்கிங்குகளை குவிக்கும் எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ்: நகர வாரியான விலை விபரம்!

அதேபோன்று, எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் காரின் ஆரம்பநிலை பெட்ரோல் வேரியண்டின் விலை ரூ. 14.88 லட்சமாக உள்ளது. மேலும், இதன் டாப்எண்ட் பெட்ரோல் மாடலின் விலை ரூ. 17.8 லட்சமாக உள்ளது. ஆனால், இது கியா செல்டோஸைக் காட்டிலும் சற்று அதிக விலையைக் கொண்டதாகும்.

வரலாறு காணாத புக்கிங்குகளை குவிக்கும் எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ்: நகர வாரியான விலை விபரம்!

இருப்பினும், ஹெக்டர் காருக்கான புக்கிங்குகள் கிடு கிடுவென உயர்ந்த வண்ணம் உள்ளது. அந்தவகையில், 28 ஹெக்டார் யூனிட்டுகளுக்கான புக்கிங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. ஆனால், இந்நிறுவனத்தின் உற்பத்தி அளவோ மாதம் ஒன்றிற்கு 2 ஆயிரமாக உள்ளது.

வரலாறு காணாத புக்கிங்குகளை குவிக்கும் எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ்: நகர வாரியான விலை விபரம்!

இதன்காரணமாக, எம்ஜி நிறுவனம் ஹெக்டர் காருக்கான புக்கிங்கை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ஆனால், கியா நிறுவனம் இத்தகைய செயலில் ஈடுபடபோவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

வரலாறு காணாத புக்கிங்குகளை குவிக்கும் எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ்: நகர வாரியான விலை விபரம்!

ஏனென்றால் நிறுவனத்தின் உற்பத்தி மையம் ஆண்டு ஒன்றிற்கு 3 லட்சம் கார்களை தயாரிக்கும் அளவிலான கொள்ளளவைக் கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால், இந்நிறுவனம் மாதம் ஒன்றிற்கு எத்தனை யூனிட்டுகளை விற்பனைச் செய்கிறது என்ற தகவல் வெளியாகவில்லை.

வரலாறு காணாத புக்கிங்குகளை குவிக்கும் எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ்: நகர வாரியான விலை விபரம்!

இந்த இரு நிறுவனங்களின் கார்களும் இந்தியாவின் முக்கியமான 11 நகரங்களில் மட்டுமே விற்பனக்குக் கிடைக்கின்றது. மேலும், இந்த கார்களின் விலை நகரத்திற்கு நகரம் மாறுபட்ட நிலையில் காணப்படுகின்றது. இதற்கு ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் வரி விதிப்பு முறையே முக்கிய காரணமாக இருக்கின்றது.

வரலாறு காணாத புக்கிங்குகளை குவிக்கும் எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ்: நகர வாரியான விலை விபரம்!

அந்தவகையில், வேரியண்ட் வாரியாக கியா செல்டோஸ் மற்றும் எம்ஜி ஹெக்டார் கார்களின் விலை எந்த நகரத்தில் எவ்வளவு என்பதை கீழே காணலாம்.

கியா செல்டோஸ் எஸ்யூவி காரின் விலை விபரம்...

வரலாறு காணாத புக்கிங்குகளை குவிக்கும் எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ்: நகர வாரியான விலை விபரம்!

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரின் விலை விபரம். முக்கிய நகரங்கள் வாரியாக.

வரலாறு காணாத புக்கிங்குகளை குவிக்கும் எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ்: நகர வாரியான விலை விபரம்!

இதில், அதிக விலைக் கொண்ட நகரமாக பெங்களூரு இருக்கின்றது. அதேசமயம், அனைத்து நகரங்களக் காட்டிலும் குறைவான விலையில் விற்பனைச் செய்யும் நகரமாக அஹமதாபாத் உள்ளது. இந்த இரு நகரங்களுக்கு சுமார் ரூ. 2 லட்சம் வரை வித்தியாசம் நிலவுகின்றது.

வரலாறு காணாத புக்கிங்குகளை குவிக்கும் எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ்: நகர வாரியான விலை விபரம்!

இந்த வித்தியாசம், கியா செல்டோஸ் மற்றும் எம்ஜி ஹெக்டர் ஆகிய இரு கார்களுக்கும் ஒரே மாதிரியானதாக இருக்கின்றது.

வரலாறு காணாத புக்கிங்குகளை குவிக்கும் எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ்: நகர வாரியான விலை விபரம்!

இதில், கியா செல்டோஸ் இரு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் எஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கின்றது. அதேபோன்று, எம்ஜி ஹெக்டர் ஒரு பெட்ரோல், ஒரு டீசல் மற்றும் ஒரு ஹைபிரிட் தேர்வில் கிடைக்கின்றது. இந்த இரு கார்களையும் நமது டிரைவ்ஸ்பார்க் குழு ஃப்ர்ஸ்ட் டிரைவ் செய்து பார்த்து தகவல் வெளியிட்டுள்ளது. இதில் கியா செல்டோஸ் பற்றிய தகவலை மேலும் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும். அதேபோன்று, எம்ஜி ஹெக்டர் பற்றிய கூடுதல் தகவலை தெரிந்துக்கொள்ள இங்கே சொடக்கவும்.

Most Read Articles
English summary
MG Hector, Kia Seltos On Road Price In All Over India. Read In Tamil.
Story first published: Saturday, August 24, 2019, 13:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X