இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் எம்ஜி ஹெக்டர் இன்று விற்பனைக்கு அறிமுகமானது... விலை இதுதான்...

இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் என்ற பெருமையுடன், உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எம்ஜி ஹெக்டர் கார் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் எம்ஜி ஹெக்டர் இன்று விற்பனைக்கு அறிமுகமானது... விலை இதுதான்...

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் கார் (MG Hector) இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்திய மார்க்கெட்டில் எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள முதல் தயாரிப்பு ஹெக்டர்தான். இது பிரீமியம் எஸ்யூவி ரக கார் ஆகும். எம்ஜி நிறுவனம் ஹெக்டர் காரை கடந்த மே மாதம் 15ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் எம்ஜி ஹெக்டர் இன்று விற்பனைக்கு அறிமுகமானது... விலை இதுதான்...

அப்போது எம்ஜி ஹெக்டர் கார் தொடர்பான அனைத்து தகவல்களும் வெளியிடப்பட்டன. அத்துடன் எம்ஜி ஹெக்டர் காருக்கான புக்கிங் ரூ.50 ஆயிரம் முன்பணத்துடன் தொடங்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் பலர் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வந்த நிலையில், ஹெக்டர் கார் ஜூன் 27ம் தேதி (இன்று) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எம்ஜி மோட்டார் நிறுவனம் அறிவித்தது.

இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் எம்ஜி ஹெக்டர் இன்று விற்பனைக்கு அறிமுகமானது... விலை இதுதான்...

இதன்படி வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எம்ஜி ஹெக்டர் கார் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எம்ஜி ஹெக்டர் கார் ரூ.12.18 லட்சம் (எக்ஸ் ஷோரூம், இந்தியா) என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் என மொத்தம் 4 வேரியண்ட்களில் எம்ஜி ஹெக்டர் கார் கிடைக்கும். எம்ஜி ஹெக்டர் காரின் டாப் எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.16.88 லட்சம் (எக்ஸ் ஷோரூம், இந்தியா). எம்ஜி ஹெக்டர் காரின் விலை பட்டியலை நீங்கள் கீழே காணலாம்.

Variant STYLE SUPER SMART SHARP
Petrol MT Rs 12,18,000 Rs 12,98,000 - -
Petrol Hybrid MT - Rs 13,58,000 Rs 14,68,000 Rs 15,88,000
Petrol DCT - - Rs 15,28,000 Rs 16,78,000
Diesel MT Rs 13,18,000 Rs 14,18,000 Rs 15,48,000 Rs 16,88,000
இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் எம்ஜி ஹெக்டர் இன்று விற்பனைக்கு அறிமுகமானது... விலை இதுதான்...

எம்ஜி ஹெக்டர் காரில் பல்வேறு அதிநவீன வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. எம்ஜி ஹெக்டர் கார் ஏற்கனவே ஷோரூம்களை வந்தடைந்து விட்டது. டெலிவரி மிக விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்திய மார்க்கெட்டில் மிகவும் சவால் நிறைந்த மிட் சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் எம்ஜி ஹெக்டர் கார் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் எம்ஜி ஹெக்டர் இன்று விற்பனைக்கு அறிமுகமானது... விலை இதுதான்...

எம்ஜி ஹெக்டர் காரில் மிகவும் ஸ்டைலான 17 இன்ச் ட்யூயல் டோன் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் என எம்ஜி ஹெக்டர் காரில், இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுமே வழங்கப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என எம்ஜி ஹெக்டர் காரில் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள் கிடைக்கிறது.

MOST READ: இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த மலிவான விலை ரெனால்ட் கார்... புதிய தகவல்கள் வெளியானது

இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் எம்ஜி ஹெக்டர் இன்று விற்பனைக்கு அறிமுகமானது... விலை இதுதான்...

இதில், பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 143 பிஎச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை உருவாக்கும். அதே சமயம் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 173 பிஎச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இரண்டு இன்ஜின்களும் ஸ்டாண்டர்டு 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸை பெற்றுள்ளன. அதே சமயம் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனல் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸை பெற்றுள்ளது.

MOST READ: பெட்ரோலுக்கு பதிலாக கோகோ கோலா ஊற்றினால் பைக் ஓடுமா? விடை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் எம்ஜி ஹெக்டர் இன்று விற்பனைக்கு அறிமுகமானது... விலை இதுதான்...

கோயமுத்தூரில் சமீபத்தில் நடைபெற்ற மீடியா டிரைவ் நிகழ்ச்சியில் எம்ஜி ஹெக்டர் காரை நாங்கள் ஓட்டி பார்த்தோம். பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின்களின் செயல்திறன் மற்றும் கையாளுமை ஆகியவற்றால் நாங்கள் ஈர்க்கப்பட்டோம். எம்ஜி ஹெக்டர் காரின் எங்கள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

MOST READ: இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்!

இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் எம்ஜி ஹெக்டர் இன்று விற்பனைக்கு அறிமுகமானது... விலை இதுதான்...

கேன்டி ஒயிட், ஸ்டாரி பிளாக், அரோரா சில்வர், பர்கண்டி ரெட் மற்றும் க்ளாசா ரெட் என மொத்தம் 5 வண்ணங்களில் எம்ஜி ஹெக்டர் கார் கிடைக்கும். இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் இன்டர்நெட் கார் எம்ஜி ஹெக்டர்தான். ஜீப் காம்பஸ், டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500 உள்ளிட்ட கார்களுடன் எம்ஜி ஹெக்டர் போட்டியிடவுள்ளது. அத்துடன் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ள கியா செல்டோஸ் காருக்கும் எம்ஜி ஹெக்டர் சவாலாக திகழும்.

Most Read Articles

English summary
MG Hector Launched In India At Rs 12.18 Lakh: Positioned In The Highly Competitive Mid-Size SUV Segment
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X