எம்ஜி ஹெக்டர் முன்பதிவு மீண்டும் எப்போது துவங்கும்? - புதிய தகவல்கள்!

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு முன்பதிவு மீண்டும் எப்போது துவங்கப்பட இருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

எம்ஜி ஹெக்டர் முன்பதிவு மீண்டும் எப்போது துவங்கும்? - புதிய தகவல்கள்!

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 27ந் தேதி தனது முதல் மாடலாக ஹெக்டர் எஸ்யூவியை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்தியாவின் முதல் நேரடி இணைய வசதியை பெற்ற கார் என்ற பெருமையுடன் வசீகரமான டிசைனில் வந்தது. மேலும், யாரும் எதிர்பாராத விதமாக மிக சவாலான ஆரம்ப விலையிலும் களமிறக்கப்பட்டது.

எம்ஜி ஹெக்டர் முன்பதிவு மீண்டும் எப்போது துவங்கும்? - புதிய தகவல்கள்!

இதனால், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியை இந்தியர்கள் முண்டியடித்து முன்பதிவு செய்தனர். எம்ஜி மோட்டார் நிறுவனமே எதிர்பாராத அளவுக்கு முன்பதிவு குவிந்தது. கிட்டத்தட்ட 28,000 பேர் முன்பதிவு செய்த நிலையில், ஹெக்டர் எஸ்யூவிக்கான புக்கிங்கை திடீரென நிறுத்தியது எம்ஜி மோட்டார் நிறுவனம்.

எம்ஜி ஹெக்டர் முன்பதிவு மீண்டும் எப்போது துவங்கும்? - புதிய தகவல்கள்!

மாதத்திற்கு 2,000 கார்கள் மட்டுமே என்ற உற்பத்தி இலக்குடன் வர்த்தகத்தை துவங்கியதால், வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக டெலிவிரி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுதான் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதற்கான முக்கிய காரணம்.

எம்ஜி ஹெக்டர் முன்பதிவு மீண்டும் எப்போது துவங்கும்? - புதிய தகவல்கள்!

இந்த நிலையில், குஜராத் மாநிலம் ஹலோல் பகுதியில் உள்ள ஆலையில் ஹெக்டர் எஸ்யூவியின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகளை தீவிரமாக இறங்கியுள்ளது எம்ஜி மோட்டார் நிறுவனம். இரண்டாவது ஷிஃப்டிலும் கார் உற்பத்தி செய்யவும் திட்டமிட்டுள்ளது.

எம்ஜி ஹெக்டர் முன்பதிவு மீண்டும் எப்போது துவங்கும்? - புதிய தகவல்கள்!

இந்த நிலையில், முன்பதிவை மீண்டும் துவங்குவதற்கான திட்டம் குறித்து எம்ஜி மோட்டார் அதிகாரி முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார். எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் சாபா கார் அண்ட் பைக் தளத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

எம்ஜி ஹெக்டர் முன்பதிவு மீண்டும் எப்போது துவங்கும்? - புதிய தகவல்கள்!

அதில்,"ஹெக்டர் டெலிவிரி குறித்த முறையான செயல்திட்டத்தை வகுக்கும் வரை புக்கிங்கை மீண்டும் திறக்கும் எண்ணம் இல்லை. முதலில் புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு விரைவாக டெலிவிரி கொடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

எம்ஜி ஹெக்டர் முன்பதிவு மீண்டும் எப்போது துவங்கும்? - புதிய தகவல்கள்!

ஹெக்டர் உற்பத்தியை அதிகரிக்கும்போது மீண்டும் உற்பத்தியை துவங்குவதற்கான திட்டம் உள்ளது. எனது கூற்றுப்படி, அடுத்த மாதம் முன்பதிவு மீண்டும் துவங்குவதற்கான வாய்ப்பு உள்ளது," என்று ராஜீவ் சாபா தெரிவித்துள்ளார்.

எம்ஜி ஹெக்டர் முன்பதிவு மீண்டும் எப்போது துவங்கும்? - புதிய தகவல்கள்!

இந்த நிலையில், ஹெக்டரை முன்பதிவு செய்வதற்கான தவம் கிடக்கும் வாடிக்கையாளர்களுக்காக மாற்றுத் திட்டம் ஒன்றை எம்ஜி மோட்டார் செயல்படுத்தி உள்ளது. இதன்படி, ஹெக்டர் எஸ்யூவியை முன்பதிவு செய்ய விரும்புவோரை காத்திருப்போர் பட்டியலில் சேர்த்து வருகிறது எம்ஜி மோட்டார்.

எம்ஜி ஹெக்டர் முன்பதிவு மீண்டும் எப்போது துவங்கும்? - புதிய தகவல்கள்!

ஆனால், முன்பணம் எதுவும் இல்லாமல், பெயர் விபரம் மட்டும் பெற்றுக் கொண்டு பதிவு செய்யப்படுகிறது. முன்பதிவு திறக்கப்படும்போது, காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் வாடிக்கையாளர்கள் முன்பதிவு பட்டியலில் சேர்க்கப்படுவர் என்று ராஜீவ் சாபா தெரிவித்துள்ளார். தற்போது 16,000 பேர் இதுபோன்ற காத்திருப்போர் பட்டியலில் பெயர் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எம்ஜி ஹெக்டர் முன்பதிவு மீண்டும் எப்போது துவங்கும்? - புதிய தகவல்கள்!

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு மிக நீண்ட காத்திருப்பு காலம் இருப்பதால், பலர் அண்மையில் வந்த கியா செல்டோஸ் காரின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளனர். இதனால், தகுதியுடைய வாடிக்கையாளர்களை இழக்க விரும்பாமல், காத்திருப்போர் பட்டியலில் பெயர் சேர்த்து வருகிறது எம்ஜி மோட்டார் நிறுவனம்.

எம்ஜி ஹெக்டர் முன்பதிவு மீண்டும் எப்போது துவங்கும்? - புதிய தகவல்கள்!

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியானது எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர், கவர்ச்சிகரமான அலாய் வீல்கள், பனோரமிக் சன்ரூஃப், 10.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டட பல்வேறு அம்சங்களை பெற்றுள்ளது. இந்த சாதனம் நேரடி இணைய வசதியையும் அளிக்கிறது.

எம்ஜி ஹெக்டர் முன்பதிவு மீண்டும் எப்போது துவங்கும்? - புதிய தகவல்கள்!

ரூ.12.18 லட்சம் என்ற சவாலான ஆரம்ப விலையில் மிகச் சிறப்பான இடவசதியுடன் வாடிக்கையாளர்களை வசீகரித்து வருகிறது. பாதுகாப்பு அம்சங்களிலும் இந்த கார் நிறைவை தருவதால், வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு புக்கிங் செய்து வருகின்றனர். இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் சீனாவை சேர்ந்த செயிக் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
According to the media report, MG Motors is planning to resume bookings for hector by next month.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X