எம்ஜி ஹெக்டர் காரை வாங்க போறீங்களா? அப்போ இந்த விஷயம் உங்களுக்கு அதிர்ச்சியாகதான் இருக்கும்...

எம்ஜி ஹெக்டர் காரை வாங்க முடிவு செய்திருப்பவர்களுக்கு அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எம்ஜி ஹெக்டர் காரை வாங்க போறீங்களா? அப்போ இந்த விஷயம் உங்களுக்கு அதிர்ச்சியாகதான் இருக்கும்...

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் ஹெக்டர் மிட் சைஸ் எஸ்யூவி காரை கடந்த ஜூன் 27ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. 12.18 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் எம்ஜி ஹெக்டர் கார் களமிறக்கப்பட்டது. சவாலான விலை நிர்ணயம், சிறப்பான வசதிகள் காரணமாக ஹெக்டர் எஸ்யூவிக்கு புக்கிங் குவிந்தது.

எம்ஜி ஹெக்டர் காரை வாங்க போறீங்களா? அப்போ இந்த விஷயம் உங்களுக்கு அதிர்ச்சியாகதான் இருக்கும்...

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட 22 நாட்களில், எம்ஜி ஹெக்டர் காருக்கான புக்கிங் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால் ஒரு மாதத்திற்கு 1,500 கார்களை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என்பதால், மேற்கொண்டு முன்பதிவுகளை ஏற்பதை எம்ஜி மோட்டார் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியது.

எம்ஜி ஹெக்டர் காரை வாங்க போறீங்களா? அப்போ இந்த விஷயம் உங்களுக்கு அதிர்ச்சியாகதான் இருக்கும்...

எனினும் தற்போது உற்பத்தி எண்ணிக்கை ஒரு மாதத்திற்கு 3 ஆயிரம் யூனிட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே ஹெக்டர் காருக்கான முன்பதிவு இன்று முதல் (செப்டம்பர் 29) மீண்டும் தொடங்கப்படும் என எம்ஜி மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. புக்கிங் தொகை 50 ஆயிரம் ரூபாய். ஹெக்டர் காருக்கான புக்கிங் மீண்டும் தொடங்கப்பட்டிருப்பதால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

எம்ஜி ஹெக்டர் காரை வாங்க போறீங்களா? அப்போ இந்த விஷயம் உங்களுக்கு அதிர்ச்சியாகதான் இருக்கும்...

கூடவே அவர்களுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்றும் வெளியாகியுள்ளது. ஆம், எம்ஜி ஹெக்டர் காரின் விலை வேரியண்ட்டை பொறுத்து 2.5 சதவீதம் வரை உயர்கிறது. எம்ஜி ஹெக்டர் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 16.90 லட்ச ரூபாய் (டெல்லி, எக்ஸ் ஷோரூம்). எனவே 2.5 சதவீத விலை உயர்வு எனும்போது, சுமார் 42 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எம்ஜி ஹெக்டர் காரை வாங்க போறீங்களா? அப்போ இந்த விஷயம் உங்களுக்கு அதிர்ச்சியாகதான் இருக்கும்...

ஆனால் தற்போதைய நிலையில் அனைத்து வேரியண்ட்களின் புதிய விலைகளையும் எம்ஜி மோட்டார் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. அதே சமயம் இந்த அதிரடி விலை உயர்வானது இன்று முதல் புக்கிங் செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் கட்டத்தில் ஏற்கனவே புக்கிங் செய்தவர்கள் இந்த விலை உயர்வினால் பாதிக்கப்பட மாட்டார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்ஜி ஹெக்டர் காரை வாங்க போறீங்களா? அப்போ இந்த விஷயம் உங்களுக்கு அதிர்ச்சியாகதான் இருக்கும்...

போட்டி நிறுவனங்கள் தங்கள் கார்களுக்கு மிகப்பெரிய தள்ளுபடிகளை வழங்கி கொண்டிருக்கும் நேரத்தில், எம்ஜி ஹெக்டர் காரின் விலை உயர்வு குறித்த செய்தி வெளியாகியுள்ளது. டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 உள்ளிட்ட கார்களுடன்தான் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி போட்டியிட்டு வருகிறது.

எம்ஜி ஹெக்டர் காரை வாங்க போறீங்களா? அப்போ இந்த விஷயம் உங்களுக்கு அதிர்ச்சியாகதான் இருக்கும்...

தற்போது டாடா ஹாரியர் கார் 80 ஆயிரம் ரூபாய் வரையிலான தள்ளுபடி பலன்களுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் ஜீப் காம்பஸ் காருக்கு 1.50 லட்சம் வரையிலான தள்ளுபடியும், மஹிந்திரா எக்ஸ்யூவி500 காருக்கு 1 லட்ச ரூபாய் வரையிலான பலன்களும் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

எம்ஜி ஹெக்டர் காரை வாங்க போறீங்களா? அப்போ இந்த விஷயம் உங்களுக்கு அதிர்ச்சியாகதான் இருக்கும்...

எம்ஜி மோட்டார் நிறுவனம் அடுத்ததாக இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. ஹெக்டருக்கு பிறகு இந்தியாவில் எம்ஜி நிறுவனம் களமிறக்கும் 2வது தயாரிப்பு இது. நடப்பாண்டு இறுதிக்குள் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
MG Hector Bookings Re-Opened In India: SUV Receives A Marginal 2.5% Price Hike As Well. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X