மீண்டும் துவங்கும் வாடிக்கையாளர்களின் பேவரட் எம்ஜி ஹெக்டரின் புக்கிங்... எப்போது தெரியுமா?

எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது ஹெக்டர் எஸ்யூவிக்கான புக்கிங்கை மீண்டும் துவக்கவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இச்செய்தியில் பார்ப்போம்.

மீண்டும் துவங்கும் வாடிக்கையாளர்களின் பேவரட் எம்ஜி ஹெக்டரின் புக்கிங்... எப்போது தெரியுமா?

கடந்த ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. எதிர்பார்த்ததைவிட அதிக முன்பதிவு குவிந்தது. இதனால், தற்காலிகமாக புக்கிங்கை நிறுத்தி வைத்தது, எம்ஜி நிறுவனம்.

மீண்டும் துவங்கும் வாடிக்கையாளர்களின் பேவரட் எம்ஜி ஹெக்டரின் புக்கிங்... எப்போது தெரியுமா?

இந்நிலையில், கையிருப்பில் போதுமான தயாரிப்பு கார்கள் தற்போது உள்ளதாகவும், இதனால் ஹெக்ட்ர் எஸ்யூவி-க்கான புக்கிங் மீண்டும் செப்டம்பர் 29ஆம் தேதி துவக்கப்படுவதாகவும் அந்நிறுவன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மீண்டும் துவங்கும் வாடிக்கையாளர்களின் பேவரட் எம்ஜி ஹெக்டரின் புக்கிங்... எப்போது தெரியுமா?

ஏற்கனவே பலர் ஹெக்டர் எஸ்யூவியை வாங்குவதற்காக பெயரை பதிவு செய்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் முன்பதிவு பட்டியலில் சேர்க்கப்பட இருக்கின்றனர். இவர்களது பெயர்களை பதிவு செய்ய அவர்களுக்காக மட்டும் 25ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதி வரை புக்கிங் திறக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, வரும் 29ந் தேதி முதல் முன்பதிவு முறைப்படி துவங்கப்பட இருக்கிறது.

மீண்டும் துவங்கும் வாடிக்கையாளர்களின் பேவரட் எம்ஜி ஹெக்டரின் புக்கிங்... எப்போது தெரியுமா?

அதிகம் விற்பனையான எஸ்யூவிகளில் ஹெக்டர் கார், மஹிந்திரா எக்ஸ்யூவி, டாடா ஹாரியர் மற்றும் ஜீப் கேம்பஸை முந்தி முதன்மையில் உள்ளது. இருப்பினும் விலையினால் கியா செல்டோஸிற்கு அடுத்ததாக தான் உள்ளது. ஆனால் இவ்விரு மாடல் கார்களும் போட்டி கார்களாக கருதப்படவில்லை. ஏனெனில் ஹெக்டர் தோற்றத்தில் பெரியது.

மீண்டும் துவங்கும் வாடிக்கையாளர்களின் பேவரட் எம்ஜி ஹெக்டரின் புக்கிங்... எப்போது தெரியுமா?

எம்ஜி மோட்டார் நிறுவனம் 6 இருக்கைகள் கொண்ட ஹெக்டாரின் மற்றொரு வெர்சனை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த 6 சீட்டர் மாடலின் ரோடு டெஸ்ட்டிங்கும் இந்திய மண்ணில் ஒரு புறம் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இதனால் ஹெக்டர் 6 சீட்டர் மாடல் எஸ்யூவி 2020ல் அறிமுகமாலாம் என தெரிகிறது.

மீண்டும் துவங்கும் வாடிக்கையாளர்களின் பேவரட் எம்ஜி ஹெக்டரின் புக்கிங்... எப்போது தெரியுமா?

இதிலும் 6 இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளதால் அளவில் பெரியதாக தெரிகிறது. எஸ்யூவிகளிலேயே ஹெக்டார் எஸ்யூவியில் மட்டும் தான் பின்புற இருக்கையை சாய்க்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் அழகான சன்ரூஃப், மைக்ரோ சிம் மூலமாக இண்டர்நெட் கனெக்‌ஷன், தொடுதிரையும் உள்ளன. இதுபோன்ற மேலும் பல நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் தான் ஹெக்டர் எஸ்யூவிக்கான வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

மீண்டும் துவங்கும் வாடிக்கையாளர்களின் பேவரட் எம்ஜி ஹெக்டரின் புக்கிங்... எப்போது தெரியுமா?

எம்ஜி ஹெக்டரில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் எஞ்சினுடன் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் வழங்கப்படுகிறது. இதன் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோலில் இன்ஜின் 143 பிஎச்பி ஆற்றலையும் 250 என்எம் திறனையும் வெளிப்படுத்தும். அதேபோல் 2.0 லிட்டர் டீசலில் என்ஜின் ஆனது 170 பிஎச்பி பவரையும் 350 என்எம் திறனையும் வெளிப்படுத்தும்.

மீண்டும் துவங்கும் வாடிக்கையாளர்களின் பேவரட் எம்ஜி ஹெக்டரின் புக்கிங்... எப்போது தெரியுமா?

பெட்ரோல் என்ஜின் மாடலானது 5 வேக நிலைகளை வழங்கும் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்விலும், 6 வேக நிலைகளை வழங்கும் டியூவல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் தேர்விலும் கிடைக்கிறது.

மீண்டும் துவங்கும் வாடிக்கையாளர்களின் பேவரட் எம்ஜி ஹெக்டரின் புக்கிங்... எப்போது தெரியுமா?

அனைத்து வேரியண்ட் ஹெக்டர் மாடல்களும் முன்பக்க சக்கரங்கள் மூலமாக இயங்கும் ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டத்தை பெற்றிருக்கின்றன. 2019 ஆம் ஆண்டு முடிவதற்கு முன்பே எம்ஜி மோட்டார் நிறுவனம் ஹெக்டரின் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு வேரியண்ட் கார்களையும் பிஎஸ்6 உமிழ்வு விதிமுறைக்கு கட்டுப்பட்டவையாக மாற்ற முயற்சித்து வருகிறது. மாற்றினால் விலையும் உயர்த்தப்படும் என தெரிகிறது.

இதனால் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியை வாங்குவதற்கு இதுவே சரியான தருணம்.

Most Read Articles
English summary
The automaker had said that it would re-open bookings once it manages to ramp up production sufficiently. After massive demand for the Hector SUV, MG Motor had to suspend bookings temporarily as it scrambled to fulfill existing orders.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X