இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரின் டெலிவரி அதிகாரப்பூர்வமாக தொடங்கியது...

இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரான எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டார் காரின் டெலிவரி அதிகாரப்பூர்வமாக தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரின் டெலிவரி அதிகாரப்பூர்வமாக தொடங்கியது...

உலக நாடுகளை தன் வாகனங்கள் மூலம் ஆளுகை செய்துவரும் எம்ஜி நிறுவனம், இந்தியாவில் காலம் தடம் பதிக்கும் விதமாக அண்மையில் அதன் எஸ்யூவி ரக ஹெக்டார் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இந்தியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த கார் கடந்த ஜூன் மாதம் 27ம் தேதிதான் விற்பனைக்கு அறிமுகமானது.

இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரின் டெலிவரி அதிகாரப்பூர்வமாக தொடங்கியது...

அறிமுகம் செய்யப்பட்ட அன்றைய நாளிலிருந்து தற்போது வரை, எஸ்யூவி பிரியர்கள் மத்தியில் இந்த கார் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்தவகையில், எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டார் கார் இதுவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புக்கிங் செய்துள்ளனர்.

இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரின் டெலிவரி அதிகாரப்பூர்வமாக தொடங்கியது...

இந்த கார், இந்தியாவில் ரூ. 12.18 லட்சம் என்ற ஆரம்பிலையிலும், ரூ. 16.88 லட்சம் என்ற கடைநிலை விலையிலும் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இவை டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும். அவ்வாறு, ஹெக்டாரின் பேஸ் வேரியண்ட் மாடலாக இருக்கும் பெட்ரோல் வெர்ஷன்தான் இதில் மலிவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன்காரணமாகவே, விலை அதிகமாக இருக்கும் டீசல் வேரியண்டைக் காட்டிலும் ஹெக்டார் மாடலில் பெட்ரோல் மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரின் டெலிவரி அதிகாரப்பூர்வமாக தொடங்கியது...

அந்தவகையில், தற்போது விற்பனையாகியுள்ள எம்ஜி ஹெக்டார் காரில் 50 சதவிகிதம் புக்கிங்குகளை பெட்ரோல் வேரியண்டே பெற்றுள்ளது. அதேபோன்று, 70 சதவீதத்தை டிசிடி அம்சத்தைப் பெற்றிருக்கும் ஹெக்டார் கார் பெற்றிருக்கின்றது. மேலும், இதில் உச்சபட்ச டிமாண்டை ஹெக்டார் காரின் டாப் என்ட் வேரியண்ட் பெற்றிருக்கிறது.

இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரின் டெலிவரி அதிகாரப்பூர்வமாக தொடங்கியது...

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

அதன் படத்தை நீங்கள் கீழே காணலாம்... அதேபோன்று, தற்போது புகைப்படத்தில் காட்சியளிக்கும் இந்த கார்தான், எம்ஜி ஹெக்டார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு பின்னர் டெலிவரி செய்யப்பட்ட முதல் காராகும். அவ்வாறு, அந்நிறுவனத்தின் முதல் காரை கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் பெற்றிருக்கின்றார்.

இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரின் டெலிவரி அதிகாரப்பூர்வமாக தொடங்கியது...

இதுகுறித்த புகைப்படத்தை டெக்டிராவலீட் என்ற தளம் வெளியிட்டுள்ளது. ஆனால், காரை வாங்கிய தொழிலதிபர் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

எம்ஜி நிறுவனத்தின் இந்த ஹெக்டார் கார், டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500, டாடா ஹெக்ஸா மற்றும் புதிய வருகையாக இருக்கும் கியா செல்டோஸ் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக இந்தியாவில் விற்பனைக்கு களமிறங்கியுள்ளது.

இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரின் டெலிவரி அதிகாரப்பூர்வமாக தொடங்கியது...

எஸ்யூவி வரிசையில் மற்ற கார்களைக் காட்டிலும் அதிக விற்பனையைப் பெற்று டாடா நிறுவனத்தின் ஹாரியர் கார்தான் முன்னோடியாக இருக்கின்றது. ஆனால், தற்போது எம்ஜி ஹெக்டார் எஸ்யூவிக்கு கிடைத்து வரும் வரவேற்பைப் பார்த்தால், அது இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் மாற்றமடைந்துவிடும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரின் டெலிவரி அதிகாரப்பூர்வமாக தொடங்கியது...

இந்த இலக்கை தொடும் விதமாக எம்ஜி நிறுவனம் ஹெக்டார் காருக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது. அந்தவகையில், 5 வருடம்/எண்ணிலடங்கா கிலோமீட்டர் வாரண்டியை வழங்கி வருகின்றது. இத்துடன் ஐந்து வருட ஆர்எஸ்ஏ கவர் மற்றும் 5 வருட பணியாள் கட்டணமில்லாத சர்வீஸ் உள்ளிட்ட சலுகையையும் அந்நிறுவனம் வழங்க இருக்கின்றது. இதுபோன்ற சலுகைகளின் காரணமாகவே பலர் இந்த காரை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரின் டெலிவரி அதிகாரப்பூர்வமாக தொடங்கியது...

இதேபோன்று எம்ஜி ஹெக்டார் காரின் பக்கம் எஸ்யூவி கார் பிரியர்கள் திரும்ப, கூடுதல் காரணங்கள் இருக்கின்றன. அவ்வாறு, இந்த காரில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்களும் உள்ளன.

இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரின் டெலிவரி அதிகாரப்பூர்வமாக தொடங்கியது...

அந்தவகையில், ஹெக்டார் எஸ்யூவி ரக காரில் 10.4 இன்சிலான இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. இதில், இ-சிம் கார்டைப் பொருத்தக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பம்சத்தால், ஹெக்டார் காரை இணையதள சேவையுடன் இணைத்து, பல்வேறு சிறப்பு வசதிகளைப் பெற முடியும்.

இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரின் டெலிவரி அதிகாரப்பூர்வமாக தொடங்கியது...

இதுமட்டுமின்றி, கூடுதல் சொகுசு மற்றும் சிறப்பு வசதியாக பனோரமிக் சன்ரூஃப், ஹீடட் ஓஆர்விஎம்கள், மழை பெய்தால் தானாக இயங்கும் வைப்பர்கள், எலக்ட்ரானிக்கால் சக்தியூட்டப்பட்ட டெயில்கேட், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமரா, 8 நிறங்கள் கொண்ட ஆம்பிசியன்ட் லைட் மற்றும் ரெக்லிங் வசதி கொண்ட பின்னிருக்கை உள்ளிட்ட வசதிகள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரின் டெலிவரி அதிகாரப்பூர்வமாக தொடங்கியது...

இதைத்தொடர்ந்து, பாதுகாப்பு வசதியாக இபிடியுடன் அம்சத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், சோர்வு நினைவூட்டல், எலக்ட்ரானிக் ஸ்டேபிளிட்டி கன்ட்ரோல், டிராக்சன் கன்ட்ரோல் மற்றும் ஹில் ஹோல்ட் கன்ட்ரோல் ஆகிய வசதிகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இத்துடன் ஆறு ஏர் பேக்குகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரின் டெலிவரி அதிகாரப்பூர்வமாக தொடங்கியது...

எம்ஜி ஹெக்டார் கார் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு எஞ்ஜின் ஆப்ஷனில் விற்பனைக்கு கிடைக்கின்றது. இதில் பெட்ரோல் எஞ்ஜின் 1.5 லிட்டர் அளவில் கிடைக்கின்றது. இது, அதிகபட்சமாக 143 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது.

இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரின் டெலிவரி அதிகாரப்பூர்வமாக தொடங்கியது...

அதேபோன்று, டீசல் எஞ்ஜின் 2.0 லிட்டர் மல்டிஜெட் யூனிட்டில் விற்பனைக்கு கிடைக்கின்றது. இது, 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இதைத்தொடர்ந்து, எம்ஜி நிறுவனம் 48வோல்ட் மைல்ட் ஹைபிரிட் சிஸ்டத்தையும், அதன் டாப் மூன்று வேரியண்டுகளில் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரின் டெலிவரி அதிகாரப்பூர்வமாக தொடங்கியது...

ஆகையால், இந்த செக்மெண்ட்டில், இச்சிறம்பத்தை பெரும் முதல் காராக இது மாறியிருக்கின்றது. அதேசமயம், இந்த ஹைபிரிட் சிஸ்டம் அதன் பெட்ரோல் வேரியண்டில் மட்டுமே கிடைக்கின்றது. இந்த காரின் கியர்பாக்ஸ் ஆப்ஷன் குறித்து பார்ப்போமேயானால், பெட்ரெல் வேரியண்டில் 7 ஸ்பீடு ட்யூவல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் கிடைக்கின்றது. மற்ற மாடல்கள் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டும் கிடைக்கின்றது.

எம்ஜி நிறுவனம் ஹெக்டர் காரின் 7 சீட்டர் வெர்ஷனையும் இந்திய மார்க்கெட்டில் களமிறக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
MG Hector SUV Deliveries Started In Kerala And Telangana. Read In Tamil.
Story first published: Friday, July 12, 2019, 14:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X