பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எம்ஜி ஹெக்டர் காருக்கான முன்பதிவு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காருக்கான முன்பதிவு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எம்ஜி ஹெக்டர் காருக்கான முன்பதிவு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது

இந்திய வாடிக்கையாளர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கும் ஹெக்டர் எஸ்யூவி காருக்கான முன்பதிவை எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக ஏற்க தொடங்கியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எம்ஜி ஹெக்டர் காருக்கான முன்பதிவு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது

நடப்பு ஜூன் மாத இறுதியில், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் வெப்சைட்டில், ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யலாம்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எம்ஜி ஹெக்டர் காருக்கான முன்பதிவு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது

இதுதவிர இந்தியாவில் உள்ள எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் 120 சென்டர்களிலும் முன்பதிவு செய்ய முடியும். வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இந்த 120 டச் பாயிண்ட்களை 250ஆக உயர்த்த வேண்டும் என எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எம்ஜி ஹெக்டர் காருக்கான முன்பதிவு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது

டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 உள்ளிட்ட மாடல்களுடன் எம்ஜி ஹெக்டர் நேரடியாக போட்டியிடவுள்ளது. தற்போது சீனாவில் விற்பனையில் உள்ள பயோஜன் 530 எஸ்யூவி காரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடல்தான் எம்ஜி ஹெக்டர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எம்ஜி ஹெக்டர் காருக்கான முன்பதிவு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது

குஜராத் மாநிலம் ஹலோல் பகுதியில் உள்ள செயிக் பிளாண்ட்டில் எம்ஜி ஹெக்டர் காரின் உற்பத்தியும் தொடங்கப்பட்டு விட்டது. எம்ஜி ஹெக்டர் காரின் நீளம் 4,655 மிமீ. அகலம் 1,835 மிமீ. உயரம் 1,760 மிமீ. வீல் பேஸ் 2,750 மிமீ.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எம்ஜி ஹெக்டர் காருக்கான முன்பதிவு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது

தனது கேட்டகரியில் மிக நீளமான வீல் பேஸை கொண்ட காராக எம்ஜி ஹெக்டர் கருதப்படுகிறது. இதன் பூட் ஸ்பேஸ் 587 லிட்டர்கள். எம்ஜி ஹெக்டர் காரின் ஸ்டைல் பயோஜன் 530 போலவே உள்ளது. ஆனால் இந்திய மார்க்கெட்டிற்கு ஏற்ற வகையில், 300 மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எம்ஜி ஹெக்டர் காருக்கான முன்பதிவு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது

எம்ஜி ஹெக்டர் காரில், 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல், 2.0 லிட்டர் டீசல் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல்-ஹைபிரிட் என மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன. எம்ஜி ஹெக்டர் காரில் பல்வேறு அதிநவீன வசதிகள் வழங்கப்படவுள்ளன.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எம்ஜி ஹெக்டர் காருக்கான முன்பதிவு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது

எனவே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எம்ஜி ஹெக்டர் பெரும் ஆவலை தூண்டியுள்ளது. இந்த காருக்கான புக்கிங் இன்று முதல்தான் (ஜூன் 4) தொடங்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் ரூபாய் என்ற முன்பணத்துடன் எம்ஜி ஹெக்டர் காரை புக்கிங் செய்து கொள்ளலாம்.

Most Read Articles
English summary
MG Hector SUV Official Bookings Begin. Read in Tamil
Story first published: Tuesday, June 4, 2019, 19:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X