எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியீடு

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ படங்கள் இந்தியாவில் இன்று வெளியிடப்பட்டது. அத்துடன், இந்த காரில் நேரடி இணைய வசதியும், அதன்மூலமாக கிடைக்கும் பயன்கள் குறித்த விளக்கி காண்பிக்கும் நிகழ்சசியும் நடந்தது.

நேரடி இணைய வசதியுடன் வரும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் தொழில்நுட்ப அம்சங்கள்!

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் விளம்பர படத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. அத்துடன், Drive.IN என்ற பெயரில் நேரடி இணைய வசதி மூலமாக இந்த காரின் செயலிகளை எவ்வாறு எளிதாக இயக்க முடியும் என்று விளக்கிக் காண்பிக்கப்பட்டது.

நேரடி இணைய வசதியுடன் வரும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் தொழில்நுட்ப அம்சங்கள்!

நேரடி இணைய வசதியுடன் வரும் இந்தியாவின் முதல் கார் மாடலாக இது இருக்கும் என்று தெரிகிறது. காரின் இன்ஃபோடெயின்மென்ட் சாதனத்திற்கு நேரடி இணைய வசதி கிடைப்பதன் மூலமாக, பல்வேறு செயலிகளை நேரடியாக இயக்க முடியும்.

நேரடி இணைய வசதியுடன் வரும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் தொழில்நுட்ப அம்சங்கள்!

மைக்ரோசாஃப்ட், டாம்டாம், சிஸ்கோ மற்றும் கானா ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த காரின் இன்ஃபோடெயின்மென்ட் சாதனத்திற்கு தேவையான சாப்ட்வேர்களை எம்ஜி மோட்டார்ஸ் உருவாக்கி இருக்கிறது. இந்த நேரடி இணைய வசதி மூலமாக, காரின் அனைத்து தொழில்நுட்பங்களையும் தங்கு தடையின்றி இயக்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

நேரடி இணைய வசதியுடன் வரும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் தொழில்நுட்ப அம்சங்கள்!

டாம்டாம் நிறுவனம் நேவிகேஷன் வசதியையும், கானா நிறுவனம் தனது மியூசிக் மொபைல் ஆப்பையும் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்திற்காக விசேஷமாக தயாரித்து கொடுத்துள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் உள்ளது. இதனால், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியை வாங்கும் வாடிக்கையாளர்கள் புதிய பயண அனுபவத்தை பெற முடியும் என்று கருதப்படுகிறது.

நேரடி இணைய வசதியுடன் வரும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் தொழில்நுட்ப அம்சங்கள்!

காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் தவிர்த்து, ஹாட் ஸ்பாட் மூலமாக மொபைல்போன், டேப்லெட், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களுக்கும் இணைய வசதியை இந்த காரிலிருந்து பெற முடியும். ஆன்போர்டு இன்டர்நெட் வசதியுடன் வரும் இந்த கார் இன்றைய தலைமுறை மக்களுக்கு பெரும் பயனளிக்கும் என்று தெரிகிறது.

நேரடி இணைய வசதியுடன் வரும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் தொழில்நுட்ப அம்சங்கள்!

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் நேரடி இணைய வசதி இருப்பதால், இதனை இந்தியாவின் முதல் Connected Car என்று குறிப்பிடுகின்றனர். இந்த இணைய வசதி மட்டுமின்றி, எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், ரிமோட் கீ லெஸ் என்ட்ரி, டே நைட் மிரர் பனோரமிக் சன்ரூஃப், 10 அங்குல திரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற இருக்கிறது.

நேரடி இணைய வசதியுடன் வரும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் தொழில்நுட்ப அம்சங்கள்!

புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி ஜீப் காம்பஸ், டாடா ஹாரியர் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் முன்பதிவு துவங்கி, ஜூன் துவக்கத்தில் டெலிவிரி கொடுக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சத்திற்கு இடையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

நேரடி இணைய வசதியுடன் வரும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் தொழில்நுட்ப அம்சங்கள்!

குஜராஜ் மாநிலம் ஹலோல் பகுதியில் உள்ள செயிக் குழுமத்தின் ஆலையில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. உள்நாட்டு உதிரிபாகங்களை அதிக அளவில் பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதால், விலை சவாலாக இருக்கும் என்று தெரிகிறது.

Most Read Articles
English summary
MG Motors India has revealed the first official photos and connected car features of their upcoming SUV - the Hector.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X