Just In
- 2 hrs ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
- 2 hrs ago சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- 3 hrs ago குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
- 3 hrs ago ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஆச்சரியம் அளிக்கும் மிக குறைவான விலையில் இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார்... டெலிவரி தொடங்கியது
ஆச்சரியம் அளிக்கும் மிக குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்திய மார்க்கெட்டில் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள கார் எம்ஜி ஹெக்டர் (MG Hector). இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் களமிறக்கியுள்ள கார்தான் ஹெக்டர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த எம்ஜி ஹெக்டர் கார், இந்தியாவில் கடந்த ஜூன் 27ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
5 சீட்டர் பிரீமியம் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த எம்ஜி ஹெக்டர் காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் உச்சகட்ட வரவேற்பை வாரி வழங்கியுள்ளனர். ஹெக்டர் காருக்கான முன்பதிவை எம்ஜி நிறுவனம் கடந்த ஜூன் 4ம் தேதி தொடங்கியது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட தினத்தன்று ஹெக்டர் காருக்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமான முன்பதிவுகள் குவிந்திருப்பதாக எம்ஜி நிறுவனம் அறிவித்தது.
இவர்கள் அனைவரும் எம்ஜி ஹெக்டர் காரின் விலை என்ன? என்பது தெரிவதற்கு முன்னதாகவே முன்பதிவு செய்தவர்கள். எம்ஜி நிறுவனம் ஹெக்டர் காருக்கான விலையை விற்பனைக்கு அறிமுகம் செய்த தினமான ஜூன் 27ம் தேதிதான் அறிவித்தது. ஆனால் ஹெக்டர் காருக்கு எம்ஜி நிறுவனம் மிக சவாலான விலையை நிர்ணயம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
எனவே ஹெக்டர் காருக்கு தொடர்ந்து முன்பதிவுகள் குவிந்து வருகின்றன. ஜூன் 27ம் தேதிக்கு பிறகு, வெறும் நான்கே நாட்களில் எம்ஜி ஹெக்டர் காருக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் வந்துள்ளன. இதனால் ஹெக்டர் காருக்கான புக்கிங் எண்ணிக்கை தற்போது 12 ஆயிரத்தை கடந்து, போட்டியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் கூடுமான வரை வேகமாக ஹெக்டர் கார்களை டெலிவரி செய்ய வேண்டும் என எம்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் தற்போது எம்ஜி ஹெக்டர் காரின் டெலிவரி தொடங்கப்பட்டுள்ளது. எம்ஜி ஹெக்டர் காரின் முதல் உரிமையாளர்களில் ஒருவர் அமித் பஹ்வா.
இவர் தனது எம்ஜி ஹெக்டர் காரை நேற்று (ஜூலை 1) டெலிவரி எடுத்தார். அவர் வெள்ளை நிற ஹெக்டர் காரை டெலிவரி எடுத்துள்ளார். எம்ஜி ஹெக்டர் கார் இந்திய மார்க்கெட்டில் ''இன்ஸ்டன்ட் ஹிட்'' அடித்திருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. சக்தி வாய்ந்த இன்ஜின் லைன்அப், அதிநவீன வசதிகள் என காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். எல்லாவற்றையும் விட ஆச்சரியம் ஏற்படுத்தும் விலை.
டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 உள்ளிட்ட எஸ்யூவி கார்களுடன் எம்ஜி ஹெக்டர் கார் போட்டியிட்டு வருகிறது. இந்த கார்களில் இல்லாத பல்வேறு அதிநவீன வசதிகள் எம்ஜி ஹெக்டர் காரில் வழங்கப்பட்டுள்ளன. எனவேதான் இந்திய மார்க்கெட்டில் எம்ஜி ஹெக்டர் உடனடியாக பிரபலம் அடைந்துள்ளது.
இத்தனைக்கும் எம்ஜி நிறுவனம் இந்திய மார்க்கெட்டிற்கு புதிய பிராண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செக்மெண்ட்டில் 48V மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமை பெற்றுள்ள முதல் கார் எம்ஜி ஹெக்டர்தான். எம்ஜி ஹெக்டர் காரின் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு இன்டர்கூல்டு பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 143 பிஎஸ் பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.
இதில், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ட்யூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (Dual-clutch Transmission) ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அதேசமயம் இதன் 1.5 லிட்டர் ஹைப்ரிட் டர்போசார்ஜ்டு இன்டர்கூல்டு பெட்ரோல் இன்ஜினும் 143 பிஎஸ் பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடியது. இதுதவிர 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் ஆப்ஷனும் ஹெக்டர் காரில் கிடைக்கிறது.
இந்த இன்ஜின் அதிகபட்சமாக 170 பிஎஸ் பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை வழங்க வல்லது. இந்த 2 இன்ஜின்களிலும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. எம்ஜி ஹெக்டர் காரின் பெட்ரோல் மேனுவல் வேரியண்ட் ஒரு லிட்டருக்கு 14.16 கிலோ மீட்டர் மைலேஜை வழங்க கூடியது. அதே சமயம் பெட்ரோல் ஹைப்ரிட் வேரியண்ட் லிட்டருக்கு 15.81 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும்.
அதே நேரத்தில் டீசல் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 17.41 கிலோ மீட்டர் மைலேஜை வழங்க வல்லது. ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் என எம்ஜி ஹெக்டர் கார் மொத்தம் 4 வேரியண்ட்களில் கிடைக்கிறது. எம்ஜி ஹெக்டர் காரில் ஸ்டாரி பிளாக், கிளாசே ரெட், பர்கண்டி ரெட், அரோரா சில்வர் மற்றும் கேண்டி ஒயிட் என 5 அட்டகாசமான எக்ஸ்டீரியர் கலர் ஆப்ஷன் தேர்வுகள் உள்ளன.
எம்ஜி நிறுவனம் எதிர்பார்த்ததை விட அதிக எண்ணிக்கையில் ஹெக்டர் காருக்கு முன்பதிவுகள் குவிந்து வருகின்றன. எனவே ஒரு சில நகரங்களில் குறிப்பிட்ட வேரியண்ட்களுக்கான காத்திருப்பு காலம் தற்போது நான்கு மாதங்களை கடந்துள்ளது. இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் என்ற பெருமையுடன் ஹெக்டரை எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
எம்ஜி ஹெக்டர் காரில், 360 டிகிரி கேமரா, ஃப்ரண்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள், பனரோமிக் சன் ரூஃப், 8 கலர்களுடன் ஆம்பியண்ட் லைட்டிங் உள்பட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் 10.4 இன்ச் டச் ஸ்கீரின் வழங்கப்பட்டுள்ளது. இந்த செக்மெண்ட்டிலேயே இதுதான் மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசியை ஆன் மற்றும் ஆஃப் செய்வது, சன் ரூஃப்பை திறந்து மூடுவது உள்பட 100 விதமான வசதிகளை வாய்ஸ் கமாண்ட் மூலமாகவே செய்ய முடியும் என்பது எம்ஜி ஹெக்டர் காரின் மற்றொரு முக்கியமான சிறப்பம்சம். இந்தியாவில் கார்களில் பயணம் செய்பவர்களுக்கான பாதுகாப்பை அதிகரிப்பதற்காக மத்திய அரசு புதிய பாதுகாப்பு விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
இந்த புதிய பாதுகாப்பு விதிமுறைகளின்படி கார்களில், ரியர் பார்க்கிங் சென்சார்கள் கட்டாயமாக இடம்பெற வேண்டும். ஆனால் எம்ஜி நிறுவனம் ஃப்ரண்ட் பார்க்கிங் சென்சார்களையும் சேர்த்தே வழங்கியுள்ளது. இதுவும் கூட செக்மெண்ட் ஃபர்ஸ்ட் ஃப்யூச்சர்தான். அத்துடன் இந்த செக்மெண்ட்டிலேயே மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய முன் இருக்கைகளை கொண்ட ஒரே கார் எம்ஜி ஹெக்டர்தான்.
இந்த செக்மெண்ட்டில் உள்ள பெரும்பாலான கார்களில், டிரைவர் இருக்கையை மட்டுமே மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்ய முடியும். ஆனால் எம்ஜி ஹெக்டர் காரில், டிரைவர் இருக்கையுடன் சேர்த்து முன்பகுதி பாசஞ்சர் இருக்கையையும் மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். எம்ஜி ஹெக்டர் காரின் டிரைவர் இருக்கையை 6 வழிகளிலும், முன் பக்க பாசஞ்சர் இருக்கையை 4 வழிகளிலும் மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்யலாம்.
இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய எம்ஜி ஹெக்டர் காரின் ஆரம்ப விலை 12.18 லட்ச ரூபாய் மட்டுமே. பேஸ் வேரியண்ட்டில் கூட எம்ஜி நிறுவனம் பல்வேறு வசதிகளை வழங்கியுள்ளது. எம்ஜி ஹெக்டர் காரின் டாப் எண்ட் வேரியண்ட்டின் விலை 16.88 லட்ச ரூபாய். இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். எம்ஜி நிறுவனம் ஹெக்டர் காரின் 7 சீட்டர் வெர்ஷனையும் இந்திய மார்க்கெட்டில் களமிறக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.