அடேங்கப்பா... எம்ஜி ஹெக்டர் காருக்கு பல மாதங்கள் நீளும் காத்திருப்பு காலம்!

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனத்தின் முதல் கார் மாடலாக ஹெக்டர் எஸ்யூவி கடந்த மாதம் 27ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்பார்ப்புகளை தாண்டி எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அறிமுக தினத்தன்று 10,000 முன்பதிவுகளை பெற்று வலுவான வர்த்தகத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது.

அடேங்கப்பா... எம்ஜி ஹெக்டர் காருக்கு பல மாதங்கள் நீளும் காத்திருப்பு காலம்!

இந்த நிலையில், முன்பதிவு 12,000 என்ற பெரும் எண்ணிக்கையை கடந்துள்ளதாக எம்ஜி நிறுவனத்தின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்கட்டமாக மாதத்திற்கு 2,000 ஹெக்டர் கார்களை உற்பத்தி செய்யும் திறனை ஹலோல் ஆலை பெற்றிருக்கிறது.

அடேங்கப்பா... எம்ஜி ஹெக்டர் காருக்கு பல மாதங்கள் நீளும் காத்திருப்பு காலம்!

இதனால், குறிப்பிட்ட எம்ஜி ஹெக்டர் வேரியண்ட்டுகளின் காத்திருப்பு காலம் அதிகபட்சமாக 7 மாதங்கள் வரை நீள்கிறது. வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், உற்பத்தியை அதிகரிப்பது குறித்தும் எம்ஜி பரிசீலனை செய்து வருகிறது.

அடேங்கப்பா... எம்ஜி ஹெக்டர் காருக்கு பல மாதங்கள் நீளும் காத்திருப்பு காலம்!

குறிப்பாக, எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் டிசிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடலில் ஷார்ப் என்ற டாப் வேரியண்ட்டிற்கு அதிக முன்பதிவுகள் கிடைத்துள்ளதாக எம்ஜி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இந்த வேரியண்ட்டின் சிவப்பு வண்ணத்திற்கு அதிக டிமான்ட் இருக்கிறதாம்.

அடேங்கப்பா... எம்ஜி ஹெக்டர் காருக்கு பல மாதங்கள் நீளும் காத்திருப்பு காலம்!

இந்த வேரியண்ட்டிற்குதான் அதிகபட்சமாக 7 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நீள்கிறது. டெல்லியில் 7 மாதங்கள் வரையிலும், இதர முக்கிய நகரங்களில் 6 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் இருப்பதாக டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடேங்கப்பா... எம்ஜி ஹெக்டர் காருக்கு பல மாதங்கள் நீளும் காத்திருப்பு காலம்!

நாட்டிலேயே அதிகபட்சமாக கேரள மாநிலம், கொச்சியில் உள்ள எம்ஜி டீலரில் 1,000 முன்பதிவுகளை பெற்று சாதனை புரிந்துள்ளது. அதற்கடுத்து, குர்கானில் உள்ள எம்ஜி டீலரில் ஹெக்டர் எஸ்யூவிக்கு 650 முன்பதிவுகள் கிடைத்துள்ளன. இதில், 400 பேர் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் கூடிய டிசிடி கியர்பாக்ஸ் மாடலை முன்பதிவு செய்துள்ளனர்.

அடேங்கப்பா... எம்ஜி ஹெக்டர் காருக்கு பல மாதங்கள் நீளும் காத்திருப்பு காலம்!

அதிக வரவேற்பை பெற்றிருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் டிசிடி கியர்பாக்ஸ் மாடல் தவிர்த்து, 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட ஹைப்ரிட் மாடலுக்கு நான்கு மாதங்கள் வரையில் காத்திருப்பு காலம் நீள்கிறது.

அடேங்கப்பா... எம்ஜி ஹெக்டர் காருக்கு பல மாதங்கள் நீளும் காத்திருப்பு காலம்!

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின், 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடல்களுக்கும் மூன்று மாதங்களும் காத்திருப்பு காலம் இருக்கிறது. வேரியண்ட்டை பொறுத்து காத்திருப்பு காலத்தில் வேறுபாடு நிலவுகிறது.

அடேங்கப்பா... எம்ஜி ஹெக்டர் காருக்கு பல மாதங்கள் நீளும் காத்திருப்பு காலம்!

டிசைன், நவீன தொழில்நுட்ப வசதிகள், எஞ்சின் தேர்வுகள், விலை என அனைத்திலும் மிகச் சிறந்த மதிப்புடைய மாடலாக எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு வந்துள்ளது. இதனால், விற்பனையில் சிறப்பான இடத்தை கூடிய விரைவில் பிடித்துவிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அடேங்கப்பா... எம்ஜி ஹெக்டர் காருக்கு பல மாதங்கள் நீளும் காத்திருப்பு காலம்!

புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் 10.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டுட ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும்.

அடேங்கப்பா... எம்ஜி ஹெக்டர் காருக்கு பல மாதங்கள் நீளும் காத்திருப்பு காலம்!

அத்துடன், இதில் நேரடி இணைய இணைப்பு பெறும் வகையில் சிம் கார்டு பொருத்தப்பட்டு வந்துள்ளது. இதன்மூலமாக, ஏராளமான தொழில்நுட்ப வசதிகளை பெறலாம். ஸ்மார்ட்போன் மூலமாக இணைக்கும் அவசியம் இல்லை. நேவிகேஷன் உள்ளிட்ட வசதிகளை நேரடியாக பெறலாம்.

அடேங்கப்பா... எம்ஜி ஹெக்டர் காருக்கு பல மாதங்கள் நீளும் காத்திருப்பு காலம்!

இதுதவிர, ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில் அ்சிஸ்ட் சிஸ்டம், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்களுடன் சிறப்பான மாடலாக இருக்கிறது.

அடேங்கப்பா... எம்ஜி ஹெக்டர் காருக்கு பல மாதங்கள் நீளும் காத்திருப்பு காலம்!

புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி ரூ.12.18 லட்சம் என்ற அதிரடியான ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதனால், ஹூண்டாய் க்ரெட்டா, ரெனோ டஸ்ட்டர், ஜீப் காம்பஸ், டாடா ஹாரியர் போன்ற வெவ்வேறு செக்மென்ட்டுகளில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கும் நடுத்தர வகை எஸ்யூவி கார்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Source: Autocarindia

Most Read Articles
English summary
According to reports, MG Hector SUV has garnered 12,000 bookings so far and the waiting period extended upto seven months for some top spec variants.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X