இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரை புக்கிங் செய்தவர்களுக்கு திடீரென வந்த இ-மெயில்.. எதற்காக தெரியுமா?

இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரை முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு தற்போது இ-மெயில் ஒன்று வந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரை புக்கிங் செய்தவர்களுக்கு திடீரென வந்த இ-மெயில்.. எதற்காக தெரியுமா?

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த கார்களில் ஒன்று எம்ஜி ஹெக்டர் (MG Hector). இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள முதல் கார் ஹெக்டர். எஸ்யூவி ரக காரான எம்ஜி ஹெக்டர் கடந்த ஜூன் 27ம் தேதியன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரை புக்கிங் செய்தவர்களுக்கு திடீரென வந்த இ-மெயில்.. எதற்காக தெரியுமா?

எம்ஜி ஹெக்டர்தான் இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மார்க்கெட்டில் எம்ஜி ஹெக்டர் காருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் என மொத்தம் 4 வேரியண்ட்களில் எம்ஜி ஹெக்டர் கிடைக்கிறது. அத்துடன் அரோரா சில்வர், கேண்டி ஒயிட், ஸ்டாரி பிளாக், பர்கண்டி ரெட், கிளாசே ரெட் என 5 வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரை புக்கிங் செய்தவர்களுக்கு திடீரென வந்த இ-மெயில்.. எதற்காக தெரியுமா?

எம்ஜி ஹெக்டர் காரில், பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுமே கிடைக்கின்றன. இது தவிர பல்வேறு அதிநவீன வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. எம்ஜி ஹெக்டர் காரின் ஆரம்ப விலை 12.18 லட்ச ரூபாய் மட்டுமே. டாப் எண்ட் வேரியண்ட்டின் விலை 16.88 லட்ச ரூபாய். இவை இரண்டும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரை புக்கிங் செய்தவர்களுக்கு திடீரென வந்த இ-மெயில்.. எதற்காக தெரியுமா?

அதிநவீன வசதிகள், சக்தி வாய்ந்த இன்ஜின் மற்றும் மிக சவாலான விலை உள்ளிட்ட காரணங்களால், எம்ஜி ஹெக்டர் காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முன்னதாக எம்ஜி ஹெக்டர் காருக்கான முன்பதிவு கடந்த ஜூன் 4ம் தேதி தொடங்கியது. அதன்பின் மளமளவென 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்தன.

இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரை புக்கிங் செய்தவர்களுக்கு திடீரென வந்த இ-மெயில்.. எதற்காக தெரியுமா?

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இந்த செக்மெண்ட்டில் ஒரு காருக்கு இவ்வளவு அதிகமான புக்கிங் குவிந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதே சமயம் எம்ஜி மோட்டார் நிறுவனமோ மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போனது. ஆனால் முன்பதிவுகள் குவிந்ததால், சில நகரங்களில் சில வேரியண்ட்களுக்கான காத்திருப்பு காலம் 8 மாதங்களை கடந்தது.

இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரை புக்கிங் செய்தவர்களுக்கு திடீரென வந்த இ-மெயில்.. எதற்காக தெரியுமா?

குஜராத் மாநிலம் ஹலோல் பகுதியில் உள்ள ஆலையில்தான் எம்ஜி நிறுவனம் ஹெக்டர் கார்களை உற்பத்தி செய்து வருகிறது. ஆனால் அங்கு ஒரு மாதத்திற்கு 2 ஆயிரம் கார்களை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். இப்படிப்பட்ட சூழலில் முன்பதிவுகள் குவிந்ததால், காத்திருப்பு காலம் இன்னும் நீண்டது. எனவே ஹெக்டர் காருக்கான முன்பதிவை எம்ஜி நிறுவனம் சமீபத்தில் தற்காலிகமாக நிறுத்தியது.

இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரை புக்கிங் செய்தவர்களுக்கு திடீரென வந்த இ-மெயில்.. எதற்காக தெரியுமா?

இந்த சூழலில் காத்திருப்பு காலம் நீள்வதை பயன்படுத்தி கொண்டு, கேரளாவை சேர்ந்த எம்ஜி ஹெக்டர் உரிமையாளர் ஒருவர் லட்சக்கணக்கில் லாபம் ஈட்ட முற்பட்ட சம்பவம் கூட சமீபத்தில் நடந்தது. அந்த வாடிக்கையாளருக்கு எம்ஜி நிறுவனம் காரை டெலிவரி செய்து விட்டது. ஆனால் காரை டெலிவரி பெற்ற ஒரு சில நாட்களிலேயே அந்த வாடிக்கையாளர் சுமார் 3 லட்ச ரூபாய் லாபம் வைத்து, அதனை விற்பனை செய்வதாக ஓஎல்எக்ஸில் விளம்பரம் செய்தார்.

இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரை புக்கிங் செய்தவர்களுக்கு திடீரென வந்த இ-மெயில்.. எதற்காக தெரியுமா?

எம்ஜி ஹெக்டர் காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பு காணப்படுகிறது என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம். இந்த சூழலில் எம்ஜி ஹெக்டர் காருக்கான முன்பதிவு மீண்டும் எப்போது தொடங்கப்படும்? என்பதை எம்ஜி நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. அந்த நாளுக்காக வாடிக்கையாளர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரை புக்கிங் செய்தவர்களுக்கு திடீரென வந்த இ-மெயில்.. எதற்காக தெரியுமா?

அதே சமயம் ஹலோல் தொழிற்சாலையில் உற்பத்தியை அதிகரிக்க தேவையான முயற்சிகளை எம்ஜி மோட்டார் நிறுவனம் செய்து வருகிறது. தரத்தில் சமரசம் செய்து கொள்ளாமல், தற்போது உள்ள 2 ஆயிரம் என்ற உற்பத்தி எண்ணிக்கையை மாதத்திற்கு 3 ஆயிரமாக உயர்த்த தேவையான நடவடிக்கைகளை எம்ஜி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரை புக்கிங் செய்தவர்களுக்கு திடீரென வந்த இ-மெயில்.. எதற்காக தெரியுமா?

வரும் அக்டோபர் மாதத்திற்குள்ளாக உற்பத்தி எண்ணிக்கை 3 ஆயிரமாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் ஹெக்டர் காரை புக்கிங் செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு எம்ஜி நிறுவனம் தற்போது இ-மெயில் ஒன்றை அனுப்பி வருகிறது. அதில், அவர்களுக்கு கார் எப்போது டெலிவரி கிடைக்கும்? என்பது தொடர்பான உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரை புக்கிங் செய்தவர்களுக்கு திடீரென வந்த இ-மெயில்.. எதற்காக தெரியுமா?

எம்ஜி நிறுவனத்தின் இந்த நடவடிக்கை பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஏனெனில் புக்கிங் செய்துவிட்டு மாதக்கணக்கில் காத்திருக்கும் வாடிக்கையாளர்களிடம், அவர்களது கார் எப்போது டெலிவரி செய்யப்படும்? என்பது தெரிவிக்க வேண்டிய ஒரு விஷயம்தான். சமீப காலத்தில் மிகப்பெரிய டிமாண்ட் காரணமாக புக்கிங்கை தற்காலிகமாக நிறுத்தியாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட 2வது நிறுவனம் எம்ஜி ஆகும்.

இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரை புக்கிங் செய்தவர்களுக்கு திடீரென வந்த இ-மெயில்.. எதற்காக தெரியுமா?

முன்னதாக ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கு இதேபோன்றதொரு நிலைமை ஏற்பட்டது. ஜாவா பைக்குகள் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய மார்க்கெட்டிற்கு வந்தன. எனவே வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை வாரி வழங்கினர். இதனால் புக்கிங் குவிந்தது. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு பைக்குகள் சரிவர டெலிவரி செய்யப்படவில்லை.

இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரை புக்கிங் செய்தவர்களுக்கு திடீரென வந்த இ-மெயில்.. எதற்காக தெரியுமா?

அத்துடன் ஜாவா பைக் டெலிவரி தொடர்பாக ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்பட்டன. இதனால் ஜாவா ரசிகர்கள் சமூக வலை தளங்கள் வாயிலாக தங்கள் கடும் அதிருப்தியை பதிவு செய்தனர். அத்துடன் சிலர் ஜாவா பைக்குகளுக்கான புக்கிங்கை ரத்து செய்து விட்டு அதற்கு பதிலாக ராயல் என்பீல்டு பைக்குகளை வாங்க தொடங்கினர்.

இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரை புக்கிங் செய்தவர்களுக்கு திடீரென வந்த இ-மெயில்.. எதற்காக தெரியுமா?

அதேபோன்றதொரு நிலைமை ஹெக்டர் காருக்கு ஏற்பட்டு விடக்கூடாது என எம்ஜி நிறுவனம் கருதுகிறது. ஹெக்டர் கார் எப்போது டெலிவரி கிடைக்கும்? என்ற தகவல் உறுதியாக தெரியவில்லை என்றால், வாடிக்கையாளர்கள் முன்பதிவை கேன்சல் செய்து விட்டு டாடா ஹாரியர் போன்ற கார்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரை புக்கிங் செய்தவர்களுக்கு திடீரென வந்த இ-மெயில்.. எதற்காக தெரியுமா?

இதுபோதாதென்று இந்திய வாடிக்கையாளர்கள் பெரும் ஆவலுடன் காத்து கொண்டிருக்கும் கியா செல்டோஸ் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளும் நெருங்கி வருகிறது. எம்ஜி ஹெக்டர் காருடன் கியா செல்டோஸ் போட்டியிடவுள்ளது. எனவே டெலிவரி தொடர்பான தகவல் தெரியவில்லை என்றால், எம்ஜி ஹெக்டர் காரை முன்பதிவு செய்துள்ளவர்கள் கியா செல்டோஸ் எஸ்யூவிக்கு மாறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரை புக்கிங் செய்தவர்களுக்கு திடீரென வந்த இ-மெயில்.. எதற்காக தெரியுமா?

அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகதான் எம்ஜி நிறுவனம் தற்போது திடீரென இந்த இ-மெயில் நடவடிக்கையை எடுத்துள்ளது. எப்படியோ ஹெக்டர் கார் எப்போது டெலிவரி கிடைக்கும்? என்ற உறுதியான தகவல் தற்போது தெரியவந்துள்ளதால், முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனிடையே கியா செல்டோஸ் எஸ்யூவி காருக்கும் முன்பதிவு குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Image Courtesy: Rohit Sharma

Most Read Articles
English summary
MG India Sent Email To Hector SUV Buyers - Here Is Why. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X