Just In
- 7 hrs ago
பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...
- 9 hrs ago
கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் முதல் தரிசனம்
- 9 hrs ago
ஜீப் காம்பஸின் பெட்ரோல் வேரியண்ட் பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டம்...
- 10 hrs ago
டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்... சென்னை வாடிக்கையாளர்களுக்கான நற்செய்தி!
Don't Miss!
- Movies
அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி!
- News
என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது.. தர்பார் ஆடியோ விழாவில் ரஜினிகாந்த்.. தமிழக அரசுக்கும் நன்றி
- Technology
6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30
- Sports
9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது? பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி!
- Finance
சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா..! கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..!
- Lifestyle
திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா?
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதுமையான கார் ஷோரூம் பெங்களூரில் திறப்பு!
பெங்களூரில் புதுமையான முறையில் கார் ஷோருமை அமைத்து ஆட்டோமொபைல் துறைக்கு புதிய பாதையை வகுத்து கொடுத்துள்ளது எம்ஜி மோட்டார் நிறுவனம். கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் ஹெக்டர் எஸ்யூவியுடன் இந்தியாவில் கால் பதித்தது. ஹெக்டர் எஸ்யூவிக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதையடுத்து, வர்த்தக விரிவாக்க முயற்சிகளில் கவனம் செலுத்தி வருகிறது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமான சேவையை வழங்கும் விதத்தில் புதிய ஷோரூம்களையும் திறந்து வருகிறது.

இந்த நிலையில், எம்ஜி நிறுவனம் பெங்களூரில் புதிய கார் ஷோரூமை திறந்துள்ளது. பொதுவாக கார் ஷோரூம் என்றாலே, பார்வையாளர்களை ஈர்க்கும் விதத்தில், கார் மாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். ஆனால், இந்த முறையை தகர்க்கும் விதத்தில், முற்றிலும் டிஜிட்டல் ஷோரூமாக இதனை அமைத்துள்ளது எம்ஜி மோட்டார்.

இந்த புதிய ஷோரூமில் கார்கள் எதுவும் காட்சிக்கு நிறுத்தப்படவில்லை. அதற்கு மாற்றாக, பிரம்மாண்டமான டிவி திரைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த திரை மூலமாக காரை முப்பரிமாண முறையில் பார்க்கவும், காரின் சிறப்பம்சங்களை விளக்கிக் காட்டும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

எம்ஜி ஹெக்டர் மற்றும் இனி அறிமுகம் செய்யப்பட இருக்கும் அனைத்து எம்ஜி ஹெக்டர் கார்களை இந்த ஷோரூமில் உள்ள டிவி திரைகள் மூலமாக 360 டிகிரி கோணத்தில் பார்த்து வாடிக்கையாளர்கள் முடிவு எடுத்துக் கொள்ள முடியும். வெளிநாடுகளில் ஆடி உள்ளிட்ட சில கார் நிறுவனங்கள் இதேபோன்ற டிஜிட்டல் கார் ஷோரூம்களை அமைத்துள்ளன.

இந்த டிஜிட்டல் கார் ஷோரூம்களுக்கு பெரிய அளவிலான இடம் தேவைப்படாது. இந்த ஷோரூம் வெறும் 600 சதுர அடியில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக, டீலர்களுக்கான முதலீடு வெகுவாக குறையும். நகரின் முக்கிய இடங்களிலையே ஷோரூமை அமைத்துக் கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளது.

கார்கள் காட்சிக்கு வைக்கப்படவில்லை என்றாலும், வாடிக்கையாளர்களுக்கு முழுமையான திருப்தியை தரும் வகையில், அனைத்து சிறப்பம்சங்களையும் இந்த டிஜிட்டல் ஷோரூம் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் புதிய அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்று எம்ஜி மோட்டார் தெரிவித்துள்ளது.