இந்தியாவில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... நம்ப முடியாத மிக குறைவான விலை... எவ்வளவு தெரியுமா?

நம்ப முடியாத மிக குறைவான விலையில், புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்று, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

நம்ப முடியாத மிக குறைவான விலையில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் மெல்ல மெல்ல பிரபலமடைய தொடங்கியுள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும் கூட, வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து விட்டு, அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில்தான் மிகவும் ஆர்வமாக உள்ளது.

நம்ப முடியாத மிக குறைவான விலையில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... எவ்வளவு தெரியுமா?

எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. மத்திய அரசு வழங்கி வரும் ஆதரவு மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக பல்வேறு முன்னணி நிறுவனங்களும் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்வதில் போட்டி போட்டு கொண்டு முனைப்புடன் செயலாற்றி வருகின்றன.

நம்ப முடியாத மிக குறைவான விலையில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... எவ்வளவு தெரியுமா?

ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை சற்று அதிகமாக இருப்பது பின்னடைவாக உள்ளது. இந்த சூழலில், மிகவும் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய எம்ஜி மோட்டார் நிறுவனம் திட்டமிட்டிருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் சமீபத்தில்தான் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது.

நம்ப முடியாத மிக குறைவான விலையில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... எவ்வளவு தெரியுமா?

இந்திய மார்க்கெட்டிற்கான எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் முதல் காரான ஹெக்டர் எஸ்யூவி கடந்த ஜூன் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு அசத்தலான வசதிகள், மிகவும் சவாலான விலை உள்ளிட்ட காரணங்களால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எம்ஜி ஹெக்டர் காருக்கு, மிக பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.

நம்ப முடியாத மிக குறைவான விலையில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... எவ்வளவு தெரியுமா?

இந்த சூழலில், இந்திய மார்க்கெட்டிற்கான எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் 2வது தயாரிப்பு நேற்று (டிசம்பர் 5) வெளியிடப்பட்டது. இது எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் ஆகும். இஸட்எஸ் எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

நம்ப முடியாத மிக குறைவான விலையில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... எவ்வளவு தெரியுமா?

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரில், 44.5kWh, லிக்யூட்-கூல்டு என்எம்சி (NMC-Nickel Manganese Cobalt) பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 340 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை 8.5 வினாடிகளில் இந்த கார் எட்டி விடும்.

நம்ப முடியாத மிக குறைவான விலையில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... எவ்வளவு தெரியுமா?

ஆனால் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. வரும் ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான் விலை அறிவிக்கப்படவுள்ளது. எனினும் 22 லட்ச ரூபாய் முதல் 25 லட்ச ரூபாய்க்கு உள்ளாக, எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நம்ப முடியாத மிக குறைவான விலையில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... எவ்வளவு தெரியுமா?

இந்திய மார்க்கெட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காருடன், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி போட்டியிடவுள்ளது. ஆனால் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலை அனைவராலும் வாங்க கூடிய அளவில் இருக்காது. எனவே குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை எம்ஜி களமிறக்கவுள்ளது.

நம்ப முடியாத மிக குறைவான விலையில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... எவ்வளவு தெரியுமா?

அதாவது இந்திய மார்க்கெட்டில், 10 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில், புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை எம்ஜி மோட்டார் நிறுவனம் களமிறக்க திட்டமிட்டு வருகிறது. இதற்கான வேலைகளையும் எம்ஜி மோட்டார் செய்து வருகிறது. எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான ராஜீவ் சாபா இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

நம்ப முடியாத மிக குறைவான விலையில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... எவ்வளவு தெரியுமா?

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் வெளியிட்டு விழாவின் போது அவர் இந்த தகவலை பகிர்ந்து கொண்டார். ஆனால் காரின் வடிவம், எங்கே உற்பத்தி செய்வது? என்பது போன்ற விஷயங்களை எம்ஜி மோட்டார் நிறுவனம் இன்னும் முடிவு செய்யவில்லை என கூறப்படுகிறது. ஆனால் 10 லட்ச ரூபாய்க்கு குறைவான விலையில் ஒரு எலெக்ட்ரிக் கார் வந்தால், அது நிச்சயம் வரவேற்பை பெறும்.

நம்ப முடியாத மிக குறைவான விலையில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... எவ்வளவு தெரியுமா?

இது தொடர்பாக ராஜிவ் சாபா கூறுகையில், ''இந்த மார்க்கெட்டில் முக்கியமான இடத்தில் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். மார்க்கெட்டில் உள்ள மற்ற முன்னணி நிறுவனங்களிடம் இருந்து எங்களை வேறுபடுத்தி காட்டுவதற்கான ஒரு வழிதான் இந்த எலெக்ட்ரிக் வாகனம். மற்ற முன்னணி நிறுவனங்கள் உடன் நம்மால் அவ்வளவு எளிதாக போட்டியிட முடியாது.

நம்ப முடியாத மிக குறைவான விலையில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... எவ்வளவு தெரியுமா?

ஏனெனில் அவர்கள் இங்கே 25-30 ஆண்டுகளாக உள்ளனர். எனவே நாங்கள் எங்களை வேறுபடுத்தி காட்ட வேண்டும்'' என்றார். ஆனால் எம்ஜி நிறுவனத்தின் 10 லட்ச ரூபாய்க்கு உள்ளான எலெக்ட்ரிக் காரை உடனடியாக எதிர்பார்க்க முடியாது. இதற்கு ஒரு சில ஆண்டுகள் பிடிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நம்ப முடியாத மிக குறைவான விலை... சீனாவில் லான்ச் ஆனது க்விட் எலெக்ட்ரிக் கார்... அடுத்து இந்தியாவில்

எம்ஜி நிறுவனத்தை போல் ரெனால்ட் நிறுவனமும் நம்ப முடியாத மிக குறைவான விலையில் க்விட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்தியாவில் களமிறக்கவுள்ளது. இந்த கார் தற்போது சீனாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

நம்ப முடியாத மிக குறைவான விலை... சீனாவில் லான்ச் ஆனது க்விட் எலெக்ட்ரிக் கார்... அடுத்து இந்தியாவில்

பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வது தொடர்பான தனது திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது. இதன்படி க்விட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்தியாவில் களமிறக்கவுள்ளதாக ரெனால்ட் தெரிவித்தது.

நம்ப முடியாத மிக குறைவான விலை... சீனாவில் லான்ச் ஆனது க்விட் எலெக்ட்ரிக் கார்... அடுத்து இந்தியாவில்

ஆனால் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு சீனாவில்தான் க்விட் எலெக்ட்ரிக் கார் முதலில் லான்ச் செய்யப்படும் எனவும் ரெனால்ட் நிறுவனம் அறிவித்தது. ஏனெனில் எலெக்ட்ரிக் கார்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் இந்தியாவில் இன்னும் பெரிய அளவில் ஏற்படுத்தப்படவில்லை.

நம்ப முடியாத மிக குறைவான விலை... சீனாவில் லான்ச் ஆனது க்விட் எலெக்ட்ரிக் கார்... அடுத்து இந்தியாவில்

இப்படிப்பட்ட ஒரு சூழலில் இந்தியாவில் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தால், அதன் விற்பனை சிறப்பாக இருக்காது என்பதை ரெனால்ட் நிறுவனம் நன்கு உணர்ந்துள்ளது. இந்த சூழலில் ரெனால்ட் நிறுவனம் அறிவித்தபடி, க்விட் எலெக்ட்ரிக் கார் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சீனாவில் சிட்டி கே-இஸட்இ (City K-ZE) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

நம்ப முடியாத மிக குறைவான விலை... சீனாவில் லான்ச் ஆனது க்விட் எலெக்ட்ரிக் கார்... அடுத்து இந்தியாவில்

சிட்டி கே-இஸட்இ எலெக்ட்ரிக் காரில், 26.8kWh லித்தியம் இயான் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் எலெக்ட்ரிக் மோட்டார் 43.3 பிஎச்பி பவரையும், 125 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த கார் சிஎம்எஃப்-ஏ (CMF-A) பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனையாகும் க்விட் காரும் கூட இதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது.

நம்ப முடியாத மிக குறைவான விலை... சீனாவில் லான்ச் ஆனது க்விட் எலெக்ட்ரிக் கார்... அடுத்து இந்தியாவில்

எனினும் எலெக்ட்ரிக் காருக்கு ஏற்ப ஒரு சில முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 271 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என ரெனால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் நடைமுறை பயன்பாட்டில் கொஞ்சம் குறையலாம். என்றாலும் இது சிறப்பான ரேஞ்ச் ஆகவே பார்க்கப்படுகிறது.

நம்ப முடியாத மிக குறைவான விலை... சீனாவில் லான்ச் ஆனது க்விட் எலெக்ட்ரிக் கார்... அடுத்து இந்தியாவில்

ஏசி சார்ஜரை பயன்படுத்தினால், இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 4 மணி நேரம் ஆகும். அதே சமயம் டிசி ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால், வெறும் 30 நிமிடங்களில், 30 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும். இதன் இன்டீரியரில் பல்வேறு புதிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

நம்ப முடியாத மிக குறைவான விலை... சீனாவில் லான்ச் ஆனது க்விட் எலெக்ட்ரிக் கார்... அடுத்து இந்தியாவில்

இதில், 4ஜி வைபை கனெக்டிவிட்டி, ஆன்லைன் மியூசிக் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய 8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் குறிப்பிடத்தக்கது. சீனாவில் இந்த காரின் பேஸ் வேரியண்ட்டின் விலை 61,800 யுவான்கள் மட்டுமே. இந்திய மதிப்பில் கணக்கிட்டால் தோராயமாக வெறும் 6.22 லட்ச ரூபாய்தான். க்விட் எலெக்ட்ரிக் கார் அடுத்ததாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

நம்ப முடியாத மிக குறைவான விலை... சீனாவில் லான்ச் ஆனது க்விட் எலெக்ட்ரிக் கார்... அடுத்து இந்தியாவில்

சீனாவில் மிகவும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போதே இந்த கார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அனேகமாக இந்த கார் வரும் 2022ம் ஆண்டு இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Most Read Articles
English summary
MG Motor To Launch New Electric Car In India For Less Than Rs.10 Lakh. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X