விரைவில் இந்தியாவில் கெத்து காட்ட களமிறங்கும் எம்ஜி இசட்எஸ்.. சிறப்பம்சங்கள் பற்றிய தகவல் வெளியீடு!

விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாக உள்ள எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் இடம்பெற உள்ள சிறப்பம்சங்கள்குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

விரைவில் இந்தியாவில் கெத்து காட்ட களமிறங்கும் எம்ஜி இசட்எஸ் மின்சார கார்... சிறப்பம்சங்கள் பற்றிய தகவல் வெளியீடு..!

இந்திய வாகனச் சந்தையில் அண்மையில் களமிறங்கி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கின்றது எம்ஜி நிறுவனம். இது தற்போது இந்தியாவில் ஒரே ஒரு மாடலைதான் விற்பனை அறிமுகம் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, விரைவில் புதிய வாகனம் ஒன்றையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக அது அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.

விரைவில் இந்தியாவில் கெத்து காட்ட களமிறங்கும் எம்ஜி இசட்எஸ் மின்சார கார்... சிறப்பம்சங்கள் பற்றிய தகவல் வெளியீடு..!

அந்தவகையில், கடந்த வாரம் எம்ஜி இசட்எஸ் என்ற எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் பொது பார்வைக்குக் கொண்டுவரப்பட்டது. அநேகமாக, இந்தியாவிற்கான அடுத்த கார் இந்த காராக இருக்கும் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகிய வண்ணம் இருக்கின்றது.

விரைவில் இந்தியாவில் கெத்து காட்ட களமிறங்கும் எம்ஜி இசட்எஸ் மின்சார கார்... சிறப்பம்சங்கள் பற்றிய தகவல் வெளியீடு..!

இந்த கார், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமான ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக இந்தியாவில் களமிறக்கப்பட உள்ளது. பெரும்பாலும் இந்த கார் வருகின்ற 2020ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விரைவில் இந்தியாவில் கெத்து காட்ட களமிறங்கும் எம்ஜி இசட்எஸ் மின்சார கார்... சிறப்பம்சங்கள் பற்றிய தகவல் வெளியீடு..!

இந்நிலையில், விரைவில் அறிமுகமாக உள்ள எம்ஜி நிறுவனத்தின் இந்தியாவிற்கான இரண்டாம் காரான எலெக்ட்ரிகா காரின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இந்தியாவில் கெத்து காட்ட களமிறங்கும் எம்ஜி இசட்எஸ் மின்சார கார்... சிறப்பம்சங்கள் பற்றிய தகவல் வெளியீடு..!

வெளிப்புறத் தோற்றம்:

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் வெளிப்புறத் தோற்றம் அதன் எரிபொருள் மாடலைப் போன்றே கிராஷோவர் ரகத்தில் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், வீல் ஆர்ச்சுகள், எல்இடி மின் விளக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் அனைத்தும் அப்படியே காப்பி பேஸ்ட் செய்ததைப் போன்று உள்ளது.

ஆனால், காரை சார்ஜ் செய்வதற்கான பாயிண்ட் போன்ற ஒரு சில அம்சங்கள் மட்டும் மாற்றம் கொண்டவையாக காட்சியளிக்கின்றது.

விரைவில் இந்தியாவில் கெத்து காட்ட களமிறங்கும் எம்ஜி இசட்எஸ் மின்சார கார்... சிறப்பம்சங்கள் பற்றிய தகவல் வெளியீடு..!

இத்துடன், கூடுதலாக டயர் பிரஷ்ஷரை அறியும் தொழில்நுட்பம், பின் பக்க வீலில் டிஸ்க் பிரேக், இபிடி அம்சத்துடன் கூடிய ஏபிஎஸ் வசதி, இஎஸ்பி, ஹில் டெஸ்சன்ட் மற்றும் அஸ்சென்ட் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களும் காணப்படுகின்றன.

தொடர்ந்து, எம்ஜி சின்னம் பொருந்திய 17 இன்ச் கொண்ட மெஷினால் வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்களும் சிறப்பான லுக்கை வழங்குகின்றது.

விரைவில் இந்தியாவில் கெத்து காட்ட களமிறங்கும் எம்ஜி இசட்எஸ் மின்சார கார்... சிறப்பம்சங்கள் பற்றிய தகவல் வெளியீடு..!

கேபின் அம்சங்கள்:

இசட்எஸ் காரின் வெளிப்புறத் தோற்றத்தைப் போலவே இன்டீரியரிலும் பல்வேறு அம்சங்கள் காணப்படுகின்றன. அவை பிரிமியம் தரத்திலானவையாக உள்ளன.

விரைவில் இந்தியாவில் கெத்து காட்ட களமிறங்கும் எம்ஜி இசட்எஸ் மின்சார கார்... சிறப்பம்சங்கள் பற்றிய தகவல் வெளியீடு..!

அந்தவகையில், ஸ்டியரிங் வீல் மற்றும் இருக்கை என பலவற்றிற்கு செயற்கையாக உருவாக்கப்பட்ட லெதர் போர்வைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், ஓட்டுநர் இருக்கையை 60:40 என்ற அளவில் மடித்து வைத்துக்கொள்ளும் வசதி, ஓட்டுநருக்கான ஆரம் ரெஸ்ட், மழை பொழிந்தால் தானாக செயல்படும் வைப்பர்கள், பனோரமிக் சன்ரூஃப், ஒரே பட்டனில் ஆன் செய்யும் வசதி, பிஎம் 2.5 ஏர் ஃபில்டர் மற்றும் கிளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

விரைவில் இந்தியாவில் கெத்து காட்ட களமிறங்கும் எம்ஜி இசட்எஸ் மின்சார கார்... சிறப்பம்சங்கள் பற்றிய தகவல் வெளியீடு..!

தொடுதிரை இன்ஃபோடெயிண்மென்ட் சிஸ்டம்:

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் மற்றுமொரு சிறப்பு தொழில்நுட்ப வசதியாக 8-இன்ச் அளவிலான இன்ஃபோடெயிண்மென்ட் சிஸ்டம் காட்சியளிக்கின்றது. இந்த சிஸ்டம் எம்ஜி நிறுவனத்தின் ஐ-ஸ்மார்ட் எனப்படும் கனெக்டட் வசதியைப் பெற்றிருக்கின்றது.

இதுமட்டுமின்றி, இந்த திரை மூலம் கார்குறித்த பல்வேறு தகவல்களையும் நம்மால் அறிந்துக் கொள்ள முடியும். முக்கியமாக பேட்டரி அளவு, ரேஞ்ச் உள்ளிட்ட பல முக்கியமான தகவல்களை இது வழங்கும்.

விரைவில் இந்தியாவில் கெத்து காட்ட களமிறங்கும் எம்ஜி இசட்எஸ் மின்சார கார்... சிறப்பம்சங்கள் பற்றிய தகவல் வெளியீடு..!

பேட்டரி திறன்:

இசட்எஸ் எலெக்ட்ரிக் காரில் தற்போது 44.5kWh திறன் கொண்ட பேட்டரி பேக் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால், விரைவில் ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா எலெக்ட்ரிக் காருக்கு போட்டியளிக்கும் வகையில் அப்கிரேட் செய்யப்பட்ட பேட்டரி பேக்கில் களமிறக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

விரைவில் இந்தியாவில் கெத்து காட்ட களமிறங்கும் எம்ஜி இசட்எஸ் மின்சார கார்... சிறப்பம்சங்கள் பற்றிய தகவல் வெளியீடு..!

ஆனால், 44.5kWh பேட்டரி திறன் கொண்ட இசட்எஸ் மாடலே முதலில் களமிறக்கப்பட உள்ளது. இந்த பேட்டரி ஒரு முழுமையான சார்ஜில் 340 கிமீ தூரம் வரை செல்லும்.

விரைவில் இந்தியாவில் கெத்து காட்ட களமிறங்கும் எம்ஜி இசட்எஸ் மின்சார கார்... சிறப்பம்சங்கள் பற்றிய தகவல் வெளியீடு..!

எஞ்ஜின்:

எம்ஜி எலெக்ட்ரிக் காரில் பொருத்தப்பட்டிருக்கும் எஞ்ஜின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரையும், 353 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்ஜின் 0-100கிமீ என்ற வேகத்தை வெறும் 8.5 செகண்டுகளிலேயே தொட்டுவிடும்.

Most Read Articles
English summary
MG ZS Electric Car Feature Details Revealed. Read In Tamil.
Story first published: Tuesday, December 10, 2019, 23:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X