எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரை வாடகைக்கு எடுத்து சொந்தமாக ஓட்டி பார்ப்பதற்கான வாய்ப்பு!

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியை வாடகைக்கு எடுத்து சொந்தமாக ஓட்டுவதற்கான வாய்ப்பை கார் பிரியர்கள் பெறும் வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது. இதுதொடர்பான கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரை வாடகைக்கு எடுத்து சொந்தமாக ஓட்டி பார்ப்பதற்கான வாய்ப்பு!

இந்தியாவில் ஹெக்டர் எஸ்யூவி மூலமாக குறுகிய காலத்தில் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம். இந்த நிலையில், இரண்டாவது மாடலாக இ-இசட்எஸ் என்ற புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை வரும் டிசம்பர் 5ந் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரை வாடகைக்கு எடுத்து சொந்தமாக ஓட்டி பார்ப்பதற்கான வாய்ப்பு!

இந்த கார் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த காரை வாங்குவதற்கான ஆயத்தத்திலும் வாடிக்கையாளர்கள் பலர் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், இந்த புதிய எலெக்ட்ரிக் கார் செல்ஃப் டிரைவிங் சேவை மூலமாக வாடகைக்கு எடுத்து சொந்தமாக ஓட்டுவதற்கான வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெறுவதற்கான திட்டம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரை வாடகைக்கு எடுத்து சொந்தமாக ஓட்டி பார்ப்பதற்கான வாய்ப்பு!

அதாவது, வாடகை கார் சேவையில் ஈடுபட்டுள்ள லித்தியம் டெக்னாலஜீஸ் நிறுவனம் இந்த காரை தமது வாடிக்கையாளர்கள் சொந்தமாக வாடகைக்கு எடுத்து ஓட்டுவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. நாட்டின் முக்கிய நகரங்களில் இந்த எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரை வாடகைக்கு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரை வாடகைக்கு எடுத்து சொந்தமாக ஓட்டி பார்ப்பதற்கான வாய்ப்பு!

வரும் ஜனவரி மாதம் முதல் டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் மற்றும ஆமதாபாத் ஆகிய நகரங்களில் இந்த புதிய எலெக்ட்ரிக் காரை வாடிக்கையாளர்கள் வாடகைக்கு எடுத்து சொந்தமாக ஓட்டி பார்க்கும் வாய்ப்பை பெற முடியும். படிப்படியாக, சென்னை உள்ளிட்ட நாட்டின் பிற நகரங்களிலும் இந்த கார் செல்ஃப் டிரைவிங் வாடகை கார் திட்டத்தின் கீழ் வர இருக்கிறது.

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரை வாடகைக்கு எடுத்து சொந்தமாக ஓட்டி பார்ப்பதற்கான வாய்ப்பு!

கடந்த சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காருக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இதே பாணியில், இந்த புதிய எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கும் அதிக வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரை வாடகைக்கு எடுத்து சொந்தமாக ஓட்டி பார்ப்பதற்கான வாய்ப்பு!

இந்த புதிய எலெக்ட்ரிக் காரில் 44.5kWh லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த காரின் பேட்டரி மற்றும் மின் மோட்டார் இணைந்து அதிகபட்சமாக 141 பிஎச்பி பவரையும், 353 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரை வாடகைக்கு எடுத்து சொந்தமாக ஓட்டி பார்ப்பதற்கான வாய்ப்பு!

இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும்போது 300 கிமீ தூரம் வரை பயணிப்பதற்கான வாய்ப்பை பெற முடியும். சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாக எஞ்சின் சக்தி முன்சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது.

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரை வாடகைக்கு எடுத்து சொந்தமாக ஓட்டி பார்ப்பதற்கான வாய்ப்பு!

இந்த காருக்கு வழங்கப்பட இருக்கும் ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 40 நிமிடங்களில் இதன் பேட்டரியை 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும். நாட்டின் முக்கிய நகரங்களில் ஃபாஸ்ட் சார்ஜர் நிலையங்களை நிறுவுவதற்கான பணிகளிலும் எம்ஜி மோட்டார்ஸ் ஈடுபட்டுள்ளது. சாதாரண சார்ஜர் மூலமாக பேட்டரியை முழுமையாக சார்ஜ் ஏற்றுவதற்கு 7 மணிநேரம் பிடிக்கும்.

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரை வாடகைக்கு எடுத்து சொந்தமாக ஓட்டி பார்ப்பதற்கான வாய்ப்பு!

புதிய எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் 4,314 மிமீ நீளமும், 1,809 மிமீ அகலமும், 1,620 மிமீ உயரமும், 2,579 மிமீ வீல்பேஸ் நீளமும் பெற்றிருக்கிறது. இந்த காரில் ஏசி சிஸ்டம், பவர் ஸ்டீயரிங் சிஸ்டம், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரியர் வியூ கேமரா, ஏர்பேக்குகள், பிரேக் பிடிக்கும்போது வெளிப்படும் ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றி பேட்டரியில் சேமிக்கு ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் தொழில்நுட்பம் ஆகியவை உள்ளன.

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரை வாடகைக்கு எடுத்து சொந்தமாக ஓட்டி பார்ப்பதற்கான வாய்ப்பு!

இந்த காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கு நேரடி இன்டர்நெட் இணைப்பு வசதியும் அளிக்கும் சிம் கார்டு கொடுக்கப்பட இருப்பதாக தெரிகிறது. இதனை ஸ்மார்ட்ஃபோன் மூலமாக இணைத்துக் கொண்டு பல்வேறு தகவல்களையும், கட்டுப்படுத்தும் வசதிகளையும் பெற முடியும். ரூ.22 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
MG eZS electric car will be available for self driving plans through Lithium Technologies taxi company from January 2020.
Story first published: Tuesday, November 19, 2019, 15:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X