எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் முதல் டீசர் வெளியீடு!

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் முதல் டீசர் இந்தியாவில் வெளியிடப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் முதல் டீசர் வெளியீடு!

எம்ஜி நிறுவனம் முதலாவதாக அறிமுகப்படுத்திய ஹெக்டர் எஸ்யூவி பெரிய அளவிலான வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த காருக்கான வரவேற்பு கொடுத்த உற்சாகத்தையடுத்து, இரண்டாவது கார் மாடலை அறிமுகம் செய்வதில் அந்நிறுவனம் தீவிரமாக இறங்கியுள்ளது.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் முதல் டீசர் வெளியீடு!

அதுவும் எஸ்யூவி ரக மாடல் என்பதுடன், இரண்டாவது காரே மின்சார மாடலாக அந்நிறுவனம் களமிறக்க உள்ளது. வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள இ-இசட்எஸ் என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் மாடலை இந்தியாவில் களமிறக்க உள்ளது.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் முதல் டீசர் வெளியீடு!

இந்த நிலையில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் முதல் டீசரை வெளியிட்டு இருக்கிறது எம்ஜி மோட்டார் நிறுவனம். இந்த எஸ்யூவியின் அறிமுகம் நெருங்கி வருவது இந்த டீசர் வெளியீடு மூலமாக உணர்ந்து கொள்ள முடிகிறது.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் முதல் டீசர் வெளியீடு!

எம்ஜி இ-இசட்எஸ் எஸ்யூவி கார் நடைமுறை பயன்பாட்டுக்கு மிகச் சிறந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, பேட்டரியை முழுமையாக சார்ஜ் ஏற்றினால், 262 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். ஒரு வாரத்திற்கு அலுவலகம் சென்று வருவதற்கான வாய்ப்பை வழங்கும்.

சார்ஜ் ஏற்றும் கட்டமைப்பு வலுப்படும்போது நீண்ட தூர பயணங்களுக்கும் சிறந்ததாக மாறும். இந்த காரில் 44.5 kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை ஏசி சார்ஜர் மூலமாக சார்ஜ் ஏற்றுவதற்கு 7 மணிநேரமும், டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 40 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்ற முடியும்.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் முதல் டீசர் வெளியீடு!

இந்த காரில் பயன்படுத்தப்படும் மின் மோட்டார் அதிகபட்சமாக 143 எச்பி பவரையும், 353 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது. இது ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காருக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் முதல் டீசர் வெளியீடு!

புதிய இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு கொண்டு வரும் நோக்கில், டெல்லி உள்ளடக்கிய வடமத்திய பிராந்திய பகுதி, மும்பை, ஹைதராபாத், பெங்களூர் மற்றும் ஆமதாபாத் ஆகிய நகரங்களில் சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் அமைக்க எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ளது.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் முதல் டீசர் வெளியீடு!

புதிய எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் ரூ.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைக்கு ஹூண்டாய் கோனா காருக்கு இது மிக நேரடி போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
British car maker, MG Motor has released first teaser of its e-ES EV in India.
Story first published: Tuesday, September 17, 2019, 15:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X