இலவச சார்ஜிங்... இசட்எஸ் எலக்ட்ரிக் காருக்கு அதிரடியான சலுகையை அறிவித்த எம்ஜி மோட்டார்...

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் இசட்எஸ் இவி எஸ்யூவி கார் அடுத்த மாதம் 5ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது. இந்நிலையில் இந்த இசட்எஸ் இவி கார்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் விரைவான சார்ஜிங்கை இலவசமாக வழங்கும் திட்டத்தை எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இலவச சார்ஜிங்... இசட்எஸ் எலக்ட்ரிக் காருக்கு அதிரடியான சலுகையை அறிவித்த எம்ஜி மோட்டார்...

இந்த சலுகையுடன் இந்தியாவில், டெல்லி-என்சிஆர், மும்பை, ஹைதராபாத், பெங்களூர் மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட 5 நகரங்களில் புதிய விரைவாக சார்ஜ் செய்யும் நிலையங்களை அமைக்கவுள்ளதாகவும் எம்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.

இலவச சார்ஜிங்... இசட்எஸ் எலக்ட்ரிக் காருக்கு அதிரடியான சலுகையை அறிவித்த எம்ஜி மோட்டார்...

இதற்காக இந்நிறுவனம் பல லோக்கல் மற்றும் இண்டர்நேஷ்னல் ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் வர்த்தக தொடர்பை ஏற்படுத்தி கொண்டுள்ளது. விரைவான மற்றும் வீட்டிலேயே எளிதாக சார்ஜிங்கை இசட்எஸ் இவி காரை வாங்கியோர் செய்வதற்காக ஃபார்டும், டெல்டா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இசார்ஜ்பேஸ் போன்ற நிறுவனங்களுடன் எம்ஜி நிறுவனம் ஆலோசித்து வருகிறது. இதனால் இந்த காரை வாங்குவோருக்கு அதிகப்படியான சார்ஜிங் தேர்வுகளை எம்ஜி நிறுவனம் கட்டாயம் வழங்கும்.

இலவச சார்ஜிங்... இசட்எஸ் எலக்ட்ரிக் காருக்கு அதிரடியான சலுகையை அறிவித்த எம்ஜி மோட்டார்...

மேலும் இந்த இசட்எஸ் இவி கார் இந்தியாவில் அறிமுகமாகும் போது இந்த காரில் சுத்தமான காற்றை வழங்குவதற்காக பிஎம் 2.5 காற்று சுத்திகரிப்பான் பொருத்தப்பட்டிருக்கும் எனவும் எம்ஜி நிறுவனம் உறுதியளித்துள்ளது. இந்த தொழிற்நுட்பத்துடன் எட்டு இன்ச்சில் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் அமைப்பு, இந்த இன்போடெயின்மெண்ட் அமைப்பை கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ட்ரைவ் மோட்-ஐ தேர்ந்தெடுக்கும் வசதி உள்ளிட்டவையும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன.

இலவச சார்ஜிங்... இசட்எஸ் எலக்ட்ரிக் காருக்கு அதிரடியான சலுகையை அறிவித்த எம்ஜி மோட்டார்...

க்ளைமேட் கண்ட்ரோல் ஸ்டாக், வாகனத்தை இயக்குவதற்கும் நிறுத்துவதற்கும் பொத்தான், ஓட்டுனருக்கு ஏற்றாற்போல் சாய்வான ஸ்டேரிங் வீல் போன்றவையும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த இசட்எஸ் இவி எஸ்யூவி காரில் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்ட 45.6kWh பேட்டரி அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி அதிகப்பட்சமாக 148 பிஎச்பி பவரையும் 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இலவச சார்ஜிங்... இசட்எஸ் எலக்ட்ரிக் காருக்கு அதிரடியான சலுகையை அறிவித்த எம்ஜி மோட்டார்...

வெளிநாட்டு சந்தைகளில் ஏற்கனவே அறிமுகமாகிவிட்ட இந்த கார் சிங்கிள் சார்ஜில் 428 கிலோமீட்டர் செல்லும் திறனுடையது. விரைவான சார்ஜர் இணைத்து சார்ஜ் ஏற்றினால் 0 விலிருந்து 80 சதவீத சார்ஜிங் வெறும் 30 நிமிடங்களில் நிறைவடைந்துவிடும். வெளிநாட்டு சந்தையில் அறிமுகமான காரில் உள்ள இத்தகைய அம்சங்கள் எல்லாம் இந்திய அறிமுக காரிலும் மாற்றமின்றி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலவச சார்ஜிங்... இசட்எஸ் எலக்ட்ரிக் காருக்கு அதிரடியான சலுகையை அறிவித்த எம்ஜி மோட்டார்...

வெளிப்புறங்களில் அம்சங்களும் இண்டர்நேஷ்னல் கார்களில் கொடுக்கப்பட்டப்படியே தான் இருக்கும். அதாவது க்ரில், பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய எல்இடி விளக்குகளுடன் உள்ள ப்ரோஜக்டர் ஹெட்லைட்கள், காரின் உட்புறத்தில் உள்ள பின்புறத்தை பார்க்கும் கண்ணாடி, காரின் மேற்புறத்தில் இரயில் தண்டவாளம் போன்றுள்ள அமைப்பு, எல்இடி டெயில் லேம்ஸ் போன்றவை அனைத்தும் படத்தில் காட்டப்பட்டுள்ளப்படியே தான் இருக்கும்.

இலவச சார்ஜிங்... இசட்எஸ் எலக்ட்ரிக் காருக்கு அதிரடியான சலுகையை அறிவித்த எம்ஜி மோட்டார்...

எம்ஜி நிறுவனத்தின் ஐ-ஸ்மார்ட் ஏஐ தொழிற்நுட்பத்தையும் இந்த காரில் கொடுத்துள்ளது. மேலும் இண்டர்நேஷ்னல் காரில் உள்ள மற்ற சிறப்பம்சங்களான பின்பக்க பார்கிங் கேமிரா, ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணக்கமாகக்கூடிய வாகனங்களுக்கு இடையே ஊடுருவ உதவிப்புரியும் அமைப்பு மற்றும் ஆறு நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன்புற இருக்கைகள் போன்றவற்றையும் இந்திய இசட்எஸ் இவி கார் பெற்றுள்ளது.

இலவச சார்ஜிங்... இசட்எஸ் எலக்ட்ரிக் காருக்கு அதிரடியான சலுகையை அறிவித்த எம்ஜி மோட்டார்...

ஹெக்டர் எஸ்யூவியுடன் இந்திய மார்கெட்டில் காலடி எடுத்து வைத்த எம்ஜி மோட்டார் நிறுவனம், அந்த கார் மிக பெரியளவில் வெற்றி பெற்றுள்ளதால், தனது அடுத்த தயாரிப்பு மாடலாக இசட்எஸ் இவி என்ற எலக்ட்ரிக் காரை களமிறக்க உள்ளது. ஏற்கனவே ஹெக்டர் மாடல் இந்திய வாடிக்கையாளர்களிடையே நன்கு எம்ஜியின் லோகோவை பிரபலப்படுத்திவிட்டது. இது போதாமல் எம்ஜி நிறுவனம் இலவச சார்ஜிங் திட்டத்தை வேறு தற்போது அறிவித்துள்ளதால், இந்த எலக்ட்ரிக் கார் இந்தியாவில் எதிர்பார்த்ததை விட கூடுதலான யூனிட்கள் விற்பனையாகக்கூடும்.

Most Read Articles
English summary
MG ZS EV Buyers Are Offered Free Fast Charging For A Limited Period In India
Story first published: Wednesday, November 13, 2019, 15:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X