அப்படிபோடு... புதிய எம்ஜி இசட்எஸ் எஸ்யூவி பெட்ரோல் மாடலிலும் வருகிறது

எம்ஜி இசட்எஸ் கார் இந்தியாவில் பெட்ரோல் மாடலிலும் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

அப்படிபோடு... புதிய எம்ஜி இசட்எஸ் எஸ்யூவி பெட்ரோல் மாடலிலும் வருகிறது

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் ஹெக்டர் எஸ்யூவி மூலமாக முக்கிய இடத்தை பிடித்துள்ளது. முதல் மாடலே சூப்பர் ஹிட்டாக அமைந்திருக்கும் நிலையில், அடுத்த கார் மாடலே, பேட்டரியில் இயங்கும் இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி என்று எம்ஜி தெரிவித்தது.

அப்படிபோடு... புதிய எம்ஜி இசட்எஸ் எஸ்யூவி பெட்ரோல் மாடலிலும் வருகிறது

இந்த புதிய இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த நிலையில், எம்ஜி இசட்எஸ் எஸ்யூவி மாடலானது எலெக்ட்ரிக் மாடலாக மட்டுமல்லாமல், பெட்ரோல் எஞ்சின் மற்றும் பெட்ரோல் ஹைப்ரிட் மாடலிலும் வர இருப்பது தெரிய வந்துள்ளது.

அப்படிபோடு... புதிய எம்ஜி இசட்எஸ் எஸ்யூவி பெட்ரோல் மாடலிலும் வருகிறது

இதுதொடர்பான வெளியான ஆவணங்களில் புதிய எம்ஜி இசட்எஸ் எஸ்யூவி காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 106 எச்பி பவரையும் வெளிப்படுத்தும்.

அப்படிபோடு... புதிய எம்ஜி இசட்எஸ் எஸ்யூவி பெட்ரோல் மாடலிலும் வருகிறது

அதேநேரத்தில், ஹைப்ரிட் மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின்மோட்டாருடன் இணைந்து செயல்படும் என்று தெரிய வந்துள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 111 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.

அப்படிபோடு... புதிய எம்ஜி இசட்எஸ் எஸ்யூவி பெட்ரோல் மாடலிலும் வருகிறது

மேலும், வெளிநாடுகளில் அண்மையில் புதுப்பொலிவுடன் வந்த எம்ஜி இசட்எஸ் எஸ்யூவி இந்தியாவுக்கு வரவில்லை என்றும், அதற்கு முன்னதாக விற்பனையில் இருந்த மாடல்தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

Most Read: பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன?

அப்படிபோடு... புதிய எம்ஜி இசட்எஸ் எஸ்யூவி பெட்ரோல் மாடலிலும் வருகிறது

இந்த நிலையில், ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காருக்கு நேரடி போட்டியாக பார்க்கப்படும் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரில் 44.5kWh பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியானது முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் 262 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். இதன் மின் மோட்டார் 150 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும்.

Most Read: வித்தியாசமான காரை ரொம்ப ஆசைப்பட்டு வாங்கிய நடிகை... என்ன கார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

அப்படிபோடு... புதிய எம்ஜி இசட்எஸ் எஸ்யூவி பெட்ரோல் மாடலிலும் வருகிறது

அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய எம்ஜி இசட்எஸ் எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்யூவி பிரியர்களுக்கு எம்ஜி நிறுவனத்திடமிருந்து அடுத்த மகிழ்ச்சியான செய்தியாக இது அமைந்துள்ளது.

Source: Autocarindia

Most Read Articles

English summary
According to report, MG is planning to launch ZS petrol and hybrid models in India along with electric version.
Story first published: Wednesday, October 23, 2019, 10:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X