5 எஸ்யூவி கார்களை இந்தியாவில் களமிறக்கும் எம்ஜி... 2021 வரை ஒரு ஹேட்ச்பேக், செடான் கூட கிடையாது...

எம்ஜி மோட்டார் நிறுவனம் 5 எஸ்யூவி ரக கார்களை இந்தியாவில் களமிறக்கவுள்ளது. ஆனால் வரும் 2020ம் ஆண்டு இறுதி வரை ஒரு ஹேட்ச்பேக் அல்லது செடான் ரக கார் கூட இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

5 எஸ்யூவி கார்களை இந்தியாவில் களமிறக்கும் எம்ஜி... 2021 வரை ஒரு ஹேட்ச்பேக், செடான் கூட கிடையாது...

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் தனது கார் விற்பனையை வெகு விரைவில் தொடங்கவுள்ளது. இந்தியாவில் களமிறங்கவுள்ள எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் முதல் கார் ஹெக்டர் (MG Hector). எம்ஜி ஹெக்டர் கார் வரும் மே மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எஸ்யூவி ரக கார் ஆகும்.

5 எஸ்யூவி கார்களை இந்தியாவில் களமிறக்கும் எம்ஜி... 2021 வரை ஒரு ஹேட்ச்பேக், செடான் கூட கிடையாது...

எம்ஜி ஹெக்டரை தொடர்ந்து வரிசையாக 4 எஸ்யூவி ரக கார்களை எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த 4 எஸ்யூவி ரக கார்களும் 6 மாத இடைவெளியில் ஒவ்வொன்றாக களத்தில் இறக்கப்படவுள்ளன. அதாவது 6 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு புதிய எஸ்யூவி வகை காரை எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

5 எஸ்யூவி கார்களை இந்தியாவில் களமிறக்கும் எம்ஜி... 2021 வரை ஒரு ஹேட்ச்பேக், செடான் கூட கிடையாது...

ஆக மொத்தம் வரும் 2020ம் ஆண்டு இறுதிக்குள், 5 எஸ்யூவி ரக கார்களை இந்திய மார்க்கெட்டில் களமிறக்க எம்ஜி மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் முதலாவதாக வரவுள்ள கார்தான் ஹெக்டர் எஸ்யூவி. இது 5 சீட்டர் மாடல் ஆகும். இதன்பின் இஇஸட்எஸ் எனப்படும் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை எம்ஜி மோட்டார் நிறுவனம் களமிறக்குகிறது. அதனை தொடர்ந்து ஹெக்டர் காரின் 7 சீட்டர் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. எஞ்சிய 2 எஸ்யூவி கார்களின் விபரம் தற்போதைக்கு வெளியாகவில்லை.

5 எஸ்யூவி கார்களை இந்தியாவில் களமிறக்கும் எம்ஜி... 2021 வரை ஒரு ஹேட்ச்பேக், செடான் கூட கிடையாது...

இந்திய மார்க்கெட்டிற்கான எம்ஜி நிறுவனத்தின் முதல் 5 கார்களும் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தவையாகவே உள்ளன. இதில், ஒரு ஹேட்ச்பேக் அல்லது செடான் ரக கார் கூட இடம்பெறவில்லை. ஆனால் 2020ம் ஆண்டின் இறுதியில் அல்லது 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் இது தொடர்பாக எம்ஜி மோட்டார் நிறுவனம் முடிவு செய்யும் என கூறப்படுகிறது.

5 எஸ்யூவி கார்களை இந்தியாவில் களமிறக்கும் எம்ஜி... 2021 வரை ஒரு ஹேட்ச்பேக், செடான் கூட கிடையாது...

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் சர்வதேச லைன் அப்பானது எம்ஜி3 ஹேட்ச்பேக் (MG3 hatchback) மற்றும் எம்ஜி6 செடான் (MG6 sedan) ஆகிய கார்களை உள்ளடக்கியதாக உள்ளது. ஆனால் இவ்விரு கார்களும் வரும் 2020ம் ஆண்டின் இறுதி வரை இந்தியாவிற்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. இதுதொடர்பாக கார் தேக்கோ தளம் செய்தி வெளியிட்டுள்ளது. உறுதியான தகவல் வெளியாகாவிட்டாலும், 2020ம் ஆண்டின் இறுதிக்கு பிறகு இவ்விரு கார்களும் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

5 எஸ்யூவி கார்களை இந்தியாவில் களமிறக்கும் எம்ஜி... 2021 வரை ஒரு ஹேட்ச்பேக், செடான் கூட கிடையாது...

தற்போதைய எம்ஜி3 பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் நீளம் 4,055 மிமீ. ஆனால் இந்த கார் ஒரு வேளை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டால் இதன் ஒட்டுமொத்த நீளம் 4 மீட்டருக்குள் சுருக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் லான்ச் செய்யப்பட்டால், ஹூண்டாய் எலைட் ஐ20, மாருதி பலினோ, ஹோண்டா ஜாஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலோ ஆகிய கார்களுடன் எம்ஜி3 பிரீமியம் ஹேட்ச்பேக் போட்டியிடும். இங்கிலாந்து மார்க்கெட்டிற்கான எம்ஜி 3 பிரீமியம் ஹேட்ச்பேக் காரில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 106 பிஎஸ் பவர் மற்றும் 137 என்எம் டார்க் திறனை வழங்க கூடியது.

5 எஸ்யூவி கார்களை இந்தியாவில் களமிறக்கும் எம்ஜி... 2021 வரை ஒரு ஹேட்ச்பேக், செடான் கூட கிடையாது...

அதே நேரத்தில் எம்ஜி6 மிட் சைஸ் செடான் காரானது, சீன மார்க்கெட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், ஹோண்டா சிவிக், ஸ்கோடா ஆக்டேவியா, டொயோட்டா கரொல்லா அல்டிஸ், ஹூண்டாய் எலான்ட்ரா உள்ளிட்ட கார்களுடன் எம்ஜி6 மிட் சைஸ் செடான் போட்டி போடும். எம்ஜி6 மிட் சைஸ் செடான் காரில், 1.5 லிட்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 169 பிஎஸ் பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுள்ளது.

5 எஸ்யூவி கார்களை இந்தியாவில் களமிறக்கும் எம்ஜி... 2021 வரை ஒரு ஹேட்ச்பேக், செடான் கூட கிடையாது...

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் அறிமுகத்தின்போது, எம்ஜி3 ஹேட்ச்பேக் மற்றும் எம்ஜி6 செடான் ஆகிய இரண்டு கார்களும் இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டன. ஆனால் இவ்விரு கார்களையும் 2020ம் ஆண்டின் இறுதி வரை எதிர்பார்க்க முடியாது. எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவின் பிரீமியம் எஸ்யூவி மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்த முயல்வதையே இது காட்டுகிறது.

Most Read Articles
English summary
MG3 Hatchback, MG6 Sedan Not Coming To India Until 2021. Read in Tamil
Story first published: Thursday, April 4, 2019, 14:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X