நிஜ வாழ்க்கை பாகுபலி இதுதான்... போயிங் விமானத்தை கயிறு கட்டி இழுத்து சென்ற கூப்பர் கார்: வீடியோ...!

மினி கூப்பர் பிராண்டின் முதல் எலக்ட்ரிக் கார்குறித்த வீடியோ டீசர் ஒன்று வைரலாகி வருகின்றது. இதில், எலக்ட்ரிக் கார் தன்னைவிட பல மடங்கு அதிக எடைக்கொண்ட போயிங் ரக விமானத்தை இழுத்துச் செல்வதுபோன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

நிஜ வாழ்க்கை பாகுபலி இதுதான்... போயிங் விமானத்தை கயிறு கட்டி இழுத்து சென்ற கூப்பர் எலக்ட்ரிக் கார்: வீடியோ...!

மினி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் காரான கூப்பர் எஸ்இ குறித்த மிரட்டலான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில், மினி ஹேட்ச்பேக் எலக்ட்ரிக் கார், மிகப் பெரிய ராட்சதனைப் போன்று காட்சியளிக்கும் போயிங் 777எஃப் விமானத்தை இழுத்துச் செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

நிஜ வாழ்க்கை பாகுபலி இதுதான்... போயிங் விமானத்தை கயிறு கட்டி இழுத்து சென்ற கூப்பர் எலக்ட்ரிக் கார்: வீடியோ...!

இந்த 777எஃப் போயிங் விமானம், 145 டன் எடைக் கொண்டதாகும். இதனை சிறிய ரகத்தில் காட்சியளிக்கும், அதாவது போயிங் விமானத்துடன் ஒப்பிட்டு பார்த்தால், எறும்பைப் போன்று காட்சியளிக்கும் மினி கூப்பர் எஸ்இ எலக்ட்ரிக் கார், எளிமையாக இழுத்துச் செல்கின்றது. இந்த காட்சியைப் பார்க்கும்போது, மிகப்பெரிய மலையை மிகச் சிறிய உயிரினம் இழுத்துச் செல்வதைப் போன்று இருக்கின்றது.

நிஜ வாழ்க்கை பாகுபலி இதுதான்... போயிங் விமானத்தை கயிறு கட்டி இழுத்து சென்ற கூப்பர் எலக்ட்ரிக் கார்: வீடியோ...!

இந்த டீசர் வீடியோவானது, எலக்ட்ரிக் காரின் டார்க் திறனை வெளிக்கொணரும் வகையில், அந்த நிறுவனம் எடுத்துள்ளது. அதற்கேற்ப வகையில், மினி கூப்பர் எஸ்இ எலக்ட்ரிக் காரில் இ-டிரைவ் மின் மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மின் மோட்டார்தான் பிஎம்டபிள்யூ ஐ3எஸ் மாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நிஜ வாழ்க்கை பாகுபலி இதுதான்... போயிங் விமானத்தை கயிறு கட்டி இழுத்து சென்ற கூப்பர் எலக்ட்ரிக் கார்: வீடியோ...!

இந்த இ-டிரைவ் மின் மோட்டார் 184 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைப் பெற்றதாக இருக்கின்றது. 250 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும்போது, பெரும்பாலான வாகனங்கள் அதிக சப்தத்தை எழுப்பும். ஆனால், மினி கூப்பர் எஸ்இ மாடலில் பொருத்தப்பட இருக்கும், இந்த மின் மோட்டாரில் லேசான சப்தமே எழும்புகிறது.

நிஜ வாழ்க்கை பாகுபலி இதுதான்... போயிங் விமானத்தை கயிறு கட்டி இழுத்து சென்ற கூப்பர் எலக்ட்ரிக் கார்: வீடியோ...!

இந்த ஐ3எஸ் மாடலானது, 0த்தில் இருந்து 96 கிமீ வேகத்தை வெறும் 6.8 செகண்டுகளிலேயே தொட்டுவிடும் திறன் வாய்ந்ததாக இருக்கின்றது. அதேசமயம், இதன் பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்தால் 246 கிமீ தூரம் வரைச் செல்லலாம். இதற்காக ஐ3எஸ் மாடலில் 42kWh திறன் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இது காருக்கு தேவையான அதீத சக்தியை வழங்கும்.

நிஜ வாழ்க்கை பாகுபலி இதுதான்... போயிங் விமானத்தை கயிறு கட்டி இழுத்து சென்ற கூப்பர் எலக்ட்ரிக் கார்: வீடியோ...!

அதேபோன்று, இந்த பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜிங் முறையில் சார்ஜ் செய்தால் வெறும் 40 நிமிடங்களிலேயே 80 சதவீதம் சார்ஜை அடைந்துவிடும். இதற்கேற்ப வகையிலான, பேட்டரிதான் கூப்பர் லைன் அப்பில் உருவாகி வரும் முதல் எலக்ட்ரிக் காருக்கும் பொருத்தப்பட உள்ளது.

நிஜ வாழ்க்கை பாகுபலி இதுதான்... போயிங் விமானத்தை கயிறு கட்டி இழுத்து சென்ற கூப்பர் எலக்ட்ரிக் கார்: வீடியோ...!

அந்தவகையில், கூப்பர் எஸ்இ எலக்ட்ரிக் காரில் 33.8kWh திறன் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 180 கிமீ தூரம் வரை செல்ல முடியும்.

நிஜ வாழ்க்கை பாகுபலி இதுதான்... போயிங் விமானத்தை கயிறு கட்டி இழுத்து சென்ற கூப்பர் எலக்ட்ரிக் கார்: வீடியோ...!

கூப்பர் எஸ்இ எலக்ட்ரிக் காரை, அந்த நிறுவனம் 3-டூர் கூப்பர் எஸ் மாடலைத் தழுவி உருவாக்கியுள்ளது. இதனை நிரூபிக்கும்விதமாக, காரின் நிழல் தன்மை மற்றும் வடிவமைப்பு ஒரே மாதிரியாக காட்சியளிக்கிறது.

அதேசமயம், இந்த எலக்ட்ரிக் தனித்துவமான அம்சங்களையும் பெற்றிருக்கின்றது. அவ்வாறு, கூப்பர் எஸ்இ எலக்ட்ரிக் காரின் முன்பக்க க்ரில் அமைப்பில் 'இ' பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. இது எலக்ட்ரிக் கார் என்பதற்கான அடையாளமாக இருக்கின்றது.

இத்துடன், காரைச் சுற்றி மஞ்சள் நிறத்திலான இன்செர்ட்டுகள் மற்றும் புத்தம் புதிய டைப்பிலான அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவையனைத்தும், சாதாரண மினி கூப்பருக்கும், எலக்ட்ரிக் கூப்பருக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கி காட்டுகிறது. அதேசமயம், இந்த காரின் இன்டீரியர் டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், இதில் சிறியளவிலான மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிஜ வாழ்க்கை பாகுபலி இதுதான்... போயிங் விமானத்தை கயிறு கட்டி இழுத்து சென்ற கூப்பர் எலக்ட்ரிக் கார்: வீடியோ...!

மினி கூப்பரின் முதல் எலக்ட்ரிக் மாடலாக இருக்கும் இந்த எஸ்இ மாடல் நடப்பாண்டின் இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் இந்த புதிய சக்தி வாய்ந்த எலக்ட்ரிக் கார் சந்தையில் களமிறங்கும் பட்சத்தில் ஃபோக்ஸ்வேகனின் இ-கோல்ஃப் எலக்ட்ரிக் காருக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #மினி #mini
English summary
2020 Mini Cooper SE Electric Car Teased With Plane Tow. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X