ஷாங்காய் வாகன கண்காட்சியை கிறங்கடிக்க காத்திருக்கும் மிட்சுபிஷி கான்செப்ட் கார்...!

கார் தயாரிப்பு நிறுவனமான மிட்சுபிஷி நிறுவனம், இன்று ஷாங்காயில் தொடங்க இருக்கும் சர்வதேச வாகன கண்காட்சியில் புதிய மாடல் கான்செப்ட் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷாங்காய் வாகன கண்காட்சியை கிறங்கடிக்க காத்திருக்கும் மிட்சுபிஷி கான்செப்ட் கார்...!

தென் சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் இன்று (ஏப்ரல் 16) முதல் வருகின்ற 25ம் தேதி வரை சர்வதேச வாகன கண்காட்சி நடைபெற இருக்கிறது. இந்த வாகன கண்காட்சியில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனைக்கு தயாராக இருக்கும் வாகனங்கள் மற்றும் கான்செப்ட் மாடல்களை சந்தைக்கு அறிமுகம் செய்ய உள்ளன.

ஷாங்காய் வாகன கண்காட்சியை கிறங்கடிக்க காத்திருக்கும் மிட்சுபிஷி கான்செப்ட் கார்...!

அந்த வகையில், மிட்சுபிஷி கார் தயாரிப்பு நிறுவனம், அதன் இ-ஒய்ஐ மற்றும் பிஎச்இவி எஸ்யூவி ஆகிய இரண்டு கான்செப்ட் மாடல்களை இன்று தொடங்கும் கண்காட்சியில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஷாங்காய் வாகன கண்காட்சியை கிறங்கடிக்க காத்திருக்கும் மிட்சுபிஷி கான்செப்ட் கார்...!

இந்த இ-ஒய்ஐ கான்செப்ட் காரானது, ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட என்கெர்பெர்க் டூரர் கான்செப்ட் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இது எலக்ட்ரிக் காராக தயாராகி வருகிறது.

ஷாங்காய் வாகன கண்காட்சியை கிறங்கடிக்க காத்திருக்கும் மிட்சுபிஷி கான்செப்ட் கார்...!

இத்துடன் பிஎச்இவி எஸ்யூவி மாடலானது பெட்ரோல் வேரியண்டில் அறிமுகமாக இருக்கிறது. இந்த இரண்டு கான்செப்ட் மாடல்களின் உற்பத்தி மாடல்களும் வருகின்ற நிதியாண்டிற்குள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாங்காய் வாகன கண்காட்சியை கிறங்கடிக்க காத்திருக்கும் மிட்சுபிஷி கான்செப்ட் கார்...!

இந்த புதிய கான்செப்ட் மாடல்களின் முகப்பு பகுதியானது, புத்தம் புதிய டைனமிக் சீல்ட் டிசைனைக் கொண்டு அழகுப்படுத்தப்பட்டுள்ளது. இது காரின் தோற்றத்திற்கு கட்டுமஸ்தான தசை போன்ற அமைப்பை வழங்குகிறது. இத்துடன், டுயூவல் எல்இடி லேம்ப்கள் காரின் மேற்கூரை மற்றும் பேனட்களில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், காரின் முன் பக்கத்தில் புதிய வடிவிலான கருப்பு நிற கிரில் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.

ஷாங்காய் வாகன கண்காட்சியை கிறங்கடிக்க காத்திருக்கும் மிட்சுபிஷி கான்செப்ட் கார்...!

இந்த கார் அனைத்து சாலைகளிலும் செல்லும் வகையில் அதிகரிக்கப்பட்ட கிரவுண்ட் கிளியரன்ஸுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், உடற் கூடானது சில்வர் நிறம் கொண்ட ஸ்கிட் பிளேட்டுகளால் போர்த்தப்பட்டுள்ளது. இத்துடன் இந்த கான்செப்ட் காருக்கு பெரிய அளவிலான அலாய் வீல்கள் பொருத்தப்பட உள்ளன.

ஷாங்காய் வாகன கண்காட்சியை கிறங்கடிக்க காத்திருக்கும் மிட்சுபிஷி கான்செப்ட் கார்...!

காரின் பில்லர் மற்றும் ரூஃப்-ற்கு கருப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, காரின் இரண்டு பக்கங்களும் சைட் மிர்ரருக்கு பதிலாக கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை காருக்கு உள்ளே பொருத்தப்பட்டுள்ள டிஸ்பிளே மூலம் அருகில் வரும் வாகனங்கள் குறித்த தகவலைக் கொடுக்கும். காரின் பின் பகுதியில் எல்இடி டெயில் லைட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரின் அதிகபட்ச பாகங்கள் ஏற்கனவே தயாரிப்பில் இருக்கும் மற்ற காரின் பாகங்களைப் பேன்றே காட்சியளிக்கிறது.

ஷாங்காய் வாகன கண்காட்சியை கிறங்கடிக்க காத்திருக்கும் மிட்சுபிஷி கான்செப்ட் கார்...!

பிஎச்இவி எஸ்யூவி கான்செப்ட் காரில், இந்த மாடலுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 2.4 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட உள்ளது. இந்த எஞ்ஜின் எலக்ட்ரிக் பவரை தயாரிக்கவும் பயன்படும். இந்த புதிய எஞ்ஜினின் தெர்மால் எஃபிஷியன்ஸி மிகவும் அற்புதமாக இருக்கிறது. அந்த வகையில் மிகவும் அதிகமான அருமையான எஃபிஷியன்ஸியை இது வெளிப்படுத்தும்.

ஷாங்காய் வாகன கண்காட்சியை கிறங்கடிக்க காத்திருக்கும் மிட்சுபிஷி கான்செப்ட் கார்...!

எலக்ட்ரிக் கான்செப்ட் காரானது முழுமையாக சார்ஜ் அடைந்த பின்னர் காருக்குள் நீள நிற மின் விளக்கு எரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் காருக்குள் இரண்டு 12.3 இன்ச் கொண்ட ஸ்கிரீன்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஷாங்காய் வாகன கண்காட்சியை கிறங்கடிக்க காத்திருக்கும் மிட்சுபிஷி கான்செப்ட் கார்...!

அதில், ஒன்று இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டராகவும், மற்றொன்று இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமாகவும் பயன்படும். இந்த எலக்ட்ரிக் மாடல் எஸ்யூவி காரை ஒரு முழுமையாக சார்ஜ் செய்தால் 700கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மேலும், இந்த கார்களில் அனைத்து வீலுக்கும் சக்தியை கடக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Source: gaadiwaadi

Most Read Articles
English summary
Mitsubishi e-Yi Concept SUV Unveiled Ahead Of Shanghai. Read In Tamil.
Story first published: Tuesday, April 16, 2019, 11:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X