2020 மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் தாய்லாந்து கண்காட்சியில் அறிமுகம்...

மிட்சுபிஷி நிறுவனம் கடந்த ஜூலை மாதம் பஜேரோ ஸ்போர்ட் மாடலை உலகளாவிய சந்தையில் இருந்தது. இந்நிலையில் இந்த எஸ்யூவி தற்போது தாய்லாந்தில் நடைபெற்று வரும் 2019ஆம் ஆண்டிற்கான தாய் மோட்டார் கண்காட்சியில் சிறிது ஃபேஸ்லிஃப்ட் வெர்சனுக்கு மாற்றப்பட்டு முதன்முதலாக பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

2020 மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் தாய்லாந்து கண்காட்சியில் அறிமுகம்...

2015ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பஜேரோ மாடலின் இந்த ஸ்போர்ட் வெர்சன் மூன்றாவது தலைமுறை காராகும். 2019 தாய் மோட்டார் கண்காட்சியில் மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்த கார், மிட்சுபிஷியின் 'டைனாமிக் ஷீல்ட்' டிசைனில் முன்புறத்தை பெற்றுள்ளது.

2020 மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் தாய்லாந்து கண்காட்சியில் அறிமுகம்...

பிளவுப்பட்ட ஹெட்லைட்கள் மற்றும் க்ரில்லிற்கு மேற்பகுதியில் 'பஜேரோ ஸ்போர்ட்' என்ற எழுத்து போன்றவை இந்த புதிய பஜேரோ ஸ்போர்ட் மாடலிலும் தொடர்ந்துள்ளது. அதேபோல் முன்புற ஹெட்லேம்புகளுக்கு கீழே C-வடிவிலான க்ரோம் அமைப்பும், காரின் பக்கவாட்டு அமைப்பும் தற்போதைய பஜேரோ ஸ்போர்ட் மாடலில் இருந்து அப்படியே தான் கொடுக்கப்பட்டுள்ளன.

2020 மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் தாய்லாந்து கண்காட்சியில் அறிமுகம்...

ஆனால் முன்புறத்தில் புதியதாக மூன்று ஸ்லேட்டுகளையும், புதிய ட்யூல்-டோன்-ல் அலாய் சக்கரங்களையும் இந்த புதிய கார் பெற்றுள்ளது. பின்புறத்தில், முந்தைய மாடலில் இருந்த நீண்ட டெயில்லைட் இன்னும் நீண்டதாக இரண்டாக பிளவுப்பட்ட வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன. பின்புற பம்பர் முந்தைய மாடலை விட சிறியதாக கொடுக்கப்பட்டுள்ளது.

2020 மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் தாய்லாந்து கண்காட்சியில் அறிமுகம்...

இவற்றுடன் ரியர் ஸ்பாய்லர், சுறாவின் துடுப்பு வடிவில் ஆண்டெனா போன்றவற்றையும் இந்த புதிய பஜேரோ ஃபேஸ்லிஃப்ட் ஸ்போர்ட் எஸ்யூவி கார் பெற்றுள்ளது. இந்த ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் வெர்சன், எஸ்யூவி வடிவத்தை பெறுவதற்காக அதிகளவில் வளைந்த பாகங்களை இந்த காரில் மிட்சுபிஷி நிறுவனம் பொருத்தியுள்ளதை வெளியாகியுள்ள இந்த புகைப்படம் பார்த்தாலே தெரிய வருகிறது.

2020 மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் தாய்லாந்து கண்காட்சியில் அறிமுகம்...

குறிப்பாக புதிய பம்பர்கள், ஸ்பாய்லர் போன்றவை காருக்கு எஸ்யூவிக்கு ஏற்ற தோற்றத்தை கொடுப்பது மட்டுமில்லாமல் கம்பீரமான வெளிப்புறத்தையும் கொடுத்துள்ளன. காரின் உட்புறத்தில் 8-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உடன் அப்டேட்டான தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளது.

2020 மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் தாய்லாந்து கண்காட்சியில் அறிமுகம்...

மிட்சுபிஷி நிறுவனம், பின்புற கதவை ரிமோட் கண்ட்ரோல் மூலமாகவே திறக்கும் வசதி, லாங்கே சேன்ஞ் அசிஸ்ட், ரியர் க்ராஸ் ட்ராபிக் அலார்ட் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு தொழிற்நுட்பங்களையும் இந்த புதிய பஜேரோ காரில் பொருத்தியுள்ளது.

2020 மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் தாய்லாந்து கண்காட்சியில் அறிமுகம்...

2.4 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் முந்தைய மாடலில் இருந்து அப்படியே இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 178 பிஎச்பி பவரையும் 430 என்எம் டார்க் திறனையும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் அமைப்புடன் வெளிப்படுத்துகிறது.

2020 மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் தாய்லாந்து கண்காட்சியில் அறிமுகம்...

இந்தியாவில் இந்த புதிய பஜேரோ ஸ்போர்ட் மாடல் அடுத்த ஆண்டு பிற்பகுதியில் தாய்லாந்தில் இருந்து பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையாகவுள்ளது. இதன் விலை இந்திய எக்ஸ்ஷோரூம்களில் ரூ.30 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: IndianAutosBlog

Most Read Articles
English summary
2020 Mitsubishi Pajero Sport Makes It First Public Appearance
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X