ரூ.15 லட்சம் அல்ல... ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் ரூபாய்... மோடியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்

இந்தியர்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என உறுதி அளித்திருந்த பிரதமர் மோடி, தற்போது ரூ.50 ஆயிரம் வழங்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரூ.15 லட்சம் அல்ல... ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் ரூபாய்... மோடியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்

கச்சா எண்ணெய்தான் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய முக்கியமான எரிபொருட்களின் மூலப்பொருள். ஆனால் இந்தியாவிடம் போதிய அளவிற்கு கச்சா எண்ணெய் வளம் இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான்.

எனவே ஈரான், ஈராக், கத்தார், குவைத் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்துதான் கச்சா எண்ணெய்யை இந்தியா அதிகம் இறக்குமதி செய்து வருகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 5 லட்சம் கோடி ரூபாயை இந்தியா செலவிடுகிறது.

ரூ.15 லட்சம் அல்ல... ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் ரூபாய்... மோடியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்

இதன் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் கடுமையாக மிக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்து கொண்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. இவை சுற்றுச்சூழலை அதிகம் மாசுபடுத்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றன.

இதனால் இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்தும் தற்போது காற்று மாசுபாடு என்ற பிரச்னையில் சிக்கி தத்தளித்து கொண்டுள்ளன. இதன் காரணமாகவும் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது.

எனவே எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் இந்திய சாலைகளை ஆட்சி செய்ய போகின்றன. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை சற்று அதிகமாக இருப்பது ஒரு பெரும் குறையாக கருதப்படுகிறது.

ரூ.15 லட்சம் அல்ல... ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் ரூபாய்... மோடியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்

இந்தியாவில் இன்னும் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரபலம் அடையாமல் இருப்பதற்கு காரணம் விலைதான். உதாரணத்திற்கு எலெக்ட்ரிக் கார்களை எடுத்து கொள்ளலாம். வழக்கமான பெட்ரோல், டீசல் கார்களை காட்டிலும் எலெக்ட்ரிக் கார்களின் விலை 2 முதல் 2.5 சதவீதம் வரை அதிகம்.

இதன் காரணமாகதான் இந்தியாவில் இன்னும் எலெக்ட்ரிக் வாகனங்கள் சொல்லிக்கொள்ளும்படி பிரபலம் அடையவில்லை. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்குவதற்காக, வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பலன்களை வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த புதிய திட்டத்தின் கீழ், எலெக்ட்ரிக் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்க செய்வதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்மூலம் நீங்கள் எலெக்ட்ரிக் கார் வாங்கினால், 50 ஆயிரம் ரூபாய் மிச்சம் ஆகும். இதுதவிர எலெக்ட்ரிக் கார்களுக்கு மிக எளிதாக லோன் கிடைப்பதற்கான வழிவகைகளும் செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன் எலெக்ட்ரிக் கார்களுக்கான லோன்களுக்கு வட்டி விகிதத்தை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.15 லட்சம் அல்ல... ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் ரூபாய்... மோடியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்

இதன்மூலம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரபலம் அடையும் என மத்திய அரசு கருதுகிறது. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவை அதிகரிக்கும்.

இதுகுறித்து மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களை விட விலை அதிகமாக இருப்பதால்தான் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

ஆனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் விலையும், எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையும் கிட்டத்தட்ட ஒரே நிலைக்கு வந்து விடும். எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் வாடிக்கையாளர்கள் முக்கியத்துவம் அளிக்க தொடங்குவார்கள்'' என்றார்.

இத்திட்டத்தின் கீழ், எலெக்ட்ரிக் காரின் மாடல் மற்றும் அதில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியின் அளவு ஆகியவற்றை பொறுத்து, வாடிக்கையாளர்களுக்கு பலன்கள் கிடைக்கும் என தெரிகிறது. இதுதவிர எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணங்களில் இருந்தும் விலக்கு அளிக்கப்படலாம்.

ரூ.15 லட்சம் அல்ல... ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் ரூபாய்... மோடியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்

இதன்மூலம் எலெக்ட்ரிக் வாகன உரிமையாளர்களால், கணிசமான தொகையை மிச்சம் பிடிக்க முடியும். தற்போதைய நிலையில் நாட்டின் ஒரு சில மாநிலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பதிவு கட்டணம் மற்றும் சாலை வரி ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு தற்போது ஆலோசித்து கொண்டுள்ள திட்டம் அமலுக்கு வந்தவுடன், இது நாடு முழுமைக்கும் விரிவாக்கம் செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக இன்னும் சில முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு சில எலெக்ட்ரிக் வாகன உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரியை குறைத்திருப்பது இதில் முக்கியமானது. எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை மேலும் குறைய இந்த நடவடிக்கை உதவும்.

மத்திய அரசின் இது போன்ற நடவடிக்கைகளால் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரிக்கும். எனவே மாருதி சுஸுகி, ஹூண்டாய், டாடா மற்றும் மஹிந்திரா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள், எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதில் முனைப்பு காட்டி வருகின்றன.

கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலின்போது, கருப்பு பணத்தை மீட்டு இந்தியர்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என மோடி உறுதியளித்திருந்தார். ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. தற்போது இந்த நடவடிக்கையின் மூலம் ரூ.50 ஆயிரம் கிடைக்கிறதே என மகிழ்ச்சியடைந்து கொள்ள வேண்டியதுதான்.

Note: Images Are For Representational Purposes Only

Most Read Articles
English summary
Modi Government Decided To Push Electric Vehicle Sales: Will Provide You Rs.50k To Buy An Electric Car. Read in Tamil
Story first published: Monday, February 18, 2019, 12:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X