வாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை

சுப்ரீம் கோர்ட்டின் புதிய உத்தரவு காரணமாக அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருவதால், வாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாமல் உரிமையாளர்கள் திணறி வருகின்றனர்.

வாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை

டூவீலர் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களை மாடிபிகேஷன் செய்வது சட்ட விரோதம் என கடந்த சில மாதங்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதனால் வாகனங்களில் இனி எந்த விதமான மாடிபிகேஷன்களையும் உரிமையாளர்கள் செய்யக்கூடாது. ஒரு சில வெளிநாடுகளை போல், வாகனங்களை மாடிபிகேஷன் செய்யும் கலாச்சாரம் இந்தியாவிலும் வேகமாக பரவியதையடுத்தே சுப்ரீம் கோர்ட் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

வாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை

பொதுவாக ஆஃப்டர் மார்க்கெட் வீல்ஸ், சைலென்சர்கள் மற்றும் ஹாரன்கள் ஆகியவற்றின் மூலம்தான் வாகனங்கள் மாடிபிகேஷன் செய்யப்படுகின்றன. ஆனால் ஆஃப்டர் மார்க்கெட் வீல்கள் சாலை விபத்துக்களுக்கு வழி வகுத்து விடுகின்றன. அதே நேரத்தில் வெளி மார்க்கெட்டில் பொருத்தப்படும் சைலென்சர்கள் மற்றும் ஹாரன்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை உண்டாக்குகின்றன.

வாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை

ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் மற்றும் ஹாரன்கள் உமிழும் அதிகப்படியான ஒலி சாலையில் பயணிக்கும் இதர வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவாக அமைகிறது. அத்துடன் அவர்களின் கவனத்தை சிதறடித்து, சாலை விபத்துக்களுக்கும் வழிவகுக்கிறது. இதுபோன்ற காரணங்களால்தான் வாகனங்களில் எவ்விதமான மாடிபிகேஷன்களையும் செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

வாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை

ஆனால் இந்தியாவில் தற்போது பல்லாயிரக்கணக்கான மாடிபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்கள் இயங்கி வருகின்றன. குறிப்பாக நாட்டிலேயே கேரளாவில்தான் இத்தகைய வாகனங்கள் அதிக அளவில் உள்ளன. எனவே மாடிபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களுக்கு எதிராக கேரள மாநில போலீசார் மற்றும் மோட்டார் வாகன துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

வாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை

மாடிபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களை பயன்படுத்தும் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்குவது, கடுமையான அபராதம் விதிப்பது, அத்தகைய வாகனங்களை பறிமுதல் செய்வது உள்ளிட்ட வழிகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கேரள மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஆட்டோ ஷோ ஒன்று நடைபெற்றது.

வாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை

இதில், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மாடிபிகேஷன் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக கேரளாவில் பெரும் போராட்டமும் நடைபெற்றது. மாடிபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களை வைத்திருப்பவர்கள் சார்பில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் பொது மக்களுக்கு தொந்தரவு இழைப்பதாக கூறி, போராட்டத்தில் கலந்து கொண்ட ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர்.

வாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை

இந்த சூழலில் மாடிபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களை வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், மாடிபிகேஷன்களை அகற்றி விட்டு, சம்பந்தப்பட்ட உள்ளூர் ஆர்டிஓ முன்பு வாகனங்களை சோதனைக்கு கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பொருளாதார ரீதியில் பார்த்தால், வாகன உரிமையாளர்களுக்கு இது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஏனெனில் வாகனங்களை மாடிபிகேஷன் செய்ய அவர்கள் பெரும் தொகையை செலவிட்டுள்ளனர். எனவே வாகனங்களை விற்பனை செய்து விடுவதே சிறந்தது என வாகன உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கு அவர்கள் தேர்ந்து எடுத்திருப்பது வெளி மாநிலங்களைதான்.

ஏனெனில் கேரளா அளவிற்கு வெளி மாநில அதிகாரிகள் அவ்வளவு விழிப்புடன் இருப்பதாக தெரியவில்லை. இதன் காரணமாக ஓஎல்எக்ஸ் மற்றும் குயிக்கர் உள்ளிட்ட ஆன்லைன் பிளாட்பார்ம்களில் விற்பனைக்கு பட்டியலிடப்படும் மாடிபிகேஷன் செய்யப்பட்ட டூவீலர் மற்றும் கார்களின் எண்ணிக்கை சமீப காலமாக திடீரென உயர்ந்து வருகிறது. இதனையும் அதிகாரிகள் எப்படியோ மோப்பம் பிடித்து விட்டனர்.

எனவே மாடிபிகேஷன் செய்யப்பட்ட பாகங்களுடன் வாகனங்களை விற்பனை செய்ய முயலும் உரிமையாளர்களின் ரிஜிஸ்ட்ரேஷன் சர்டிபிகேட்களை (RC - Registration Certificates) அதிகாரிகள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். அத்துடன் மாடிபிகேஷன் செய்யப்பட்ட பாகங்களை நீக்கிய பிறகே தடையில்லா சான்றிதழ் வழங்கப்படுகிறது.

வாகன விற்பனை முழுமை அடைய தடையில்லா சான்றிதழ் அவசியமானது. அத்துடன் புதிய உரிமையாளரின் பெயருக்கு வாகனத்தை மாற்ற இது கட்டாயம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி கொண்டதால், மாடிபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களை வைத்திருப்பவர்கள் புலம்பி கொண்டுள்ளனர்.

Source: The New Indian Express

Image Sources: 1, 2, 3

Most Read Articles
English summary
Modified Vehicles Cannot Be Sold. Read in Tamil
Story first published: Thursday, April 18, 2019, 12:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X