எதிர்ப்புக்கு மத்தியில் சாதித்தது மோடி அரசு! உயர்த்தப்பட்ட அபராதம் தெரிந்தால் இனி விதிமீற மாட்டீங்க!

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. இதன் கீழ் அபராதம் எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது? என தெரிந்தால் இனி வாழ்க்கையில் ஒரு போதும் போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபட மாட்டீர்கள்.

எதிர்ப்புக்கு மத்தியில் சாதித்தது மோடி அரசு! உயர்த்தப்பட்ட அபராதம் தெரிந்தால் இனி விதிமீற மாட்டீங்க!

இந்திய சாலைகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான விபத்துக்கள் நடைபெறுகின்றன. இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு என கணக்கிட்டால், சராசரியாக 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் சிக்கி பரிதாபமாக உயிரிழக்கின்றனர். இதன் காரணமாக இந்தியாவில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

எதிர்ப்புக்கு மத்தியில் சாதித்தது மோடி அரசு! உயர்த்தப்பட்ட அபராதம் தெரிந்தால் இனி விதிமீற மாட்டீங்க!

போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் முறையாக பின்பற்ற தவறுவதே சாலை பாதுகாப்பு என்ற விஷயத்தில் இந்தியா மிகவும் பின் தங்கியிருக்க முக்கியமான காரணம். போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு இந்தியாவில் இதுவரை பெரிய அளவிலான தண்டனை கிடைக்காமல் இருந்து வந்தது. இதன் காரணமாக ஏற்பட்ட அலட்சியமே போக்குவரத்து விதிகளை மீறுவதற்கு வாகன ஓட்டிகளை தூண்டியது என சொல்லலாம்.

எதிர்ப்புக்கு மத்தியில் சாதித்தது மோடி அரசு! உயர்த்தப்பட்ட அபராதம் தெரிந்தால் இனி விதிமீற மாட்டீங்க!

ஆனால் இனி வாகன ஓட்டிகள் அவ்வளவு எளிதாக போக்குவரத்து விதிமுறைகளை மீற முடியாது. மீறினால் கடுமையான அபராதங்களை செலுத்த நேரிடும். மத்திய அரசு மக்களவையில் நிறைவேற்றியுள்ள மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவே இதற்கு காரணம். மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றுவதில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தீவிரம் காட்டி வந்தார்.

எதிர்ப்புக்கு மத்தியில் சாதித்தது மோடி அரசு! உயர்த்தப்பட்ட அபராதம் தெரிந்தால் இனி விதிமீற மாட்டீங்க!

ஆனால் மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது என்பது உள்பட பல்வேறு காரணங்களை காட்டி, எதிர்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்த சூழலில் ஒருவழியாக மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று (ஜூலை 23) நிறைவேறியது. குரல் வாக்கெடுப்பு மூலமாக மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா நிறைவேறியது.

எதிர்ப்புக்கு மத்தியில் சாதித்தது மோடி அரசு! உயர்த்தப்பட்ட அபராதம் தெரிந்தால் இனி விதிமீற மாட்டீங்க!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவில் போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. அதாவது அபராத தொகை முன்பை காட்டிலும் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இனி பழைய அபராதம் எவ்வளவு? திருத்தியமைக்கப்பட்ட புதிய அபராதம் எவ்வளவு? என்பதை விரிவாக பார்க்கலாம்.

எதிர்ப்புக்கு மத்தியில் சாதித்தது மோடி அரசு! உயர்த்தப்பட்ட அபராதம் தெரிந்தால் இனி விதிமீற மாட்டீங்க!

வாகன ஓட்டிகள் பொதுவான குற்றங்களில் ஈடுபட்டால், செக்ஸன் 177ன்படி முன்பு 100 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இனி 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதே சமயம் அதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ்படியாமை என்ற குற்றத்திற்கு, செக்ஸன் 179ன் கீழ் பழைய அபராத தொகை 500 ரூபாய் மட்டும்தான். ஆனால் புதிய அபராத தொகை 2,000 ரூபாய்.

எதிர்ப்புக்கு மத்தியில் சாதித்தது மோடி அரசு! உயர்த்தப்பட்ட அபராதம் தெரிந்தால் இனி விதிமீற மாட்டீங்க!

லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்குபவர்களுக்கு முன்பு செக்ஸன் 181ன் கீழ் 500 ரூபாய் மட்டுமே அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இனி லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்கினால், 5,000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டியதிருக்கும். அதே நேரத்தில் வாகனங்களை அதிவேகமாக இயக்குபவர்களுக்கு செக்ஸன் 183ன்படி முன்பு 400 ரூபாய் மட்டுமே அபராதமாக வசூலிக்கப்பட்டு வந்தது.

எதிர்ப்புக்கு மத்தியில் சாதித்தது மோடி அரசு! உயர்த்தப்பட்ட அபராதம் தெரிந்தால் இனி விதிமீற மாட்டீங்க!

ஆனால் இனி வாகனங்களை அதிவேகமாக இயக்கினால், இலகுரக மோட்டார் வாகனம் என்றால் 1,000 ரூபாயும், மீடியம் பாசஞ்சர் வாகனம் என்றால் 2,000 ரூபாயும் அபராதம் கட்ட வேண்டியதிருக்கும். அதே நேரத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராதம் முன்பு செக்ஸன் 185ன் கீழ் 2,000 ரூபாயாக மட்டுமே இருந்தது. தற்போது இது அதிரடியாக 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

எதிர்ப்புக்கு மத்தியில் சாதித்தது மோடி அரசு! உயர்த்தப்பட்ட அபராதம் தெரிந்தால் இனி விதிமீற மாட்டீங்க!

பொது சாலைகளில் ரேஸிங்கில் ஈடுபடுபவர்களுக்கான பழைய அபராத தொகை 500 ரூபாய் மட்டும்தான் (செக்ஸன் 189). ஆனால் புதிய அபராத தொகை 5,000 ரூபாய். பெர்மிட் இல்லாத வாகனங்களுக்கு முன்பு செக்ஸன் 192ஏ-ன் கீழ் 5,000 ரூபாய் வரை மட்டுமே அதிகாரிகளால் அபராதம் விதிக்க முடியும். ஆனால் இந்த குற்றத்திற்கான புதிய அபராத தொகை 10,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

எதிர்ப்புக்கு மத்தியில் சாதித்தது மோடி அரசு! உயர்த்தப்பட்ட அபராதம் தெரிந்தால் இனி விதிமீற மாட்டீங்க!

இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு மற்றொரு முக்கியமான காரணம் ஓவர்லோடு. வாகனங்களில் ஓவர்லோடு ஏற்றி செல்பவர்களுக்கு முன்பு செக்ஸன் 194ன் படி வெறும் 2,000 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இது தவிர ஒவ்வொரு கூடுதல் டன்னுக்கும் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

எதிர்ப்புக்கு மத்தியில் சாதித்தது மோடி அரசு! உயர்த்தப்பட்ட அபராதம் தெரிந்தால் இனி விதிமீற மாட்டீங்க!

ஆனால் ஓவர்லோடிங் குற்றத்திற்கான புதிய அபராத தொகை 20,000 ரூபாய் என ஒரே அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர ஒவ்வொரு கூடுதல் டன்னுக்கும் தனியாக 2,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அதே சமயம் சீட் பெல்ட் அணியாதவர்களுக்கு முன்பு செக்ஸன் 194பி-ன் படி 100 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டது. இது தற்போது 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

எதிர்ப்புக்கு மத்தியில் சாதித்தது மோடி அரசு! உயர்த்தப்பட்ட அபராதம் தெரிந்தால் இனி விதிமீற மாட்டீங்க!

முன்பு இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்குபவர்களுக்கு செக்ஸன் 196ன் கீழ் 1,000 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இது தற்போது 2,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் போன்ற எமர்ஜென்ஸி வாகனங்கள் வந்தால் வழி விடும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா? இருந்தால் நிச்சயமாக நல்லது. தொடர்ந்து கடைபிடியுங்கள்.

எதிர்ப்புக்கு மத்தியில் சாதித்தது மோடி அரசு! உயர்த்தப்பட்ட அபராதம் தெரிந்தால் இனி விதிமீற மாட்டீங்க!

ஒரு வேளை அப்படிப்பட்ட ஒரு நல்ல பழக்கம் உங்களுக்கு இல்லாவிட்டால், இனியாவது பழக்கப்படுத்தி கொள்ளுங்கள். ஏனெனில் எமர்ஜென்ஸி வாகனங்களுக்கு வழி விடாவிட்டால், செக்ஸன் 194இ-ன் படி உங்களுக்கு இனி 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சரி, தண்டனை எல்லாம் சாதாரண மக்களுக்கு மட்டும்தானா? என நீங்கள் கேட்பது புரிகிறது.

எதிர்ப்புக்கு மத்தியில் சாதித்தது மோடி அரசு! உயர்த்தப்பட்ட அபராதம் தெரிந்தால் இனி விதிமீற மாட்டீங்க!

இது அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் பொருந்தும். ஆம், இந்த விதிமுறைகளை அமல்படுத்த கூடிய அதிகாரிகள் தவறு செய்தால் அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். இதில், விசேஷம் என்னவென்றால், அந்த அதிகாரிகள் என்ன தவறு செய்தாலும், அந்த குற்றத்திற்கு சாதாரண வாகன ஓட்டிகளுக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்படுகிறதோ, அதை விட இரு மடங்கு அதிக அபராதம் அதிகாரிகளுக்கு விதிக்கப்படும்.

எதிர்ப்புக்கு மத்தியில் சாதித்தது மோடி அரசு! உயர்த்தப்பட்ட அபராதம் தெரிந்தால் இனி விதிமீற மாட்டீங்க!

மத்திய அரசின் இந்த நடவடிக்கை உண்மையில் பாராட்டுக்குரியது. ஏனெனில் கரிசணம் காட்டி கொண்டே இருப்பதால்தான் வாகன ஓட்டிகள் தொடர்ந்து தவறு செய்து கொண்டே உள்ளனர். இனி ஒரு முறை அபராதம் செலுத்தி விட்டால், அடுத்த முறை அந்த தவறை செய்ய வாகன ஓட்டிகள் சிந்திப்பார்கள். இதன் மூலம் இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Motor Vehicles Amendment Bill 2019 Passed: Here Are Revised Fines For Traffic Violations. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X