Just In
- 24 min ago
ஸ்டைலு அள்ளுதே... டிவிஎஸ் எக்ஸ்எல்100-இன் புதிய வின்னர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!
- 3 hrs ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 10 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 11 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
Don't Miss!
- Sports
"கப்பாவில்" ஆஸி.யை கதற வைக்கும் சுப்மான் "கில்லி".. தொடரும் ஆதிக்கம்.. எதிர்பார்க்காத டிவிஸ்ட்!
- News
காங்கிரஸுக்கு 10 சீட்தானாம்.. கழற்றிவிட்டே தீருவது என முடிவோடுதான் இருக்கிறதா திமுக?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முகேஷ் அம்பானியின் கான்வாயில் இணைந்த புதிய சொகுசு கார்... அடேங்கப்பா, இந்த காரோட விலை இத்தனை கோடியா!
நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கிய பாணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் கான்வாயில் பல கோடி மதிப்பிலான புதிய கார்கள் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகளவில் மிகவும் பிரபலமான பணக்கார்களில் ஒருவராக முகேஷ் அம்பானி திகழ்கின்றார். பிரதமர் மோடிக்கும் மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படும் இவர் இந்தியாவின் மிக முக்கியமான நபர்களில் ஒருவராக கருதப்படுகின்றார்.
இதன்காரணமாகவே, இவருக்கு முக்கிய தலைவர்களுக்கு வழங்கப்படுவதைப்போன்று இசட் பிரிவு பாதுகாப்பு அரசால் வழங்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, இவரின் கான்வாயில் பல பாதுகாப்பு நிறைந்த கார்கள் அணிவகுத்து செல்வதையும் நம்மால் காண முடிகின்றது. இதுகுறித்த வீடியோ மற்றும் செய்திகளை ஏற்கனவே நமது டிரைவ்ஸ்பார்க் குழு வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்நிலையில், முகேஷ் அம்பானியன் கான்வாயில் புதிதாக பல கோடி மதிப்புள்ள புதிய சொகுசு மற்றும் பாதுகாப்பு நிறைந்த கார் இணைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முகேஷ் அம்பானியின் கராஜில் ஏற்கனவே பல விலையுயர்ந்த கார்களின் அணி வகுப்பு காட்சியளிப்பது குறிப்பிடத்தகுந்தது. இதில், மேலும் கூடுதலாக புத்தம் புதிய தலைமுறை மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63 என்ற மாடல் இணைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த வீடியோ ஒன்றை சிஎஸ் 12 வ்லாக்ஸ் என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.
முகேஷ் அம்பானி அண்மையில்தான் பிரபல டெஸ்லா நிறுவனத்தின் மாடல் எஸ் காரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்திருந்தார். இதுமட்டுமின்றி, லம்போர்கினி உருஸ் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் போன்ற விலையுயர்ந்த அதிக திறன் கொண்ட கார்களையும் அவர் பயன்படுத்தி வருகின்றார்.
இந்த சூழ்நிலையிலேயே அம்பானியன் கான்வாயில் புதிதாக பல கோடி மதிப்புள்ள புதிய மெர்சிடிஸ் பென்ஸ் கார் இணைக்கப்பட்டது.

தற்போது முகேஷ் அம்பானியின் கான்வாயில் இடம்பெற்றிருக்கும் இந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜி63 காரில் புல்லட் ஃப்ரூஃப் வசதி இடம்பெற்றுள்ளது. இதற்காக அந்த காரில் டபிள்யூ 221 எஸ் கிளாஸின் பாதுகாப்பு அம்சங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எக்ஸ்5 என்ற அதீத பாதுகாப்பு நிறைந்த காரும் பயன்படுத்தப்படுகின்றது. தற்போது, இந்த காருடன் மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜி63 காரும் இணைக்கப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானியின் கான்வாயில் இந்த கார்கள் மட்டும்தான் உள்ளதா என கேட்டால் இல்லையென்றுதான் நாங்கள் கூறுவோம். ஏனென்றால், இதேபோன்று கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட பென்ஸ் எஸ் கிளாஸ் டபிள்யூ 221 மற்றும் பென்ஸ் இசட்எல்எஸ் எஸ்யூவி உள்ளிட்ட கார்களும் இடம் பெற்றுள்ளன. இத்துடன், லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் காரும் காட்சியளிக்கின்றது.
MOST READ: "இனி ஹெல்மெட் கட்டாயம் இல்லை" நகரவாசிகளுக்கு மட்டும் விலக்களித்த மாநிலம்.. எது தெரியுமா?

மேற்கூறிய கார்களில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய இடத்தில் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 மாடல் உள்ளது. இந்த கார் ஓர் மினி ராக்கெட் லாஞ்சரின் தாக்குதலைக்கூட தாங்கும் வல்லமைக் கொண்ட அதீத திறன் வாய்ந்த காராகும். இந்த காரை தனது பாதுகாப்பு பணிக்கு ஈடுபட்டிருக்கும் சிஐஎஸ்எஃப் வீரர்களின் பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனை அம்பானியின் கான்வாயின்போது மட்டுமே வீரர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
MOST READ: அசத்தும் அம்சங்களுடன் புதிய எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்த அதீத பாதுகாப்பு நிறைந்த காரை அவர் ரூ. 1.6 கோடி மதிப்பில் வாங்கியுள்ளார். ஆனால், இந்த காரைக் காட்டிலும் எஸ்-கிளாஸ் பாதுகாப்பு திறன் கொண்ட டபிள்யூ221 கார் ரூ. 8-9 கோடி மதிப்பைக் கொண்டதாக உள்ளது.
ஆகையால், அம்பானியின் கான்வாயில் உள்ள அதிக விலையுயர்ந்த கார்களில் இது முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது. பாதுகாப்பு அம்சம் மற்றும் சொகுசு வசதிகள் சிலவற்றை கூடுதலாக ஏற்படுத்திக் கொடுத்தன் காரணமாக இந்த அதீத விலையை அது பெற்றிருக்கின்றது.

அதேசமயம், புதிதாக இணைந்துள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜி63 கார் ரூ. 2.7 கோடி மதிப்பில் வாங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இது ஆன்-ரோடு விலையாகும். ஆகையால், தற்போது அம்பானியின் கான்வாயில் மட்டும் ஒட்டுமொத்தமாக ரூ. 16.3 கோடி மதிப்பிலான கார்கள் பயன்படுத்தப்படுகின்றது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், ஏஎம்ஜி ஜி63 மாடலை கடந்த வருடம்தான் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த கார் ஆன் ரோடில் ரூ. 3 கோடி வரையிலான விலையில் விற்பனைச் செய்து வருகின்றது.

இந்த காரில் புத்தம் புதிய 4.0 லிட்டர் பிஐ-டர்போசார்ஜட் வி8 பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 585 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில், 9 ஸ்பீடு ஏஎம்ஜி ஸ்பீடு ஷிஃப்ட் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
இது மணிக்கு 100 கிமீ என்ற வேகத்தை வெறும் 4.5 செகண்டுகளில் தொடுகின்ற அளவிற்கு திறன் வாய்ந்தது. அதேசமயம், இது உச்சபட்சமாக மணிக்கு 220 கிமீ என்ற செல்லக்கூடியது.