செல்லூர் ராஜூ வாழ்வில் நடந்த சோகம்... என்னவென்று தெரிந்தால் அவருக்காக முதல் முறை வருத்தப்படுவீர்கள்

கேலி, கிண்டல் செய்யப்பட்டு வரும் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது தமிழக மக்கள் தற்போது அனுதாபம் காட்ட தொடங்கியுள்ளனர். அவர் வாழ்வில் நடந்த சோக சம்பவம் என்னவென்று தெரிந்தால், அவருக்காக நீங்கள் முதல் முறையாக வருத்தப்படக்கூடும்.

மக்கள் முன் கண் கலங்கிய செல்லூர் ராஜூ... எதற்காக என தெரிந்தால் இனி இவரை கிண்டல் செய்ய மாட்டீர்கள்...

தமிழக அளவில் மிக பிரபலமான அரசியல்வாதிகளில் ஒருவர் செல்லூர் ராஜூ. இவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசில் கூட்டுறவு துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். தமிழக மக்களுக்கு செல்லூர் ராஜூ குறித்து எவ்வித அறிமுகமும் தேவை இல்லை.

குறிப்பாக பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களை பயன்படுத்துபவர்களுக்கு செல்லூர் ராஜூ நன்கு பரிட்சயமானவர். சமூக வலை தளங்கள் முழுக்க, செல்லூர் ராஜூவை கிண்டல் செய்யும் வகையிலான மீம்ஸ்கள் நிறைந்திருப்பதே இதற்கு காரணம்.

மக்கள் முன் கண் கலங்கிய செல்லூர் ராஜூ... எதற்காக என தெரிந்தால் இனி இவரை கிண்டல் செய்ய மாட்டீர்கள்...

அமைச்சர் செல்லூர் ராஜூவின் வெகுளித்தனமான பேட்டிகள் மற்றும் மேடை பேச்சுக்கள்தான் சமூக வலை தளங்களில் அதிகம் கிண்டல் செய்யப்படுகின்றன. குறிப்பாக வைகை அணை தண்ணீர் ஆவியாகாமல் தடுக்க செல்லூர் ராஜூ செயல்படுத்திய தெர்மாகோல் திட்டம்தான் அதிக கேலிக்கு ஆளானது.

அவருக்கு 'தெர்மாகோல் அமைச்சர்' என்ற பட்டத்தை பெற்று தந்ததும் இச்சம்பவம்தான். இதன்பின்புதான் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களின் கான்செப்ட் கடவுளாக செல்லூர் ராஜூ உருவெடுத்தார். அதன்பின் அவரை வைத்து தினந்தோறும் மீம்ஸ்கள் வெளிவந்தன.

இப்படிப்பட்ட சூழலில் அமைச்சர் செல்லூர் ராஜூவின் மேடை பேச்சு ஒன்று, தமிழக மக்கள் மத்தியில் முதல் முறையாக அவர் மீது மிகுந்த அனுதாபத்தை வரவழைத்துள்ளது. செல்லூர் ராஜூவை கேலி செய்தவர்கள் எல்லாம் இன்று அவருக்காக கண் கலங்கி கொண்டுள்ளனர்.

மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில், நேற்று முன் தினம் காலை (பிப்ரவரி 10), சாலை பாதுகாப்பு வார நிறைவு விழா நடைபெற்றது. இதில், மதுரையை சேர்ந்தவரான அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். அப்போது தன் வாழ்வில் நடந்த உருக்கமான சம்பவத்தை அவர் பகிர்ந்து கொண்டார்.

மக்கள் முன் கண் கலங்கிய செல்லூர் ராஜூ... எதற்காக என தெரிந்தால் இனி இவரை கிண்டல் செய்ய மாட்டீர்கள்...

இதுகுறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், ''சாலை விபத்துக்களின் காரணமாக விலை மதிப்பற்ற உயிர் பறிபோகிறது. இதனால் சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தினர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு நானே ஒரு உதாரணம் என கருதுகிறேன்.

எனது ஒரே ஒரு மகனை நான் இழந்து கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஆகிறது. இதனால் நானும், என் மனைவியும், குடும்பத்தினரும் கடுமையாக பாதிக்கப்பட்டோம். அவரின் நினைவுகளுடன்தான் நாங்கள் தற்போது வாழ்ந்து வருகிறோம். அவரின் நினைவுகள் எப்போதும் எங்களை விட்டு பிரியாது'' என்றார்.

அமைச்சர் செல்லூர் ராஜூவின் மகன் தமிழ்மணி, சென்னையில் கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்து ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் பயணம் செய்ததே இதற்கு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.

இதை குறிப்பிட்டுதான் அமைச்சர் செல்லூர் ராஜூ மேடையில் பேசினார். அப்போது மகனின் நினைவால் அவர் லேசாக கண் கலங்கினார். இதனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களையும் சோகம் ஆட்கொண்டது.

மக்கள் முன் கண் கலங்கிய செல்லூர் ராஜூ... எதற்காக என தெரிந்தால் இனி இவரை கிண்டல் செய்ய மாட்டீர்கள்...

இதுபோன்ற சாலை விபத்துக்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க, ஹெல்மெட் அணிவது போன்ற போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும், வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவுரை வழங்கினார்.

இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO-World Health Organization) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் பேர் சாலை விபத்தில் உயிரிழப்பதாக கூறப்பட்டுள்ளது.

சாலை விபத்தில் அதிகம் பாதிக்கப்படுவது இரு சக்கர வாகன ஓட்டிகள்தான். கார் போன்ற இதர வாகன ஓட்டிகளுடன் ஒப்பிடுகையில், இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரிய அளவில் பாதுகாப்பு அம்சங்கள் எதுவுமே இல்லை.

இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய பாதுகாப்பு கவசமே ஹெல்மெட் மட்டும்தான். ஆனால் பெரும்பாலான இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை தவிர்க்கின்றனர். சாலை விபத்துக்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் அதிகம் உயிரிழக்க இதுவே மிக முக்கியமான காரணம்.

மக்கள் முன் கண் கலங்கிய செல்லூர் ராஜூ... எதற்காக என தெரிந்தால் இனி இவரை கிண்டல் செய்ய மாட்டீர்கள்...

எனவே இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்கையில் ஹெல்மெட் அணிவதை பழக்கமாக்கி கொள்வது நல்லது. அத்துடன் உங்களின் பின்னால் அமர்ந்து பயணம் செய்பவரும் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்ள மற்றொரு முக்கியமான காரணம் 'பிளைண்ட் ஸ்பாட்' (Blind Spot). கார், பஸ் போன்ற வாகனங்களினுடைய டிரைவர்களின் கண்களுக்கு புலப்படாத பகுதிகளே பிளைண்ட் ஸ்பாட் எனப்படுகின்றன.

கார், பஸ் போன்ற வாகனங்களை பின் தொடர்ந்து செல்லும்போது, நீங்கள் பிளைண்ட் ஸ்பாட் பகுதியில் பயணம் செய்தால், அந்த வாகனங்களின் டிரைவர்களால் உங்களை பார்க்க முடியாது. இது விபத்துக்கு வழிவகுத்து விடும்.

எனவே கார், பஸ் போன்ற வாகனங்களை பின் தொடர்ந்து செல்லும்போதெல்லாம், அந்த வாகனங்களின் டிரைவர்களால் நம்மை பார்க்க முடியாது என கருதிக்கொண்டு, அதற்கு ஏற்ப இரு சக்கர வாகனங்களை இயக்குங்கள். இதன்மூலமாக தேவையற்ற விபத்துக்களை தவிர்க்கலாம்.

மக்கள் முன் கண் கலங்கிய செல்லூர் ராஜூ... எதற்காக என தெரிந்தால் இனி இவரை கிண்டல் செய்ய மாட்டீர்கள்...

இதுதவிர ஒரு சிலர் ஸ்டைல் என கருதிக்கொண்டு இரு சக்கர வாகனங்களின் சைடு வியூ மிரர்களை கழற்றி விடுகின்றனர். சைடு வியூ மிரர் இல்லாமல் இரு சக்கர வாகனங்களை இயக்குவதும் சாலை விபத்துக்களுக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

அத்துடன் நெருக்கமான வளைவுகளில் மிக வேகமாக திரும்பும் பழக்கம் இருந்தால், அதையும் இன்றோடு விட்டு விடுங்கள். இதுதவிர ஒவ்வொரு பகுதிக்கும் வரையறை செய்யப்பட்டுள்ள ஸ்பீட் லிமிட்களை (Speed Limit) கடைபிடியுங்கள்.

அதே நேரத்தில் மது அருந்தி விட்டு வாகனங்களை இயக்குவதும் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். தமிழகத்தில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் சாலை விபத்துக்களில் உயிரிழப்பதற்கு குடிபோதையில் வாகனம் ஓட்டுவதும் முக்கியமான காரணமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
My Son Died In A Road Accident: Minister Sellur Raju Emotional Speech. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X