இந்தியாவில் உள்ள எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை இதுதான்.. ஆச்சரியப்படுத்திய மாநிலம் எது தெரியுமா?

இந்தியாவில் இயங்கும் பதிவு செய்யப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விரிவான விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் உள்ள எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை இதுதான்.. ஆச்சரியப்படுத்திய மாநிலம் எது தெரியுமா?

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை. அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை மிக அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் உள்ள எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை இதுதான்.. ஆச்சரியப்படுத்திய மாநிலம் எது தெரியுமா?

இந்தியாவில் வரும் 2030ம் ஆண்டிற்கு பின் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மிகவும் கடினமான இந்த இலக்கை எட்டுவதற்காக மத்திய அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறது.

இந்தியாவில் உள்ள எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை இதுதான்.. ஆச்சரியப்படுத்திய மாநிலம் எது தெரியுமா?

எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா செலவிட்டு வரும் தொகை வெகுவாக குறைந்து, நாட்டின் பொருளாதார நிலை மேம்படுத்தும். அத்துடன் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். எனவேதான் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

இந்தியாவில் உள்ள எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை இதுதான்.. ஆச்சரியப்படுத்திய மாநிலம் எது தெரியுமா?

சரி, தற்போதைய நிலையில் இந்தியாவில் இயங்கி வரும் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது உங்களுக்கு தெரியுமா? மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி இந்தியாவில் தற்போது பதிவு செய்யப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 4 லட்சம். இதில், பாதி எலெக்ட்ரிக் வாகனங்கள் உத்தரபிரதேசம் மற்றும் டெல்லியில் உள்ளன.

இந்தியாவில் உள்ள எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை இதுதான்.. ஆச்சரியப்படுத்திய மாநிலம் எது தெரியுமா?

யாரிஸ் - மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இவற்றில் பெரும்பாலான வாகனங்கள் எலெக்ட்ரிக் ரிக்ஸாக்கள் (e-rickshaws) மற்றும் எலெக்ட்ரிக் கார்ட்டுகள் (e-carts) என்பதும் குறிப்பிடத்தக்கது. நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்தில், 1.39 லட்சம் பதிவு செய்யப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் உள்ளன. இதற்கு அடுத்த இடத்தை டெல்லி பிடித்துள்ளது. டெல்லியில் பதிவு செய்யப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை 75,600.

இந்தியாவில் உள்ள எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை இதுதான்.. ஆச்சரியப்படுத்திய மாநிலம் எது தெரியுமா?

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிக அளவில் இருக்கும் மாநிலங்களில் பட்டியலில் கர்நாடகா மூன்றாவது இடத்தையும், மஹாராஷ்டிரா நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன. இதில், ஆச்சரியம் அளிக்கும் தகவல் என்னவென்றால், அஸ்ஸாம் மாநிலத்திலும் அதிக அளவிலான எலெக்ட்ரிக் வாகனங்கள் உள்ளன.

இந்தியாவில் உள்ள எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை இதுதான்.. ஆச்சரியப்படுத்திய மாநிலம் எது தெரியுமா?

அங்கு இருக்கும் பதிவு செய்யப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை 15,192. வட கிழக்கு மாநிலங்களின் அளவில் பார்த்தால் இதுவே அதிகம். அத்துடன் வட, தென் மற்றும் மேற்கு இந்திய பகுதிகளில் உள்ள சில மாநிலங்களை காட்டிலும் அஸ்ஸாமில் அதிக அளவிலான எலெக்ட்ரிக் வாகனங்கள் இயங்கி வருகின்றன.

இந்தியாவில் உள்ள எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை இதுதான்.. ஆச்சரியப்படுத்திய மாநிலம் எது தெரியுமா?

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி லோக்சபாவிற்கு இந்த தகவல்களை எழுத்து பூர்வமாக வழங்கினார். ஆனால் இந்த அதிகாரப்பூர்வமான எண்ணிக்கையை காட்டிலும் இந்தியாவில் இயங்கும் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகதான் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் உள்ள எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை இதுதான்.. ஆச்சரியப்படுத்திய மாநிலம் எது தெரியுமா?

ஏனெனில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான எலெக்ட்ரிக் ரிக்ஸாக்கள் பதிவு செய்யப்படாமல் இயக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக பயணிகள் அல்லது சரக்குகளை ஏற்றி செல்வதற்காக கமர்ஷியல் பெர்மிட் பெறுவதில் இருந்து எலெக்ட்ரிக் ரிக்ஸாக்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்ட்களுக்கு கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் போக்குவரத்து துறை அமைச்சகம் விலக்கு அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் உள்ள எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை இதுதான்.. ஆச்சரியப்படுத்திய மாநிலம் எது தெரியுமா?

இதேபாணியில் பேட்டரி மூலம் இயங்கும் கமர்ஷியல் வாகனங்கள் மற்றும் எத்தனால், மெத்தனாலில் இயங்கும் வாகனங்களுக்கு பெர்மிட் பெறுவதில் இருந்து கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் போக்குவரத்து துறை விலக்கு அளித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தியாவில் உள்ள எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை இதுதான்.. ஆச்சரியப்படுத்திய மாநிலம் எது தெரியுமா?

இந்த சூழலில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வாகனங்களை இந்தியாவில் பிரபலபடுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பதிவு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கும் திட்டத்தை தனது அமைச்சகம் முன்மொழிந்துள்ளதாகவும் நிதின் கட்கரி தெரிவித்தார். ஆனால் இந்த விஷயத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

Most Read Articles
English summary
Nearly 4 Lakh Registered Electric Vehicles In India : Nitin Gadkari. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X