பைக் விலையில் கிடைக்கும் பஜாஜின் மைக்ரோ கார்... முழு விபரம்...!

பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரை பஜாஜ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிவித்துள்ளது. இதன் விலை மற்றும் மற்ற விபரங்களை இந்த பதிவில் முழுமையாகப் பார்க்கலாம்.

பைக் விலையில் கிடைக்கும் பஜாஜின் மைக்ரோ கார்

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் பஜாஜ் நிறுவனம், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில், இந்த நிறுவனம் தயாரித்த பல்சர், பிளாட்டினா, டிஸ்கவர் மற்றும் வி உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் மிகவும் பிரபலமான வாகனங்களான இருந்து வருகின்றன.

பைக் விலையில் கிடைக்கும் பஜாஜின் மைக்ரோ கார்

இதேபோன்று, இந்த நிறுவனம் தயாரித்து வரும் ஆட்டோக்களும், வர்த்தக சந்தையில் பெரும் வரவேற்பு உண்டு. இந்நிலையில், பஜாஜ் நிறுவனம், இரண்டு மற்றும் மூன்று சக்கரங்களுடன், நான்கு சக்கரங்கள் கொண்ட க்யூட் என்ற கார் வடிவிலான குவாட்ரி சைக்கிள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

பைக் விலையில் கிடைக்கும் பஜாஜின் மைக்ரோ கார்

பஜாஜ் நிறுவனம் கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில்தான் இந்த மைக்ரோ காரை முதல் முறையாக அறிமுகம் செய்தது. பஜாஜ் நிறுவனத்திற்கான ஸ்டாலில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்த மைக்ரோ கார், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பின்னர், இந்த மைக்ரோ காரை க்யூட் என்ற பெயரில் கடந்த 2015ம் ஆண்டு பஜாஜ் நிறுவனம் பிரபலப்படுத்தியது.

பைக் விலையில் கிடைக்கும் பஜாஜின் மைக்ரோ கார்

இதைத்தொடர்ந்து, மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகத்திடம் ஒப்புதல் பெற பஜாஜ் காத்திருந்தது. இதையடுத்து, நான்-டிரான்ஸ்போர்டபில் கேடகரியில் க்யூட் குவாட்ரி சைக்கிளிற்கான ஒப்புதல், கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் கிடைத்தது. தொடர்ந்து, இந்த க்யூட் குவாட்ரி சைக்கிளை துருக்கி, இந்தோனேசிய உட்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பஜாஜ் நிறுவனம் ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தது.

பைக் விலையில் கிடைக்கும் பஜாஜின் மைக்ரோ கார்

இந்நிலையில், பஜாஜ் நிறுவனம் தனது குவாட்ரி சைக்கிளை இந்தியாவில் இன்று (ஏப்ரல் 18) அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. பஜாஜின் இந்த க்யூட் குவாட்ரி சைக்கிளில், 216 சிசி கொண்ட சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு-கூல்ட் டிடிஎஸ்ஐ எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 13.1 பிஎச்பி பவரை 5,500 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும்.

பைக் விலையில் கிடைக்கும் பஜாஜின் மைக்ரோ கார்

மேலும், 18.9 என்எம் டார்க்கை 4,000 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். இதேபோன்று, இந்த குவாட்ரி சைக்கிள் சிஎன்ஜி வேரியண்டிலும் கிடைக்கிறது. இது, 10.9 பிஎச்பி பவரை 5,500 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். மேலும், 16.1 என்எம் டார்க்கை 4,000 ஆர்பிஎம்-இல் வழங்கும். இதன் எஞ்ஜின்கள் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஸனில் இயங்கும்.

பைக் விலையில் கிடைக்கும் பஜாஜின் மைக்ரோ கார்

பஜாஜ் க்யூட் பெட்ரோல் வேரியண்டை எக்ஸ்-ஷோரூமில் ரூ. 2.63 லட்சம் என்ற விலையிலும், சிஎன்ஜி வேரியண்டை ரூ. 2.83 என்ற எக்ஸ்-ஷோரூமில் விலையிலும் விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது. இந்த குவாட்ரி சைக்கிள் வெள்ளை, மஞ்சள், பச்சை, சிவப்பு மற்றும் நீளம் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
Bajaj Qute to be officially launched on 18 April. Read In Tamil.
Story first published: Thursday, April 18, 2019, 17:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X