ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான விலையில் களமிறங்கியுள்ள பிஎம்டபிள்யூ புதிய மாடல்: ஸ்பெஷல் புகைப்படம்!

பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் எக்ஸ்5 மாடலை, 3 வேரியண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் குறித்த முழு தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஒரு கோடிக்கும் குறைவான விலையில் களமிறங்கியுள்ள பிஎம்டபிள்யூ புதிய மாடல்: ஸ்பெஷல் புகைப்படம்!

பிஎம்டபிள்யூ நிறுவனம், அதன் நான்காம் தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்5 மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் மொத்தம் மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு களமிறங்கியுள்ளது. இது ஆடி நிறுவனத்தின் க்யூ7 மாடலுக்கும், வோல்வோவின் எக்ஸி90 மாடலுக்கும் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ ஆகியவற்றிற்கும் செம்ம டஃப் கொடுக்கும் வகையில் களமிறக்கப்பட்டுள்ளது.

ஒரு கோடிக்கும் குறைவான விலையில் களமிறங்கியுள்ள பிஎம்டபிள்யூ புதிய மாடல்: ஸ்பெஷல் புகைப்படம்!

இந்த பிஎம்டபிள்யூ எக்ஸ்5 மாடலின் ஆரம்ப வேரியண்டாக இருக்கும் எக்ஸ்டிரைவ்30டி ஸ்போர்ட் ரூ. 72.9 லட்சத்திற்கும், எக்ஸ்டிரைவ்30டி எக்ஸ்லைனை ரூ. 82.4 லட்சத்திற்கும், எக்ஸ்டிரைவ்40ஐ ரூ. 82.4 லட்சத்திற்கும் விற்பனைச் செய்யப்பட உள்ளன. இவையனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

ஒரு கோடிக்கும் குறைவான விலையில் களமிறங்கியுள்ள பிஎம்டபிள்யூ புதிய மாடல்: ஸ்பெஷல் புகைப்படம்!

இதில், எக்ஸ்5 எக்ஸ்டிரைவ்40ஐ வேரியண்ட் 3.0 லிட்டர் இன்லைன்-சிக்ஸ் பெட்ரோல் எஞ்ஜின் ஆப்ஷனில் கிடைக்கும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 340 பிஎஸ் பவரையும், 450என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். அதேபோன்று, இரண்டவாது வேரியண்டான எக்ஸ்டிரைவ்30டி மாடலில் 3.0 லிட்டர் இன்லைன்-சிக்ஸ் டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 265 பிஎஸ் பவரையும், 620 என்எம் டார்க்கையும் வழங்கும்.

ஒரு கோடிக்கும் குறைவான விலையில் களமிறங்கியுள்ள பிஎம்டபிள்யூ புதிய மாடல்: ஸ்பெஷல் புகைப்படம்!

இந்த இரு வேரியண்டிலும் பொருத்தப்பட்டிருக்கும் அதே எஞ்ஜின்தான், பிஎம்டபிள்யூ 530டி எம் ஸ்போர்ட் மற்றும் எக்ஸ்4 எக்ஸ்டிரைவ் 30டி மாடல்களில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த அனைத்து வேரியண்ட்களும் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ரியர்-பயாஸ்ட் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தைப் பெற்றிருக்கின்றது. இத்துடன், இந்த கார், 6 சிலிண்டர்கள் மற்றும் 8 சிலிண்டர்கள் கொண்ட எஞ்ஜின் ஆப்ஷனலாகவும் கிடைக்க இருக்கிறது.

ஒரு கோடிக்கும் குறைவான விலையில் களமிறங்கியுள்ள பிஎம்டபிள்யூ புதிய மாடல்: ஸ்பெஷல் புகைப்படம்!

இந்த புதிய எக்ஸ்-5 மாடலை, பிஎம்டபிள்யூ நிறுவனம் 7 சீரிஸ் சொகுசு கார் உற்பத்திச் செய்யப்படும், க்ளார் (CLAR) கட்டமைப்புக் கொள்கையின் கீழ் தயாரித்துள்ளது. ஆகையால், தற்போது விற்பனையில் இருக்கும் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவியைக் காட்டிலும் புதிய தலைமுறை எக்ஸ்-5 எஸ்யூவி பெரிதாகி இருக்கின்றது. மேலும், மூன்றாவது வரிசை இருக்கை ஆப்ஷனலாக கிடைக்கிறது.

ஒரு கோடிக்கும் குறைவான விலையில் களமிறங்கியுள்ள பிஎம்டபிள்யூ புதிய மாடல்: ஸ்பெஷல் புகைப்படம்!

அந்த வகையில் அதன் நீளம், அகலம், உயரம் மற்றும் வீல் பேஸ் உள்ளிட்டவை விசாலமான இடவசதியைப் பெற்றிருக்கின்றது. இத்துடன் பல்வேறு சிறப்பு அம்சங்களும் இந்த காரில் இடம்பெற்றுள்ளன. அவ்வாறு, பிஎம்டபிள்யூ எக்ஸ்-5 மாடலில் முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், பெரிய க்ரில் அமைப்பு உள்ளிட்டவைப் பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன், பிரத்யேமாக காரில் லேசர் லைட்டிங் சிஸ்டமும் ஆப்ஷனலாக வழங்கப்பட இருக்கின்றது.

ஒரு கோடிக்கும் குறைவான விலையில் களமிறங்கியுள்ள பிஎம்டபிள்யூ புதிய மாடல்: ஸ்பெஷல் புகைப்படம்!

இதைத்தொடர்ந்து, காரின் பின்பக்கத்தில் உள்ள மின் விளக்கின் க்ளஸ்ட்டர் அமைப்பு கவர்ச்சியானதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, காரின் பின்புற கதவிலும் பெயரளவில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு கோடிக்கும் குறைவான விலையில் களமிறங்கியுள்ள பிஎம்டபிள்யூ புதிய மாடல்: ஸ்பெஷல் புகைப்படம்!

இந்த காரில் 12 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஐ-ட்ரைவ் சாஃப்ட்வேரில் இயங்கும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இணைக்கப்பட்டுள்ளன.

ஒரு கோடிக்கும் குறைவான விலையில் களமிறங்கியுள்ள பிஎம்டபிள்யூ புதிய மாடல்: ஸ்பெஷல் புகைப்படம்!

மேலும், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, பவர்ஸ் அண்ட் வில்கின்ஸ் ஸ்டீரியோ சிஸ்டம், வாய்ஸ் கமண்ட் சிஸ்டம், கெஸ்ச்சர் கன்ட்ரோல், பின்புற இருக்கை பயணிகளுக்கான பிரத்யேக டிவி திரை உள்ளிட்ட மதிப்புகூட்டப்பட்ட பல்வேறு சொகுசு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
All-New BMW X5 Launched In India — Prices Start At Rs 72.90 Lakh. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X