புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார் அறிமுக தேதி விபரம்!

புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்-5 சொகுசு எஸ்யூவி கார் அடுத்த மாதம் 16ந் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார அறிமுக தேதி விபரம்!

புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு கார் உருவாக்கப்பட்ட பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் CLAR கட்டமைப்புக் கொள்கையின் கீழ்தான் புதிய எக்ஸ்-5 சொகுசு எஸ்யூவி காரும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார அறிமுக தேதி விபரம்!

தற்போது விற்பனையில் இருக்கும் பிஎம்டபிள்யூ எக்ஸ்-5 எஸ்யூவியைவிட அளவில் புதிய தலைமுறை எக்ஸ்-5 எஸ்யூவி பெரிதாகி இருக்கிறது. நீள, அகலம், உயரம் மற்றும் வீல் பேஸ் நீளம் அதிகரிக்கப்பட்டு இடவசதி மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார அறிமுக தேதி விபரம்!

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-5 எஸ்யூவியில் முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், பெரிய க்ரில் அமைப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாக காணக் கிடைக்கிறது. இந்த காரில் லேசர் லைட்டிங் சிஸ்டமும் ஆப்ஷனலாக கிடைக்கும். டெயில் லைட் க்ளஸ்ட்டர் அழகாக மாறி இருப்பதுடன், பின்புற கதவு அமைப்பிலும் மாறுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார அறிமுக தேதி விபரம்!

இந்த காரில் 12 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஐ-ட்ரைவ் சாஃப்ட்வேரில் இயங்கும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, பவர்ஸ் அண்ட் வில்கின்ஸ் ஸ்டீரியோ சிஸ்டம், வாய்ஸ் கமாண்ட் சிஸ்டம், கெஸ்ச்சர் கன்ட்ரோல், பின்புற இருக்கை பயணிகளுக்கான விசேஷ டிவி திரை உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.

புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார அறிமுக தேதி விபரம்!

வீல்பேஸ் உள்பட காரின் நீள, அகல, உயரம் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் உட்புற இடவசதி சிறப்பாக இருக்கிறது. மேலும், மூன்றாவது வரிசை இருக்கை ஆப்ஷனலாக கிடைக்கிறது.

புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார அறிமுக தேதி விபரம்!

புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்-5 எஸ்யூவியில் 6 சிலிண்டர்கள் மற்றும் 8 சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின் ஆப்ஷன்கள் தக்கவைக்கப்பட இருக்கின்றன. இந்தியாவை பொறுத்தவரையில், எக்ஸ்ட்ரைவ்30 டீ மாடலானது 3.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சினுடன் வர இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 265 எச்பி பவரையும், 620 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார அறிமுக தேதி விபரம்!

அடுத்தது, எக்ஸ் எஸ்யூவியில் எக்ஸ்ட்ரைவ்40ஐ என்ற பெட்ரோல்் மாடலும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிகிறது. இந்த மாடலில் இருக்கும் 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 340 எச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இரண்டு எஞ்சின் ஆப்ஷன்களிலுமே 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படும். ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் இருக்கும்.

புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார அறிமுக தேதி விபரம்!

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-5 எஸ்யூவியானது ரூ.65 லட்சம் முதல் ரூ.70 லட்சம் இடையிலான ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் உள்ளிட்ட சொகுசு ரக எஸ்யூவி மாடல்களுடன் போட்டிபோடும்.

Most Read Articles
English summary
New BMW X5 Luxury SUV India launch on May 16, 2019
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X