ஜெட் விமானத்தை போட்டிக்கு அழைக்கும் புதிய புகாட்டி சென்டோடைசி கார்... மலைக்க வைக்கும் வேகம்!

புகாட்டி நிறுவனம், அதிவேகத்தில் செல்லக்கூடிய சென்டோடைசி என்ற புதிய காரை தாயரித்துள்ளது. இந்த காரின் வேகம் மலைக்க வைக்கும் வகையில் உள்ளது. அப்படி என்ன வேகத்தில் அது செல்லும் என்பது குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஜெட் விமானத்தை போட்டிக்கு அழைக்கும் புதிய புகாட்டி சென்டோடைசி கார்... மலைக்க வைக்கும் வேகம்!

பிரெஞ்ச் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் புகாட்டி நிறுவனம், அதிவேகமாக இயங்கக்கூடிய கார்களைத் தயாரித்து வருகின்றது. இந்நிறுவனம், தற்போது தனது 110-வது வருடத்தை கொண்டாடி வருகின்றது.

ஜெட் விமானத்தை போட்டிக்கு அழைக்கும் புதிய புகாட்டி சென்டோடைசி கார்... மலைக்க வைக்கும் வேகம்!

இதனைச் சிறப்பிக்கும் விதமாக, புகாட்டி நிறுவனம் ஓர் சிறப்பு வாய்ந்த காரை தயாரித்து வருகின்றது. இந்த கார், பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெட் விமானத்தை போட்டிக்கு அழைக்கும் புதிய புகாட்டி சென்டோடைசி கார்... மலைக்க வைக்கும் வேகம்!

அந்தவகையில், புகாட்டி சென்டோடைசி (Bugatti Centodieci) என்ற புதிய மாடலைதான் அந்நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் விலை 8.9 மில்லியன் கோடியாகும். இந்திய மதிப்பில் சுமார் ரூ. 63 கோடி என்று கூறப்படுகின்றது.

இந்த சென்டோடைசி மாடலில் வெறும் 10 யூனிட்டுகள் மட்டுமே தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. ஆகையால், சற்று ஸ்பெஷலான மடாலாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

ஜெட் விமானத்தை போட்டிக்கு அழைக்கும் புதிய புகாட்டி சென்டோடைசி கார்... மலைக்க வைக்கும் வேகம்!

இந்த காரின் வேகம் மலைக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. அதற்கேற்ப வகையில், அதீத திறனை வெளிப்படுத்தும் விதமாக, தரமான எஞ்ஜின் இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த எஞ்ஜினின் வேகத்தைச் சற்றும் குறைத்துவிடாத வண்ணம், எடைக்குறைந்த மற்றும் அதிக வலிமை கொண்ட கார்பன் ஃபைபர் ஃபிரேம்களைக் கொண்டு சென்டோடைசி கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஜெட் விமானத்தை போட்டிக்கு அழைக்கும் புதிய புகாட்டி சென்டோடைசி கார்... மலைக்க வைக்கும் வேகம்!

ஆகையால், இக்கார் ஒரு குதிரை திறன் வேகத்தில் இயங்கும்போது 2.5 பவுண்டுகளை வெளிப்படுத்தும் வகையில் சக்தி வாய்ந்ததாக இருக்கின்றது.

ஜெட் விமானத்தை போட்டிக்கு அழைக்கும் புதிய புகாட்டி சென்டோடைசி கார்... மலைக்க வைக்கும் வேகம்!

இந்த சென்டோடைசி காரை, புகாட்டி நிறுவனம், அதன் இபி 110 மாடலை தழுவி உறுவாக்கியுள்ளது. இதன் பின்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள 5 காற்று உள்செல்லும் வழிகளைப் பார்த்தாலே இது நமக்கு தெரிந்துவிடும். இத்துடன், பின் பக்கத்திற்கான எல்இடி மின் விளக்குகளும் அதில் பொருத்தப்பட்டுள்ளது.

MOST READ: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வாங்கிய புதிய காரின் விலை ரூ.11 கோடி... மலைக்க வைக்கும் பின்னணி...

ஜெட் விமானத்தை போட்டிக்கு அழைக்கும் புதிய புகாட்டி சென்டோடைசி கார்... மலைக்க வைக்கும் வேகம்!

மேலும், சென்டோடைசி காரின் அதீத வேகத்திற்கு சற்றும் இடையூறு அளிக்காத வகையில், காரின் ஏரோடைனமிக் மிகவும் கணகச்சிதமான முறையில் கையாளப்பட்டுள்ளது.

MOST READ: ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக பள்ளிக் கல்வித்துறை: என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஜெட் விமானத்தை போட்டிக்கு அழைக்கும் புதிய புகாட்டி சென்டோடைசி கார்... மலைக்க வைக்கும் வேகம்!

ஆகையால், சிறிதளவும் காற்றில் தடைபடாமல், அதனை கிழித்துக்கொண்டு அதிவேகமாக செல்லும் வகையில் ஏரோடைனமிக் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த கார் வெறும் 2.4 செகண்டுகளிலேயே மணிக்கு 0-த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை தொட்டு விடுகின்றது.

MOST READ: உயரும் ராயல் என்பீல்டு 650 ட்வின் பைக்குகளின் விலை... எவ்வளவு, எப்போது தெரியுமா...?

ஜெட் விமானத்தை போட்டிக்கு அழைக்கும் புதிய புகாட்டி சென்டோடைசி கார்... மலைக்க வைக்கும் வேகம்!

அதேபோன்று, 0த்தில் இருந்து 200 கிமீ என்ற வேகத்தை 6.1 விநாடிகளிலும், 13.1 விநாடிகளில் 300 கிமீ என்ற வேகதத்தையும் இந்த கார் எட்டி விடுகின்றது.

இந்த மலைக்க வைக்கும் வேகம், ஜெட் விமானத்தையே வம்பிற்கு இழுக்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் டாப் ஸ்பீட் மணிக்கு 380 கிமீ வேகம் ஆகும்.

ஜெட் விமானத்தை போட்டிக்கு அழைக்கும் புதிய புகாட்டி சென்டோடைசி கார்... மலைக்க வைக்கும் வேகம்!

இந்த அதீத வேகத்தை வெளிப்படுத்தும் வகையில், 8.0 லிட்டர் டபிள்யூ16 எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 1,600 பிஎஸ் பவரையும், 1,600 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. அதேசமயம், இந்த கார் புகாட்டியின் அதிக திறன் வாய்ந்த காரான சிரோனைக் காட்டிலும் 100 பிஎஸ் பவரை அதிகம் வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.

ஜெட் விமானத்தை போட்டிக்கு அழைக்கும் புதிய புகாட்டி சென்டோடைசி கார்... மலைக்க வைக்கும் வேகம்!

இந்த காருக்கு சிறப்பான அலங்காரத்தைக் கொடுக்கும் வகையில், லா வோய்டர் நோய்ர் மாடலின் ஸ்டார்க் கான்ட்ராஸ்டு நிறத்துடன் கூடிய வெள்ளை நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், கவர்ச்சிகரமான தோற்றத்திற்காக கிடைமட்ட தோற்றத்தினாலான ஹெட்லேம்ப், புத்தம் புதிய எல்இடி மின் விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஜெட் விமானத்தை போட்டிக்கு அழைக்கும் புதிய புகாட்டி சென்டோடைசி கார்... மலைக்க வைக்கும் வேகம்!

இத்துடன், நிரந்தரமான இறக்கை அமைப்பு பின்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. இது காருக்கு சிறப்பான ரேஸ் வாகன தோற்றத்தை வழங்குகின்றது. மேலும், இந்த ஸ்டைலை சற்று எடுப்பாக காட்டும் வகையில் 7 இன்ச் அளவிலான வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது, புகாட்டி இபி110எஸ் மடாலில் இடம் பெற்றிருப்பதைப் போன்று காட்சியளிக்கின்றது.

ஜெட் விமானத்தை போட்டிக்கு அழைக்கும் புதிய புகாட்டி சென்டோடைசி கார்... மலைக்க வைக்கும் வேகம்!

புகாட்டி நிறுவனம், இந்த காரை தனது 110ம் ஆண்டை முன்னிட்டு மட்டும் உருவாக்கவில்லை. கூடுதலாக, புகாட்டி இபி110 எஸ் மாடலுக்கு மரியாதை செய்யும் வகையிலும் தயார் செய்துள்ளது. இதன்காரணமாகவே, சில சிறப்பம்சங்கள் இரண்டு மாடல்களிலும் ஒரே மாதிரியானதாக காட்சியளிக்கின்றது.

ஜெட் விமானத்தை போட்டிக்கு அழைக்கும் புதிய புகாட்டி சென்டோடைசி கார்... மலைக்க வைக்கும் வேகம்!

இந்த புத்தம் புதிய புகாட்டி சென்டோடைசி கார் வருகின்ற 2021ம் ஆண்டிற்கு பின்னர் இருந்தே டெலிவரி செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேசமயம், புகாட்டி தயாரித்து வரும் 10 யூனிட்டுகளுக்குமான புக்கிங் ஏற்கனவே நிறைவுற்றுவிட்டதாகவும், அவை புகாட்டியின் விற்பனை அறிவிப்பிற்கு செய்யப்பட்டுவிட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெட் விமானத்தை போட்டிக்கு அழைக்கும் புதிய புகாட்டி சென்டோடைசி கார்... மலைக்க வைக்கும் வேகம்!

புகாட்டி நிறுவனம், அதன் இபி110 மாடலை கடந்த 1991ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி அறிமுகம் செய்தது. இபி 110 என்பது புகாட்டி நிறுவனத்தின் இயக்குநரான, எட்டோர் புகாட்டியின் 110வது ஆண்டை முன்னிட்டு இப்பெயர் வைக்கப்பட்டது.

ஜெட் விமானத்தை போட்டிக்கு அழைக்கும் புதிய புகாட்டி சென்டோடைசி கார்... மலைக்க வைக்கும் வேகம்!

இந்த கார் முழுக்க முழுக்க அலுமினியத்தால் கட்டமைக்கப்பட்டதாகும். மேலும், இதன் கதவுகள் லம்போர்கினி ரகத்தினாலான சிசர் டூர்களைக் கொண்டுள்ளது. இத்துடன், குதிரைப் போன்ற தோற்றத்தைக் கொண்ட ரேடியேட்டர் மற்றும் கார்பன் ஃபைபர் சேஸிஸால் ஆன வி12 561 எச்பி எஞ்ஜின் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #புகாட்டி #bugatti
English summary
New Bugatti Centodieci Showcased. Read In Tamil.
Story first published: Saturday, August 17, 2019, 16:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X