ஃபெராரி நிறுவனத்தின் புதிய ரோமா ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்

ஃபெராரி நிறுவனத்தின் புதிய ரோமா ஸ்போர்ட்ஸ் காரின் படங்கள், தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த காரின் முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஃபெராரி நிறுவனத்தின் புதிய ரோமா ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்

ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் உலக புகழ்பெற்ற ஃபெராரி நிறுவனம் கிராண்ட் டூரர் ரகத்தில் இந்த புதிய ரோமா காரை உருவாக்கியிருக்கிறது. ஃபெராரி நிறுவனத்தின் பிரபலமான 250 ஜிடி பெர்லினேட்டா லஸ்ஸோ மற்றும் 250 ஜிடி 2+2 ஆகிய கார்களின் கட்டமைப்பு யுக்திகளை மனதில் வைத்து இந்த காரை உருவாக்கி இருக்கிறது.

இத்தாலியின் தலைநகர் ரோம் நகரை குறிக்கும் வகையில் ரோமா என்று தனது புதிய காருக்கு பெயரிட்டுள்ளது ஃபெராரி. வழக்கம்போல் ஃபெராரி கார்களுக்கு உரிய தனித்துவமான டிசைன் அம்சங்களை தாங்கி வந்துள்ளது புதிய ரோமா ஸ்போர்ட்ஸ் கார்.

ஃபெராரி நிறுவனத்தின் புதிய ரோமா ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்

இந்த புதிய ஃபெராரி காரில் 3.9 லிட்டர் வி8 டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 611 பிஎச்பி பவரையும், 760 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த காரில் 8 ஸ்பீடு F-1 டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் இணைக்கப்ட்டு இருக்கிறது.

இந்த புதிய ஸ்போர்ட்ஸ் கார் 0 - 100 கிமீ வேகத்தை 3.4 வினாடிகளிலும், 0 - 200 கிமீ வேகத்தை 9.3 வினாடிகளிலும் எட்டிவிடும் திறன் வாய்ந்தது. மணிக்கு 320 கிமீ வேகத்தை தொடும் வல்லமை பொருந்தியதாக வந்துள்ளது.

ஃபெராரி நிறுவனத்தின் புதிய ரோமா ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்

புதிய ஃபெராரி ரோமா கார் 4,656 மிமீ நீளமும், 1,974 மிமீ அகலமும், 1,301 மிமீ உயரமும் கொண்டுள்ளது. இந்த காரின் வீல் பேஸ் நீளம் 2,670 மிமீ ஆக உள்ளது. 80 லிட்டர் கொள்திறன் கொண்ட எரிபொருள் கலன் உள்ளது. இந்த காரில் 272 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது. இதனை 345 லிட்டர் கொள்திறன் கொண்டதாக அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.

ஃபெராரி நிறுவனத்தின் புதிய ரோமா ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்

புதிய ஃபெராரி ரோமா காரில் புதிய சேஸீ பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. எதிர்காலத்தில் இதே தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் சேஸீதான் ஃபெராரி கார்களில் பயன்படுத்தப்பட இருக்கிறது. இலகு எடை, அதிக உறுதித்தன்மை மற்றும் சிறப்பான கையாளுமையை இந்த சேஸீ வழங்கும்.

புதிய ஃபெராரி ரோமா காரில் முழுமையான மேட்ரிக்ஸ் எல்இடி அடாப்டிவ் ஹெட்லைட்டுகள் உள்ளன. சிறப்பான காற்று குளிர்விப்பு முறையை வழங்கும் வடிவமைப்புடன் க்ரில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் டியூவல் காக்பிட் கான்செப்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. ஓட்டுனருக்கும், சக பயணிக்கும் தனித்தனியான அமைப்பை இந்த கார் பெற்றிருக்கிறது.

ஃபெராரி நிறுவனத்தின் புதிய ரோமா ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்

இந்த காரில் புதிய ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 16 அங்குல திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது. 8.4 அங்குல செங்குத்து திரை அமைப்புடன் இன்ஃபோடெயின்மென்ட் உள்ளது. இந்த காரில் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் உள்பட ஓட்டுனருக்கான ஏராளமான கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்கள் உள்ளன. சக பயணிக்கும் டேஷ்போர்டில் தொடுதிரை அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரில் இரண்டு முன் இருக்கைகளும், பின்புறத்தில் இரண்டு சிறிய இருக்கைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த கூபே கார் தனித்துவமான ஃபெராரி காராக இருக்கும். அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் வெளிநாடுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. அஸ்டன் மார்ட்டின் வான்டேஜ், மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி கார்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
மேலும்... #ஃபெராரி #ferrari
English summary
Ferrari has revealed a new grand tourer type sports car christened as Roma.
Story first published: Friday, November 15, 2019, 18:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X