இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...

மஹிந்திரா-ஃபோர்டு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாகவுள்ள சி-எஸ்யூவி ரக கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...

இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா (Mahindra) மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு (Ford) ஆகிய இரண்டு நிறுவனங்களும், இந்தியா உள்பட வளர்ந்து வரும் நாடுகளுக்கு, எலெக்ட்ரிக் கார்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பிளாட்பார்ம்களை உருவாக்குவதற்காக ஒன்றாக கை கோர்த்துள்ளன. இதுதவிர மார்க்கெட்டில் தங்கள் நிலையை உயர்த்தி கொள்வதற்காகவும், இரு நிறுவனங்களும் ஒன்றுக்கொன்று உதவி செய்து கொள்ளவுள்ளன.

Note: Images used are for representational purpose only.

இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...

மஹிந்திரா மற்றும் ஃபோர்டு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாக்கப்படும் முதல் மாடல் 2020ம் ஆண்டின் இறுதியில் வரவுள்ளது. புதிய ஃபோர்டு சி-செக்மெண்ட் எஸ்யூவி (C-segment SUV) காரானது, 2020ம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்படும் எனவும், 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கும் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...

மஹிந்திரா நிறுவனம் ஆல் நியூ எக்ஸ்யூவி500 எஸ்யூவி (Mahindra XUV500 SUV) காரை, 2020ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த அடுத்த தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் பிளாட்பார்மைதான், புதிய ஃபோர்டு சி-எஸ்யூவி பயன்படுத்தி கொள்ளவுள்ளது என்பது ஆச்சரியமளிக்கும் விஷயம்.

இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...

பிளாட்பார்ம் மட்டுமல்லாது, அடுத்த தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் இன்ஜினையும், புதிய ஃபோர்டு சி-எஸ்யூவி பகிர்ந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் அடுத்த தலைமுறை எக்ஸ்யூவி500 காரை உற்பத்தி செய்யப்படவுள்ள மஹிந்திரா நிறுவனத்தின் தொழிற்சாலையில்தான், புதிய ஃபோர்டு சி-எஸ்யூவி காரும் உருவாக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எங்களின் சிறந்த கார் செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...

பிளாட்பார்ம் மற்றும் இன்ஜின் ஆகியவை மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து வந்தாலும், ஃபோர்டு சி-எஸ்யூவி காரானது ஃபோர்டு நிறுவனத்திற்கே உரித்தான புதிய டிசைன் மற்றும் இன்டீரியர்களை பெற்றிருக்கும். இதற்கான பணிகளில் ஃபோர்டு நிறுவனத்தின் இன்ஜினியர்கள் ஈடுபட்டுள்ளனர். 5 மற்றும் 7 சீட்டர் மாடல்களில், புதிய ஃபோர்டு சி-எஸ்யூவி அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எங்களின் சிறந்த பைக் செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...

இதன் டிசைன் மற்றும் இன்டீரியர்கள் தொடர்பாக வேறு விரிவான தகவல்கள் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை என்றாலும், டிரெண்ட்டிங்கில் உள்ள அனைத்து வசதிகள் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டியுடன் கூடிய பெரிய SYNC3 இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், சன்ரூஃப், லெதர் இருக்கைகள், ட்யூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட் உடன் கூடிய ஸ்மார்ட் கீ எண்ட்ரி உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படலாம்.

எங்கள் நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ் மற்றும் டிரிக்ஸ் செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...

புதிய ஃபோர்டு சி-எஸ்யூவி காரில், ஆல் நியூ 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த இன்ஜினை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 180 பிஎச்பி பவரை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த இன்ஜின், முதலில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

வேடிக்கையான வைரல் வீடியோக்களை காணவும், ஆஃப் பீட் செய்திகளை படிக்கவும் இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...

பிஎஸ்-6 (BSVI) மாசு உமிழ்வு விதிகளுக்கு இணங்கும் வகையில் இந்த இன்ஜின் இருக்கும். புதிய ஃபோர்டு சி-எஸ்யூவி காரின் பெட்ரோல் வெர்ஷனும் அறிமுகம் செய்யப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதன் இன்ஜின் குறித்த தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியிடப்படவில்லை. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் என 2 வெர்ஷன்களும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. டாடா ஹாரியர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுடன் இது போட்டியிடும்.

தமிழ் டிரைவ்ஸ்பார்க்கில் அதிகம் வாசிக்கப்பட்ட டாப் 3 செய்திகள்

    Most Read Articles
    மேலும்... #ஃபோர்டு #ford
    English summary
    New Ford C-SUV To Be Launched In India In 2021. Read in Tamil
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X