இதுவரை பார்த்திராத நீளத்தில் 2020 ஹோண்டா சிட்டி சோதனை ஓட்டம்...

பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்ட ஹோண்டா சிட்டி கார் கடந்த மாதம் தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியாவிலும் இந்த கார் அறிமுகமாகவுள்ளது.

இதுவரை பார்த்திராத நீளத்தில் 2020 ஹோண்டா சிட்டி சோதனை ஓட்டம்...

இதனால் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள இந்த கார் முந்தைய மாடலை விட நீளமாக உள்ளது. இதனால் இதன் போட்டி கார்களான மாருதி சியாஸ் (4490 மிமீ) மற்றும் ஹூண்டாய் வெர்னாவை (4440 மிமீ) விட அதிக நீளத்தை பெற்றுள்ள இந்த காரின் தற்போதைய நீளம் 4553 மிமீ ஆகும். அதுவே தற்சமயம் விற்பனையாகி வரும் ஹோண்டா சிட்டியின் நீளம் 4440 மிமீ ஆகும்.

இதுவரை பார்த்திராத நீளத்தில் 2020 ஹோண்டா சிட்டி சோதனை ஓட்டம்...

நீளம் மட்டுமின்றி இந்த காரின் அகலமும் 1748 மிமீ அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சிறந்த முறையில் விற்பனையாகி வரும் ஹோண்டா சிவிக்-ன் வடிவமைப்பை பெற்றுள்ள இந்த 2020 ஹோண்டா சிட்டி, கூர்மையான ஹெட்லேம்ப்ஸ், எல்இடிக்கு மாற்றப்பட்ட முன்புற மற்றும் பின்புற ஹெட்லைட்கள், ஹோண்டா நிறுவனத்திற்கே உரிய க்ரோம் பார், ஸ்டைலிஷ் ரூஃப் லைன் மற்றும் பெரிய ஓஆர்விஎம்-களை கொண்டுள்ளது.

இதுவரை பார்த்திராத நீளத்தில் 2020 ஹோண்டா சிட்டி சோதனை ஓட்டம்...

இவை மட்டுமின்றி சுறாவின் துடுப்பு போன்ற ஆண்டெனாவையும், சிறிய அளவிலான டெயில் பகுதியையும் மற்றும் செதுக்கியது போன்ற முன்புறத்தையும் இந்த கார் பெற்றுள்ளது. உட்புறத்தில் கூடுதலான காலியிடங்களை இந்த கார் பெற்றுள்ளது.

இதுவரை பார்த்திராத நீளத்தில் 2020 ஹோண்டா சிட்டி சோதனை ஓட்டம்...

இரு விதமான நிறங்களில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் உடன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், புதிய தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் அமைப்பு மற்றும் எம்ஜி ஹெக்டர் மற்றும் கியா செல்டோஸ் மாடல்களில் உள்ள கனெக்டெட் கார் தொழிற்நுட்பமும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை பார்த்திராத நீளத்தில் 2020 ஹோண்டா சிட்டி சோதனை ஓட்டம்...

ஹோண்டா தாய்லாந்து நிறுவனம் புதிய ஹோண்டா சிட்டி காரின் எரிபொருள் புதிய 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினால் 33 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. ஆனால் இந்த என்ஜின் இந்திய அறிமுக காரில் கொடுக்கப்படுமா என்பது தெளிவாக தெரியவில்லை.

இதுவரை பார்த்திராத நீளத்தில் 2020 ஹோண்டா சிட்டி சோதனை ஓட்டம்...

இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகமாகவுள்ள பிஎஸ்6 ஹோண்டா சிட்டி காரில் 1.5 லிட்டர் ஐ-விடிஇசி பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினும் வழங்கப்படவுள்ளது. ட்ரான்ஸ்மிஷன் அமைப்புகளாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை பார்த்திராத நீளத்தில் 2020 ஹோண்டா சிட்டி சோதனை ஓட்டம்...

இந்த காரின் அதிக விலையுடைய வேரியண்ட்டில் உள்ள 1.5 லிட்டர் ஐ-விடிஇசி பெட்ரோல் என்ஜினுடன் ஐ-எம்எம்டி தொழிற்நுட்பத்தின் சிறிய வெர்சனான இ:எச்இவி மில்ட் ஹைப்ரீட் சிஸ்டமும் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஹோண்டா சிட்டி கார் தாய்லாந்தில் ரூ.13.7 லட்ச ஆரம்ப விலையுடன் விற்பனையாகி வருகிறது.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
2020 Honda City Led Headlights
Story first published: Saturday, December 7, 2019, 15:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X