நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின் அறிமுகமான பென்ட்லீயின் புதிய கார்... கண்கவரும் ஸ்பெஷல் புகைப்படங்கள்..

பென்ட்லீ நிறுவனத்தின் ப்ளையிங் ஸ்பர் காரின் மூன்றாம் தலைமுறை மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் சிறப்பு தகவல் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின் அறிமுகமான பென்ட்லீயின் புதிய கார்... கண்கவரும் ஸ்பெஷல் புகைப்படங்கள்...

நீண்ட நாள் காத்திருப்பான, இரண்டு ஆண்டுகள் எதிர்பார்பிற்கு பின் கான்டினென்டல் ஜிடி, மூன்றாம் தலைமுறை பென்ட்லீ ப்ளையிங் ஸ்பர் சொகுசு கார்களின் அறிமுகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை கார்வேல் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின் அறிமுகமான பென்ட்லீயின் புதிய கார்... கண்கவரும் ஸ்பெஷல் புகைப்படங்கள்...

பென்ட்லீயின் இந்த நான்கு கதவு கொண்ட கிராண்ட் டூரர் மாடல் ஸ்போர்ட்ஸ் ரக செடான் அமைப்பையும், மாடர்ன் ரக சொகுசு காராகவும் காட்சியளிக்கின்றது. அதற்கேற்ப வகையில், இந்த புதிய ப்ளையிங் ஸ்பர் காரின் தோற்றம், வடிவமைப்பு, மற்றும் தொழில்நுட்ப வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின் அறிமுகமான பென்ட்லீயின் புதிய கார்... கண்கவரும் ஸ்பெஷல் புகைப்படங்கள்...

அந்த வகையில், தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைக் காட்டிலும் புதிய ப்ளையிங் ஸ்பர் காருக்கு நீண்ட வீல் பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அது, 5.1 இன்ச்சாக உள்ளது. இந்த நடவடிக்கையால், காரில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கு கூடுதலான இட வசதியும், லக்சூரி உணர்வையும் ஏற்படுத்துகின்றது.

நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின் அறிமுகமான பென்ட்லீயின் புதிய கார்... கண்கவரும் ஸ்பெஷல் புகைப்படங்கள்...

ஆனால், தோற்றம் வாரியாக பார்த்தோமேயானால், பழைய மாடலை ஒத்ததாகவே இருக்கின்றது. ஆகையால் இதில் பெரியளவில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை. இந்த காரின் முன் பக்கத்தில், பென்ட்லீ நிறுவனத்திற்கே உரித்தான பாரம்பரிய க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டடுள்ளது. இது, ஐகானிக் மாடலான, 1957 பென்ட்லீ எஸ்1 கான்டினென்டல் ப்ளையிங் ஸ்பர் மாடலில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின் அறிமுகமான பென்ட்லீயின் புதிய கார்... கண்கவரும் ஸ்பெஷல் புகைப்படங்கள்...

அதேபோன்று, ஜிடி மாடலில் வழங்கப்பட்டுள்ள அத ரகத்திலான எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லை மற்றும் டெயில் லைட்டுகளும் இந்த புதிய காருக்கு வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, காரின் ரம்மியமான லுக்கிற்கு பல்வேறு நடவடிக்கைகள், பென்ட்லீ ப்ளையிங் ஸ்பர் கார் மீது தொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், பல ஸ்போக்ஸ் கம்பிகளைக் கொண்ட 21 இன்சிலான வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின் அறிமுகமான பென்ட்லீயின் புதிய கார்... கண்கவரும் ஸ்பெஷல் புகைப்படங்கள்...

இதைத்தொடர்ந்து, மிக முக்கியமாக காரின் வெளிப்புற பகுதியில், அதாவது பேனட்டுக்கு மேல் பகுதியில், பறக்கும் தோற்றத்திலான 'பி' பொருத்தப்பட்டுள்ளது. இதனை எலக்ட்ரானிக் மூலம், உள் இழுத்துக் கொள்ளுதல் மற்றும் வெளியேக் கொண்டு வருதல் முடியும். ஆகையால், இதனை தேவைப்படும்போது, காட்சிப்படுத்தியும், இல்லையெனில் மறைத்தும் வைத்துக்கொள்ளலாம்.

நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின் அறிமுகமான பென்ட்லீயின் புதிய கார்... கண்கவரும் ஸ்பெஷல் புகைப்படங்கள்...

பென்ட்லீ நிறுவனம் இந்த காரை சிறப்பாக 17 வண்ண தேர்வில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. அதேபோன்று, அதன் இன்டீரியரிலும் 15 வண்ணங்கள் மற்றும் 3டி டைமண்ட் டைப்பிலான க்வில்டட் லெதர் இன்செர்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இது காருக்கு லக்சூரியஸ் லுக்கினை வழங்குகின்றது.

நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின் அறிமுகமான பென்ட்லீயின் புதிய கார்... கண்கவரும் ஸ்பெஷல் புகைப்படங்கள்...

இத்துடன் சிறப்பு தொழில்நுட்ப வசதிகளாக, 12.3 இன்சிலான ரொடேட்டிங் டச் ஸ்கிரீன், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 19 ஸ்பீக்கர்களுடன் கூடிய நயிம் மியூசிக் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின் அறிமுகமான பென்ட்லீயின் புதிய கார்... கண்கவரும் ஸ்பெஷல் புகைப்படங்கள்...

பென்ட்லீ நிறுவனத்தின் இந்த ப்ளையிங் ஸ்பர் காரில் சிறந்த திறனை வெளிப்படுத்தும் வகையில், 6.0 லிட்டர் டபிள்யூ12 எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 626 பிஎச்பி பவரையும், 900 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. இந்த திறன் அனைத்தும், அனைத்து வீல்களுக்கும் ட்யூவல் க்ளட்ச் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வழியாக கடத்தப்படுகின்றது.

நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின் அறிமுகமான பென்ட்லீயின் புதிய கார்... கண்கவரும் ஸ்பெஷல் புகைப்படங்கள்...

இந்த எஞ்ஜின் 0 த்தில் இருந்து 100 கிமீ வேகத்தைத் தொட வெறும் 3.8 விநாடிகளையே எடுத்துக்கொள்கின்றது. அதேசமயம், இது அதிகபட்சமாக மணிக்கு 333கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. நவீன தொழில் நுட்பத்திற்கும், திறனுக்கும் எந்தவித குறைச்சலுமின்றி உருவாகியுள்ள இந்த புதிய ப்ளையிங் ஸ்பர் கார், நீண்ட நாள் எதிர்பார்ப்பிற்கு தற்போது தான் அறிமுகமாகியுள்ளது. ஆனால், இதன் இந்தியா அறிமுகம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பது இந்தியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
மேலும்... #பென்ட்லீ #bentley
English summary
New-Gen Bentley Flying Spur Revealed. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X