புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் கார் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் கார் டோக்கியோ மோட்டார் ஷோ மூலமாக பொது பார்வைக்கு வந்துள்ளது. இந்த காரின் படங்கள், கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் கார் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் ஹோண்டா ஜாஸ் கார் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்தியாவில் ஜாஸ் என்ற பெயரில் விற்பனையில் இருக்கும் இந்த கார் ஜப்பான் உள்ளிட்ட பல வெளிநாடுகளில் ஃபிட் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், சந்தைப் போட்டியை மனதில் வைத்து புதிய தலைமுறை மாடலாக ஹோண்டா ஜாஸ் கார் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் கார் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

முதல் இரண்டு தலைமுறை மாடல்களிலிருந்து தற்போது விற்பனையில் உள்ள மூன்றாம் தலைமுறை மாடல் அனைத்திலும் முற்றிலும் புதிய மாடலாக வந்தது.ஆனால், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள நான்காம் தலைமுறை மாடலானது தற்போதைய ஜாஸ் மாடலைவிட டிசைன் அம்சங்களில் குறிப்பிட்ட அளவிலான மாற்றங்களுடன் அதிக சிறப்பம்சங்களுடன் வந்துள்ளது.

புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் கார் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

ஹோண்டா கார் நிறுவனத்தின் தாயகமான ஜப்பானில் நடைபெறும் டோக்கியோ சர்வதேச மோட்டார் ஷோவின் மூலமாக இந்த புதிய ஜாஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கார் பேஸிக், ஹோம், நெஸ், க்ராஸ்டார், லக்ஸ் ஆகிய 5 விதமான ஸ்டைலிங்கில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது கவனிக்கத்தக்க விஷயமாக இருக்கிறது. ஏனெனில், இந்த 5 வேரியண்ட்டுகளின் முகப்பு டிசைனில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மற்றும் வெவ்வேறு ஸ்டைலில் காட்சிக்கு நிறுத்தப்பட்டு இருக்கின்றன.

புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் கார் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

இந்த காரின் உட்புறத்தில் பெரிய அளவிலான தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நேரடி இன்டர்நெட் வசதி வழங்கப்பட்டுள்ளன. இதன் இன்டர்நெட் வசதியின் மூலமாக மும்முனை கட்டுப்பாட்டு மற்றும் தகவல்களை பெறும் வசதி உள்ளது. முதலாவது ரிமோட் கன்ட்ரோல் முறையில் ஸ்மார்ட்ஃபோன் மூலமாக எஞ்சினை ஸ்டார்ட் செய்வது/ அணைப்பது, ஏசி சிஸ்டத்தை கட்டுப்படுத்தும் பணிகளை செய்ய முடியும்.

புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் கார் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

இரண்டாவதாக, அவசர காலத்தில் அருகிலுள்ள உதவி மையங்களை நாடுவதற்கான வாய்ப்பை வழங்கும். அடுத்து, அவசர சமயத்தில் கார் இருப்பிடத்தை உதவி மைய அதிகாரிகள் கண்டுபிடிப்பதற்கான தகவல்களை வழங்கும்.

Most Read: அப்படிபோடு... புதிய எம்ஜி இசட்எஸ் எஸ்யூவி பெட்ரோல் மாடலிலும் வருகிறது

புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் கார் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

இந்த காரில் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு, இரண்டு ஸ்போக் ஸ்டீயரிங் வீல், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதிகளை அளிக்கும். இந்த காரில் மிக சொகுசான இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளதால், நீண்ட தூர பயணங்களுக்கு ஏதுவாக தெரிவிக்கப்படுகிறது.

Most Read: நூலிழையில் உயிர் தப்பிய வாகன ஓட்டி... அதிவேகமாக சென்ற கார் ஓவர் டேக் செய்யும் அதிர்ச்சி வீடியோ!

புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் கார் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

புதிய ஹோண்டா ஜாஸ் காரில் முன்புறத்திலும் கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, பல்வேறு பாதுகாப்பு வசதிகளை ஓட்டுனர் பெற முடியும். அத்துடன், இந்த காரில் 8 சோனார் எனப்படும் சென்சார்கள் உள்ளன. இதனை வைத்து மோதலை தவிர்ப்பதற்கான தானியங்கி பிரேக் சிஸ்டமும் செயல்படும்.

Most Read: வித்தியாசமான காரை ரொம்ப ஆசைப்பட்டு வாங்கிய நடிகை... என்ன கார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் கார் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

புதிய ஹோண்டா ஜாஸ் கார் ஜப்பானில் பெட்ரோல் எஞ்சின் மற்றும் பெட்ரோல் - மின் மோட்டார் கொண்ட ஹைப்ரிட் தேர்வுகளில் வர இருக்கிறது. அடுத்த ஆண்டு இந்த கார் இந்தியாவிலும் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகளில் விற்பனைக்கு கொண்டுவரப்படும்.

Most Read Articles

English summary
New Generation Honda Jazz has unveiled at 2020 Tokyo motor show.
Story first published: Wednesday, October 23, 2019, 10:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X