புதிய ஹோண்டா ஜாஸ் கார் ஹைப்ரிட் மாடலிலும் இந்தியாவில் அறிமுகமாகிறது!

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் கார் ஹைப்ரிட் மாடலிலும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய ஹோண்டா ஜாஸ் கார் ஹைப்ரிட் மாடலிலும் இந்தியாவில் அறிமுகமாகிறது!

இந்தியாவின் முதல் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மாடல் என்ற பெருமைக்குரிய மாடல் ஹோண்டா ஜாஸ். விற்பனையில் தனி மார்க்கெட்டை தக்க வைத்து வரும் ஹோண்டா ஜாஸ் கார் தற்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது. நான்காம் தலைமுறை மாடலாக அறிமுகமாக இருக்கும் புதிய ஹோண்டா ஜாஸ் கார் வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் டோக்கியோ மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய ஹோண்டா ஜாஸ் கார் ஹைப்ரிட் மாடலிலும் இந்தியாவில் அறிமுகமாகிறது!

பொதுவான தோற்றத்தில் பெரிய மாற்றங்கள் இருக்காது. ஆனால், முகப்பு மற்றும் பின்புற வடிவமைப்பில் புதிய மாற்றங்களுடன் வர இருக்கிறது. தொழில்நுட்ப அளவில் புதிய ஹோண்டா ஜாஸ் கார் சிறப்பாக மேம்படுத்தப்பட்டு இருக்கும்.

புதிய ஹோண்டா ஜாஸ் கார் ஹைப்ரிட் மாடலிலும் இந்தியாவில் அறிமுகமாகிறது!

மேலும், வழக்கம்போல் உட்புறத்தில் இடவசதியும் தாராளமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஃப்ளோட்டிங் அமைப்புடைய தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் வழங்கப்பட இருக்கிறது. அதேபோன்று முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு இடம்பெற இருக்கிறது.

புதிய ஹோண்டா ஜாஸ் கார் ஹைப்ரிட் மாடலிலும் இந்தியாவில் அறிமுகமாகிறது!

இந்த நிலையில், இந்த கார் இந்த ஆண்டு இறுதியில் வெளிநாடுகளில் ஃபிட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகள் மற்றும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் ஆப்ஷன்களை பெற்றிருக்கும்.

புதிய ஹோண்டா ஜாஸ் கார் ஹைப்ரிட் மாடலிலும் இந்தியாவில் அறிமுகமாகிறது!

குறிப்பாக, புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் காரில் ஹைப்ரிட் மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. தற்போது ஜப்பானில் விற்பனையாகும் ஹோண்டா ஜாஸ் காரில் ஹைப்ரிட் மாடல் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த மாடல் ஜப்பானின் சோதனை முறைகளில் லிட்டருக்கு 37 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய ஹோண்டா ஜாஸ் கார் ஹைப்ரிட் மாடலிலும் இந்தியாவில் அறிமுகமாகிறது!

இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணையாக இந்தியாவிலும் ஹோண்டா ஜாஸ் காரில் ஹைப்ரிட் மாடல் தேர்வு அளிக்கப்பட இருக்கிறது. புதிய ஹோண்டா சிவிக் காரில் இடம்பெற்றிருக்கும் ஹைப்ரிட் சிஸ்டத்தின் அடிப்படையில் மாறுதல்கள் செய்யப்பட்ட ஹைப்ரிட் சிஸ்டம் இந்த காரில் ஹோண்டா பயன்படுத்த இருக்கிறது.

புதிய ஹோண்டா ஜாஸ் கார் ஹைப்ரிட் மாடலிலும் இந்தியாவில் அறிமுகமாகிறது!

மேலும், புதிய ஹோண்டா ஜாஸ் கார் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனில் வர இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதுதவிர்த்து, தற்போது உள்ள 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு நிகராக மேம்படுத்தப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

Most Read Articles
English summary
New Gen Honda Jazz Will Get Hybrid Option In India.
Story first published: Thursday, May 9, 2019, 12:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X