2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...

இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகமாகவுள்ள 2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் மாடல் கடந்த அக்டோபர் மாதம் தாய்லாந்தில் அறிமுகமானது. இந்நிலையில் இந்த ட்ரக் மாடல் தாய்லாந்தில் தற்சமயம் நடைபெற்று வரும் 2019 மோட்டார் எக்ஸ்போவில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...

இசுஸு நிறுவனத்தின் 'இன்ஃபினைட் பொட்டன்ஷியல்' தீம்-ல் உருவாக்கப்பட்டுள்ள இந்த ட்ரக் மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தை கொண்டுள்ளது. இருப்பினும் ப்ரீமியம் பாகங்களையும் இந்த 2020 ட்ரக் பெற்றுள்ளது.

ட்ரக்கின் முன்புறம், ட்வின்-க்ரோம் ஸ்லாட் க்ரில், ப்ரோஜெக்டர் மற்றும் டிஆர்எல் உடன் உள்ள எல்இடி ஹெட்லைட்ஸ், செங்குத்து வடிவில் பொருத்தப்பட்ட ஃபாக் விளக்குகளை கொண்ட புதிய பம்பர் மற்றும் முந்தைய மாடலை விட முரட்டுத்தனமான தோற்றத்தை கொடுக்க புதிய ஸ்கிட் ப்ளேட் போன்றவற்றை கொண்டுள்ளது.

2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...

டி-மேக்ஸ் ட்ரக்கின் டாப் வேரியண்ட்டான வி-க்ராஸ் ட்ரிம்மை இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ள இசுஸு நிறுவனம், க்ரே நிறத்தை பெரிய ஃபென்டர்ஸிலும், கதவுகளின் ஹேண்டில்கள், ஓஆர்விஎம்-கள் மற்றும் மேற்புற தண்டவாளங்களுக்கும் கொடுத்துள்ளது.

2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...

பின்புறம், சதுர வடிவில் இரு எல்இடி டெயில் ஹெட்லைட்ஸையும் புதிய வடிவில் பின்புற கதவையும் பெற்றுள்ளது. 18 இன்ச்சில் கருப்பு நிறத்தில் அலாய் சக்கரங்களை இந்த 2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் ட்ரக் கொண்டுள்ளது. ட்ரக்கின் உட்புறத்தில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய 9 இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...

இந்த புதிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தால் டேஸ்போர்டு முழுவதும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஏசியின் கற்றைகள் கேபின் முழுவதும் முக்கோண வடிவில் பரவும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றுடன் 4.2 இன்ச் டிஜிட்டல் திரையுடன் உள்ள இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரும் உள்ளது. கண்காட்சியில் இடம்பெற்றுள்ள இந்த புதிய ட்ரக்கின் உட்புறம் முழுவதும் கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தால் நிரப்பட்டுள்ளது.

2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...

மற்றப்படி பாதுகாப்பு அம்சங்களாக, ஆறு காற்றுப்பைகள், நிலையான கண்ட்ரோல் சிஸ்டம், ஓட்டுனரால் காண முடியாத பகுதியையும் பார்க்கக்கூடிய வசதி, பின்புற க்ராஸ்-ட்ராபிக் அலார்ட், ட்ரக்கை விட்டு சிறிது சென்றாலே தானாக கதவுகள் லாக் ஆகும் வசதி, ட்ரக்கை இயக்குவதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்க லைட்டிங் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...

கண்காட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டி-மேக்ஸ் வி-க்ராஸ் ட்ரக்கில் 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 188 பிஎச்பி பவரையும் 450 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த என்ஜினுடன் 1.9 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வும் வழங்கப்படுகிறது. இந்த டீசல் என்ஜினானது 148 பிஎச்பி பவரையும் 350 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக வெளிப்படுத்துகிறது.

2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...

இந்த ட்ரக் இந்தியாவில் அடுத்த ஆண்டு, முதல் ஆறு மாதத்திற்கு உள்ளாகவே அறிமுகப்படுத்தப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ட்ரக் இந்தியாவில் நேரடியாக பிஎஸ்6 தரத்தில் தான் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: IndianAutosBlog

Most Read Articles
மேலும்... #இசுஸு #isuzu
English summary
2020 Isuzu D Max V Cross Debuts At Thai Motor Expo
Story first published: Tuesday, December 10, 2019, 19:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X