மஹிந்திரா தார் எஸ்யூவியின் சாஃப்ட் டாப் மாடலின் ஸ்பை படங்கள்

மஹிந்திரா தார் எஸ்யூவியின் சாஃப்ட் டாப் மாடலானது சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது. எமது ஸ்பை போட்டோகிராஃபர் ஜெயசூர்யா அனுப்பியுள்ள ஸ்பை படங்களையும், கூடுதல் தகவல்களையும் இந்த செய்தியில் காணலாம்.

ஆஃப்ரோடு எஸ்யூவி மார்க்கெட்டில் இந்தியர்களின் முதன்மையான தேர்வாக மஹிந்திரா தார் எஸ்யூவி உள்ளது. இந்த நிலையில், புதிய மாசு விதிகள், பாதுகாப்பு விதிகளுக்கு ஒப்பாகவும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வித்ததிலும் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா தார் எஸ்யூவியின் சாஃப்ட் டாப் மாடல் சோதனை!

கடந்த பல மாதங்களாக புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வைத்தும் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை வெளியான ஸ்பை படங்கள் அனைத்தும் ஹார்டு டாப் எனப்படும் உலோகத் தகடுகளால் மூடப்பட்ட ஹார்டு டாப் மாடலாக இருந்தன.

இந்த நிலையில், தற்போது எமது ஸ்பை போட்டோகிராஃபர் ஜெயசூர்யா அனுப்பி இருக்கும் படங்களில் மஹிந்திரா தார் எஸ்யூவியின் சாஃப்ட் டாப் எனப்படும் துணியால் மூடப்பட்ட கூரை அமைப்புடைய மாடல் சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த மாடலும் அங்க அடையாளங்கள் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் சோதனையில் வைக்கப்பட்டு இருக்கிறது. தற்காலிகமான டெயில் லைட்டுகள் விளக்குகள் பொருத்தப்பட்டு இருப்பதும் தெரிகிறது. ஸ்டீல் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

உட்புறத்தில் புதிய டேஷ்போர்டு அமைப்பும், அதில் சிறிய அளவிலான தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ஏசி சிஸ்டத்திற்கு ரோட்டரி டயல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் இடம்பெற்றிருக்கிறது.

மஹிந்திரா தார் எஸ்யூவியின் சாஃப்ட் டாப் மாடல் சோதனை!

இந்த காரில் 16 அங்குல ஸ்டீல் வீல்களும், 245/15 R16 அளவுடைய டயர்களும் பொருத்தப்ப்டடுள்ளன. எனவே, சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருப்பது விலை குறைவான வேரியண்ட்டாக வர இருப்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.

MOST READ: பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருக்கும் அட்டகாசமான விஷயங்கள்!

இந்த மாடலில் புதிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ளது. இது பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும். மேலும், இந்த எஞ்சின் 140 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வர உள்ளது.

MOST READ: சென்னை துறைமுகம் வழியாக கியா செல்டோஸ் காரின் ஏற்றுமதி துவங்கியது!

வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோர்ஸ் குர்க்கா எஸ்யூவிக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
The 2020 Mahindra Thar has been spotted testing ahead of its launch expected launch next year. The spy pics reveal a completely camouflaged soft top prototype model actively testing ahead of its expected showcase at 2020 Auto Expo.
Story first published: Thursday, October 17, 2019, 13:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more