புதிய தலைமுறை ரேஞ்ச்ரோவர் எவோக் இந்திய அறிமுக விபரம்

புதிய தலைமுறை ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ரேஞ்ச்ரோவர் எவோக் இந்திய அறிமுக விபரம்

லேண்ட்ரோவர் நிறுவனம் ரேஞ்ச்ரோவர் பிராண்டில் பல எஸ்யூவி மாடல்களை விற்பனை செய்கிறது. இதில், அனைவரையும் கவர்ந்த விலை குறைவான பட்ஜெட் மாசலாக ரேஞ்ச்ரோவர் எவோக் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவி இந்தியாவிலும் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது.

புதிய ரேஞ்ச்ரோவர் எவோக் இந்திய அறிமுக விபரம்

இந்த நிலையில், வடிவமைப்பிலும், வசதிகளும் மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை எவோக் காரை லேண்ட்ரோவர் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. இந்த கார் வரும் பிப்ரவரி மாதம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய ரேஞ்ச்ரோவர் எவோக் இந்திய அறிமுக விபரம்

புதிய முகப்பு க்ரில் அமைப்பு, மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகள், கச்சிதமாக மாற்றப்பட்ட டெயில் லைட்டுகள் என பல்வேறு மாறுதல்களை இந்த எஸ்யூவி பெற்றிருக்கிறது. இதனால், இதன் தனித்துவமான தோற்றம் மேலும் மெருகு கூடி இருக்கிறது.

புதிய ரேஞ்ச்ரோவர் எவோக் இந்திய அறிமுக விபரம்

புதிய ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவியின் உட்புறத்திலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. புதிய டேஷ்போர்டு அமைப்பு, இரட்டை தொடுதிரைகளுடன் இன்ஃபோடெயின்மென்ட் சாதனம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

புதிய ரேஞ்ச்ரோவர் எவோக் இந்திய அறிமுக விபரம்

இந்த காரில் இரண்டு எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். முதலாவதாக 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 178 பிஎச்பி பவரையும், 430 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் கொண்டது. அடுத்து 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 246 பிஎச்பி பவரையும், 365 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

புதிய ரேஞ்ச்ரோவர் எவோக் இந்திய அறிமுக விபரம்

இந்த இரண்டு எஞ்சின்களிலுமே மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இரண்டிலுமே 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ரேஞ்ச்ரோவர் எவோக் இந்திய அறிமுக விபரம்

புதிய ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவியின் ஆஃப்ரோடு திறனும் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன்படி, இதன் வாட்டர் வேடிங் எனப்படும் நீர் நிலைகளை கடந்து செல்லும் தகவமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, 600 மிமீ ஆழம் வரையிலான நீர் நிலைகளை கடக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

புதிய ரேஞ்ச்ரோவர் எவோக் இந்திய அறிமுக விபரம்

அதேபோன்று, இந்த காரில் ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு உதவும் டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் 2.0 தொழில்நுட்பம் இடம்பெற்றிருக்கிறது. மேலும், பார்க்கிங் மற்றும் கரடுமுரடான சாலைகளில் செல்லும்போது சக்கரங்களை தடைகள் மீது மோதாமல் செலுத்துவதற்கான வசதியை அளிக்கும் க்ளியர்சைட் க்ரவுண்ட் வியூ என்ற 180 டிகிரி கோண கேமரா தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளது.

Most Read Articles
மேலும்... #லேண்ட்ரோவர்
English summary
According to report, New Generation Range Rover Evoque is scheduled to be launched in India in February 2020.
Story first published: Saturday, December 14, 2019, 11:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X