க்ராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார்!

புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் க்ராஷ் டெஸ்ட்டில் சிறப்பான தர மதிப்பீட்டை பெற்று அசத்தி இருக்கிறது. இதுதொடர்பான விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த மாதம் புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் உலகளாவிய அளவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த கார் அடுத்த ஆண்டு இரண்டாவது காலாண்டில் இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் விற்பனையாகும் கார்களை க்ராஷ் டெஸ்ட் செய்து பாதுகாப்பு தரத்தை யூரோ என்சிஏபி அமைப்பு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா காரை யூரோ என்சிஏபி அமைப்பு க்ராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தி முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது.

க்ராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார்!

இதில், புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் அதிகபட்ச நட்சத்திர புள்ளிகளை பெற்றுள்ளது. அதாவது, அதிகபட்சமான 5க்கு 5 என்ற நட்சத்திர தர மதிப்பீடுகளை பெற்று அசத்தி இருக்கிறது.

க்ராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார்!

புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா காரின் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் ஆம்பிஷன் வேரியண்ட்தான் க்ராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இடது பக்க ஸ்டீயரிங் வீல் பொருத்தப்பட்ட இந்த கார் 1,313 கிலோ எடை கொண்டது.

க்ராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார்!

முன்புறத்தில் டியூவல் ஏர்பேக்குகள், பக்கவாட்டில் தலை மற்றும் இடுப்புப் பகுதிகளை பாதுகாக்கும் ஏர்பேக்குகள் இந்த காரில் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, சீட் பெல்ட் ப்ரீடென்ஷனர் வசதியும் இடம்பெற்றிருந்தது.

க்ராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார்!

இந்த காரில் லேன் அசிஸ்ட், ஸ்பீடு அசிஸ்டென்ஸ், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள் மற்றும் மோதல் தவிர்ப்பு தொழில்நுட்பங்களும் உள்ளன. இந்த 5 நட்சத்திர மதிப்பீடானது புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரின் PHEV வேரியண்ட்டை தவிர்த்து, பிற அனைத்து வேரியண்ட்டுகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

க்ராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார்!

க்ராஷ் டெஸ்ட்டில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 38 புள்ளிகளுக்கு 35.3 புள்ளிகளை பெற்றிருக்கிறது. அதாவது, பாதுகாப்பு அம்சங்களில் 100க்கு 92 சதவீதம் சிறப்பான மதிப்பீட்டை பெற்றிருக்கிறது. முன்புற மோதல் சோதனை, பக்கவாட்டு சோதனைகள் மூலமாக இது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

க்ராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார்!

மேலும், ஓட்டுனர் மற்றும் பயணிகளுக்கான பாதுகாப்பில் சிறந்த மற்றும் போதுமான பாதுகாப்பு அம்சங்களை பெற்றிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசமான மற்றும் பலவீனமான அம்சங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

க்ராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார்!

சிறியவர்களுக்கான பாதுகாப்பு அம்சத்தில் அதிகபட்சமாக 49 புள்ளிகளுக்கு 43.2 புள்ளிகளை பெற்றிருக்கிறது. 6 வயது முதல் 10 வயது குழந்தைகளுக்கு இந்த மதிப்பீடு பொருந்தும். அனைத்து விதத்திலும் சிறியவர்களுக்கான பாதுகாப்பு அம்சத்தில் சிறப்பானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

க்ராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார்!

இந்தியாவிலும் கார்களின் பாதுகாப்பு தரத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, இந்தியா வரும் புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா காரின் பாதுகாப்பு தரமும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
New Generation Skoda Octavia car has recieved 5 star safety rating in Euro NCAP crash test result.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X