புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் கார் இந்திய வருகை விபரம்!

புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் கார் இந்திய வருகை விபரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் கார் இந்திய வருகை விபரம்!

இந்தியாவின் மிட்சைஸ் செடான் கார் சந்தையில் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக ஸ்கோடா ரேபிட் கார் இருந்து வருகிறது. நேர்த்தியான டிசைன், சிறப்பான கட்டமைப்பு தரம், செயல்திறன் மிக்க எஞ்சின்கள் என சிறந்த மிட்சைஸ் செடான் கார் மாடலாக கூறலாம்.

புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் கார் இந்திய வருகை விபரம்!

ஆனால், ஸ்கோடா நிறுவனத்தின் சர்வீஸ் நெட்வொர்க் மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவைகளில் உள்ள சில குறைபாடுகள் காரணமாக, இந்த காருக்கு விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாமல் இருந்து வருகிறது.

புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் கார் இந்திய வருகை விபரம்!

இந்தியாவில் தற்போது 92 முதல் 95 சதவீதம் அளவுக்கு உள்நாட்டு உதிரிபாகங்களை பயன்படுத்தப்பட்டு வருவதாக ஸ்கோடா தெரிவிக்கிறது. இதன்மூலமாக, போட்டியாளர்களுக்கு சவாலான விலையில் தனது தயாரிப்புகளை நிலைநிறுத்தும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது.

புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் கார் இந்திய வருகை விபரம்!

இந்த நிலையில், புரொஜெக்ட் 2.0 திட்டத்தின்மூலமாக இந்தியாவில் ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு இதுவரை நிலவும் குறைபாடுகள் சரிசெய்யப்பட இருக்கின்றன. இதற்கு வலு சேர்க்கும் விதத்தில், பல புதிய மாடல்களும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் கார் இந்திய வருகை விபரம்!

அந்த வகையில், எம்க்யூவி ஏ0 ஐஎன் பிளாட்ஃபார்மில் புதிய எஸ்யூவி மாடல்களையும், இதர வகை கார்களையும் ஸ்கோடா ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதில், அனைவரின் ஆவலையும் தூண்டும் வகையில் புதிய செய்தி வெளியாகி இருக்கிறது.

புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் கார் இந்திய வருகை விபரம்!

ஆம். புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் காரின் இந்திய வருகை விபரம் குறித்த தகவலை ஆட்டோகார் இந்தியா தளம் வெளியிட்டு இருக்கிறது. இந்தியாவில் மட்டுமின்றி, இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கும் ரேபிட் காரை ஏற்றுமதி செய்யவும் ஸ்கோடா ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் கார் இந்திய வருகை விபரம்!

புதிய ஸ்கோடா ரேபிட் காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிக எரிபொருள் சிக்கனத்தையும், சிறப்பான செயல்திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும். ஆனால், டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்படாது.

புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் கார் இந்திய வருகை விபரம்!

புதிய ஸ்கோடா ரேபிட் கார் வரும் 2021ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா கார்களுடன் இந்த கார் போட்டி போடும்.

Source: Autocarindia

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
According to a media report, New generation Skoda Rapid is likely to be launched in India by 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X