புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அறிமுக விபரம்!

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் உலகளாவிய அறிமுகம் குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

 புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அறிமுக விபரம்!

ஹோண்டா நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான மாடலாக ஹோண்டா சிட்டி வலம் வருகிறது. குறிப்பாக, ஹோண்டா சிட்டி என்பது இந்தியர்களின் கவுரவச் சின்னமாக கருதப்படுகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை தக்க வைக்கும் விதத்தில், நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

 புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அறிமுக விபரம்!

இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் வைத்து இந்த கார் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், புதிய ஹோண்டா சிட்டி கார் அடுத்த மாதம் தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. உலக அளவில் முதலாவது மார்க்கெட்டாக தாய்லாந்தை சிட்டி காருக்கு தேர்வு செய்துள்ளது ஹோண்டா நிறுவனம்.

 புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அறிமுக விபரம்!

இதைத்தொடர்ந்து, மலேசியா மற்றும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் 2020 ஆட்டோ எக்ஸ்போவின் மூலமாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

 புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அறிமுக விபரம்!

புதிய ஹோண்டா சிட்டி கார் ஐந்தாவது தலைமுறை மாடலாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வடிவமைப்பில் முற்றிலும் புதிய மாடலாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. வெளிப்புறம், உட்புறத்தில் முற்றிலும் புதிய மாடலாக இருக்கும். நீள, அகலத்திலும் கூடுதலாக இருக்கும் என்று தெரிகிறது. ஹோண்டா சிவிக் காரின் சில டிசைன் அம்சங்கள் இந்த காரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.

 புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அறிமுக விபரம்!

புதிய ஹோண்டா சிட்டி காரில் முழுமையான எல்இடி லைட்டுகள், அலாய் வீல்கள், சன்ரூஃப், புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் ஆகிய பல்வேறு வசதிகளை பெற்றிருக்கும்.

 புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அறிமுக விபரம்!

இந்த காரில் 6 ஏர்பேக்ககுகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில் ஹோல்டு, ஸ்பீடு அலர்ட், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு வசதிகளையும் பெற்றிருக்கும்.

 புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அறிமுக விபரம்!

புதிய ஹோண்டா சிட்டி காரில் 1.5 லிட்டர் ஐ-டிடெக் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைகக்கும். இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வர இருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் வரும்.

 புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அறிமுக விபரம்!

தற்போதைய மாடலைவிட அதிக இடவசதி, சிறப்பான தொழில்நுட்ப அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை கவரும் டிசைன் அம்சங்களில் புதிய ஹோண்டா சிட்டி எதிர்பார்க்கப்படுகிறது. விலையும் அதிகரிக்கப்படும். மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Source: Key Auto

Most Read Articles
English summary
According to reports, New Gen Honda City car will be launched in Thailand by next month. Subsequent launches will follow later on with other Asian countries like Malaysia and India scheduled to get the new City in 2020.
Story first published: Sunday, October 6, 2019, 8:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X