காஷ்மீர் டூ கன்னியாகுமரி : சைக்கிளில் செல்ல இத்தனை நாட்கள் தானா..? புதிய கின்னஸ் சாதனை படைத்த இளைஞர

இந்திய இளைஞர் ஒருவர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரியைக் கடக்க மிகவும் குறைவான நாட்களை எடுத்துக் கொண்டு, புதிய உலக கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

கன்னியாகுமரி டூ காஷ்மீர்... சைக்கிளில் செல்ல இத்தனை நாட்கள் தானா..? புதிய கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்...!

இந்தியாவின் ஆரம்பம் மற்றும் முடிவு பகுதிகளாக கருதப்படும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான இரு எல்லைப் பகுதிகளையும் மிகவும் குறைவான கால கட்டத்தில் சைக்கிளில் பயணித்து இந்திய இளைஞர் ஒருவர் கடந்து சாதனைப் படைத்துள்ளார்.

ஹரியானா மாநிலம், ரோஹ்தக் பகுதியைச் சேர்ந்தவர் பன்னு. 36 வயதான இவர் கடந்த 2015ம் ஆண்டு முதல் இந்திய விமான படையில் இணைந்து பணியாற்றி வருகின்றார்.

கன்னியாகுமரி டூ காஷ்மீர்... சைக்கிளில் செல்ல இத்தனை நாட்கள் தானா..? புதிய கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்...!

தற்போது, கர்நாடக மாநிலம், பெங்களூருவில் குடிபுகுந்துள்ள, அவர் ஏரோநாடிக்கல் பொறியியல் பட்டதாரி ஆவார். இந்திய விமான படையில், ஹெலிகாப்டர்களைப் பராமரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றார். இவர் அவ்வப்போது, பணி இடைவெளியின்போது சைக்கிளிங் செய்வதை வாடிக்கையாக வைத்து வந்துள்ளார்.

கன்னியாகுமரி டூ காஷ்மீர்... சைக்கிளில் செல்ல இத்தனை நாட்கள் தானா..? புதிய கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்...!

இந்நிலையில், புதிய உலக சாதனைப் படைக்கும் விதமாக சைக்கிளிலேயே காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அவர் பயணித்துள்ளார்.

3,604 கிமீ இடைவெளியில் இருக்கும் இந்தியாவின் இவ்விரு முனைகளையும் தொடுவதற்கு அவர் 8 நாட்கள் 9 மணி நேரங்கள் மற்றும் 48 நிமிடங்களை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.

கன்னியாகுமரி டூ காஷ்மீர்... சைக்கிளில் செல்ல இத்தனை நாட்கள் தானா..? புதிய கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்...!

இதற்கு முன்பாக டெல்லியைச் சேர்ந்த விகாஷ் என்பவர் இதே கிமீ தொலைவை 10 நாட்கள், 3 மணி நேரங்கள் மற்றும் 32 நிமிடங்களில் கடந்திருந்தார். இந்த சாதனையை முறியடிக்கும் விதமாக மிகவும் குறைவான நேரத்தில் கடந்து, புதிய உலக கின்னஸ் சாதனையை பன்னு படைத்துள்ளார்.

கன்னியாகுமரி டூ காஷ்மீர்... சைக்கிளில் செல்ல இத்தனை நாட்கள் தானா..? புதிய கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்...!

கடந்த அக்டோபர் 21ம் தேதி அன்று அதிகாலை 1.49 மணியளவில் காஷ்மீரின் லால் சோவ்க் பகுதியில் இருந்து புறப்பட்ட பன்னு, 13 மாநிலங்களைக் கடந்து கன்னியாகுமரியை கடந்த 29ம் தேதி காலை 11.37 மணியளவில் அடைந்துள்ளார்.

கன்னியாகுமரி டூ காஷ்மீர்... சைக்கிளில் செல்ல இத்தனை நாட்கள் தானா..? புதிய கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்...!

ஒட்டுமொத்தமாக 3,600 கிலோமீட்டருக்கும் அதிகமான இந்த இடைவெளியைக் கடக்க அவர் 8 நாட்கள் 9 மணி நேரங்களை எடுத்துக் கொண்டார்.

இந்த புதிய சாதனையை அவர் #KashmirToKanyakumari என்ற ஹேஸ்டேக்கின்கீழ் செய்துள்ளார்.

கன்னியாகுமரி டூ காஷ்மீர்... சைக்கிளில் செல்ல இத்தனை நாட்கள் தானா..? புதிய கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்...!

இதற்கு முன்பாகவும், கடந்த 2017ம் ஆண்டு இதேபோன்றதொரு சாதனையில் அவர் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது. அப்போது, 2,200 கிமீ என்ற ஆஸ்திரியாவின் சுற்றுப்பாதையைக் கடந்து சாதனைப் படைத்திருந்தார். இதுதேபோன்று, பல்வேறு சாதனைகளை சைக்கிளிங்கில் அவர் படைத்துள்ளார்.

கன்னியாகுமரி டூ காஷ்மீர்... சைக்கிளில் செல்ல இத்தனை நாட்கள் தானா..? புதிய கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்...!

இந்நிலையிலேயே, இந்த கே2கே (கன்னியாகுமரி முதல் காஷ்மீர்) புதிய சாதனையை பன்னு படைத்துள்ளார். அதேசமயம், இந்த புதிய சாதனையை படைக்க அவர் கடுமையாக உழைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில், அவர் நாள் ஒன்றிற்கு 450 கிமீ வரை கடப்பதற்காக 20 முதல் 21 மணி நேரம் வரை சைக்களிங் செய்துள்ளார். இதனாலயே முந்தைய வீரரின் சாதனையை பன்னுவால் முறியடிக்க முடிந்துள்ளது.

கன்னியாகுமரி டூ காஷ்மீர்... சைக்கிளில் செல்ல இத்தனை நாட்கள் தானா..? புதிய கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்...!

இவருக்கு உதவியாக எட்டு பேர் கொண்ட குழு இரு கார்களில் பயணித்துள்ளனர். தொடர்ந்து, கின்னஸ் அதிகாரிகள் வழி வகுத்த பாதைகளின் வழியே பன்னு இந்த முயற்சியை மேற்கொண்டு சாதனைப் படைத்துள்ளார்.

கன்னியாகுமரி டூ காஷ்மீர்... சைக்கிளில் செல்ல இத்தனை நாட்கள் தானா..? புதிய கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்...!

பன்னுவின் இந்த சாதனை பெரியளவில் வைரலாகவில்லை என்றாலும், சைக்கிளிங் கின்னஸ் போட்டியில் அவர் தற்போது ஹீரோவாக மாறியுள்ளார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
New Guinness World Record For Kashmir To Kanyakumari Cycling. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X