புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் தாய்லாந்தில் அறிமுகம்!

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் முதல்முறையாக தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் தாய்லாந்தில் அறிமுகம்!

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி கார் முக்கிய தேர்வுகளில் ஒன்றாக இருக்கிறது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்திலும், சந்தைப் போட்டியை சமாளிக்கும் விதத்திலும் அவ்வப்போது புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் தாய்லாந்தில் அறிமுகம்!

இந்த புதிய தலைமுறை மாடல் இந்தியாவில் பல மாதங்களாக சோதனை ஓட்டங்களில் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் இன்று தாய்லாந்தில் முதல்முறையாக பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் தாய்லாந்தில் அறிமுகம்!

வடிவமைப்பிலும், வசதிகளிலும் இந்த கார் முற்றிலும் மாறுபட்ட மாடலாக வர இருக்கிறது. தற்போதைய மாடலைவிட புதிய தலைமுறை சிட்டி கார் நீளத்தில் 100 மிமீ வரையிலும், அகலத்தில் 53 மிமீ வரையிலும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதேவேளையில், உயரம் 28 மிமீ வரையிலும், வீல் பேஸ் நீளம் 11 மிமீ வரையிலும் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் தாய்லாந்தில் அறிமுகம்!

ஹோண்டா அமேஸ், சிவிக் கார்களை போன்று முன்பக்க க்ரோம் பட்டை க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல்வேளை விளக்குகள், எளிமையான பம்பர் அமைப்பு ஆகியவை முக்கிய டிசைன் அம்சங்களாக உள்ளன. எல்இடி விளக்கு பட்டைகளுடன் கூடிய அழகிய டெயில் லைட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் தாய்லாந்தில் அறிமுகம்!

புதிய ஹோண்டா சிட்டி காரில் 185/60 R15 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மல்டி ஸ்போக் டைமண்ட் கட் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் அகலமான டயர்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் தாய்லாந்தில் அறிமுகம்!

புதிய ஹோண்டா சிட்டி காரின் உட்புறத்தில் முற்றிலும் புதிய டேஷ்போர்டு அமைப்பு இடம்பெற்றுள்ளது. முழுவதும் கருப்பு வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் தாய்லாந்தில் அறிமுகம்!

புதிய ஹோண்டா சிட்டி காரில் டச்பேடு மூலமாக கட்டுப்படுத்தும் வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு யுஎஸ்பி போர்ட்டுகள், க்ரூஸ் கன்ட்ரோல், புளூடூத் வசதி உள்ளிட்டவை பிற முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் தாய்லாந்தில் அறிமுகம்!

புதிய ஹோண்டா சிட்டி காரில் அலுமினியம் பெடல்கள், பெரிய டெட் பெடல்கள் ஆகியவை பிரிமீயம் மாடலுக்கு உரிய அந்தஸ்தாக உள்ளன. இந்த காரில் புதிய ஆட்டோமேட்டிக் ஸ்டார்ட் - ஸ்டாப் சிஸ்டம் மற்றும் ஈக்கோ டிரைவிங் மோடு ஆகியவை உள்ளன.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் தாய்லாந்தில் அறிமுகம்!

தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய ஹோண்டா சிட்டி காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வும், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் வந்துள்ளது. 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 122 எச்பி பவரையும், 173 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த மாடல் லிட்டருக்கு 23.8 கிமீ மைலேஜை வழங்கும்.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் தாய்லாந்தில் அறிமுகம்!

இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், கியர்பாக்ஸ் தேர்வு குறித்த விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்தியாவில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் அறிமுகம் செய்யப்படும். இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக வரும்.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் தாய்லாந்தில் அறிமுகம்!

புதிய ஹோண்டா சிட்டி காரில் டியூவல் ஏர்பேக்குகள், கர்டெயின் ஏர்பேக்குகள், சைடு ஏர்பேக்குள் என மொத்தம் 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. ரியர் வியூ கேமரா, இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம், ஹில் அசிஸ்ட் ஸ்டார்ட் என பல பாதுகாப்பு தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் தாய்லாந்தில் அறிமுகம்!

அடுத்த ஆண்டு மத்தியில் புதிய ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மாருதி சியாஸ், ஸ்கோடா ரேபிட், ஹூண்டாய் வெர்னா கார்களுக்கு போட்டியாக இருக்கும். புதிய ஹோண்டா சிட்டி கார் நிச்சயம் மிட்சைஸ் கார் சந்தையில் அதிர்வுகளை ஏற்படுத்தும்.

Most Read Articles
English summary
The new generation India-bound Honda City has revealed in Thailand.
Story first published: Monday, November 25, 2019, 15:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X