புதிய ஹோண்டா சிட்டி காரின் முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் முதலாவதாக தாய்லாந்து நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹோண்டா சிட்டி காரின் முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை

மிட்சைஸ் செடான் கார் பிரியர்களின் முதன்மையான தேர்வுகளில் ஒன்றாக இருக்கும் ஹோண்டா சிட்டி காரின் 7-ம் தலைமுறை மாடலாக(உலகளாவிய சந்தையில்) மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் இந்த புதிய காரின் பல முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹோண்டா சிட்டி காரின் முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை

தோற்றம்

புதிய ஹோண்டா அக்கார்டு மற்றும் சிவிக் கார்களின் தோற்றத்தின் சாயலை இந்த காரும் பெற்றிருக்கிறது. தற்போதைய மாடலிலிருந்து முற்றிலும் வேறுபட்ட வடிவமைப்புடன் அட்டகாசமாக மாற்றப்பட்டுள்ளது. க்ரோம் பட்டை க்ரில் அமைப்பு, வலிமையான பம்பர் அமைப்பு, எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள் என முகப்பு வசீகரமாக இருக்கிறது.

புதிய ஹோண்டா சிட்டி காரின் முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை

வசீகரிக்கும் டிசைன்

அதேபோன்று, கூரை அமைப்பு மிகவும் சீராக ஏறி, இறங்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. ஹெட்லைட்டிலிருந்து டெயில் லைட்டை இணைக்கும் விதத்தில், ஷோல்டர் லைன் மடிப்பு நீள்கிறது. டைமண்ட் கட் அலாய் வீல்கள் வசீகரத்தை கூட்டுகிறது. பின்புறத்தில் எல்இடி விளக்கு பட்டையுடன் கூடிய டெயில் லைட் க்ளஸ்ட்டர் மிகவும் நேர்த்தியாகவும், வசீகரமாகவும் இருக்கிறது. பம்பர் அமைப்பு வித்தியமாகவும், வலிமையாகவும் தெரிகிறது.

புதிய ஹோண்டா சிட்டி காரின் முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை

இன்டீரியர்

உட்புறத்தில் முற்றிலும் புதிய டேஷ்போர்டு அமைப்பு இடம்பெற்றிருக்கிறது. இந்த காரில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

புதிய ஹோண்டா சிட்டி காரின் முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை

சொகுசான இருக்கைகள்

சொகுசான அனுபவத்தை தரும் உயர்தர இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காரின் வீல்பேஸ் நீளம் சற்று குறைந்தாலும், பின் இருக்கை பயணிகளுக்கு சற்றே கூடுதலான லெக் ரூம் இடவசதியை அளிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா சிட்டி காரின் முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை

புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின்

புதிய ஹோண்டா சிட்டி காரின் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ள விஷயம், தாய்லாந்தில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின்தான். இந்த எஞ்சின் 122 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. லிட்டருக்கு 23.8 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

MOST READ: டிசம்பர் 1 முதல் கட்டாயம்... ஒரு பைசா செலவில்லாமல் பாஸ்ட்டேக்கை இலவசமாக வாங்கலாம்... எப்படி தெரியுமா

புதிய ஹோண்டா சிட்டி காரின் முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை

ஆர்எஸ் மாடல்

இந்த காரின் ஆர்எஸ் என்ற டாப் வேரியண்ட்டில் ஏராளமான சிறப்பு ஆக்சஸெரீகள் மற்றும் கூடுதல் வசீகரத்தை தரும் நகாசு வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாடி ஸ்கர்ட், கருப்பு வண்ண க்ரில், சைடு மிரர்கள், ரியர் ஸ்பாய்லர், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன.

MOST READ: 215 கிமீ வேகத்தில் பறந்த பைக்... திடீரென குறுக்கே வந்த முதியவர்... ஹார்ட்பீட்டை எகிற வைத்த வீடியோ...

புதிய ஹோண்டா சிட்டி காரின் முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை

உறுதியில்லை

இந்தியாவில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடல் அறிமுகம் செய்யப்படுமா என்பதை பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் நிச்சயம் வரும்.

MOST READ: இந்தியாவிலேயே அதிக அகலமான டயர்களை கொண்ட ராயல் எண்ட்பீல்டு பைக் இதுதான்... வீடியோவை பாருங்க

புதிய ஹோண்டா சிட்டி காரின் முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை

பிஎஸ்-6 எஞ்சின் தேர்வுகள்

இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 117 பிஎச்பி பவரையும், 145 என்எம் டார்க் திறனையும், டீசல் எஞ்சின் 99 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இவை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக மேம்படுத்தப்பட்டு இருக்கும்.

புதிய ஹோண்டா சிட்டி காரின் முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை

பாதுகாப்பு அம்சங்கள்

புதிய ஹோண்டா சிட்டி காரில் 6 ஏர்பேக்குகள், மல்டி ஆங்கிள் ரியர் வியூ கேமரா, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

புதிய ஹோண்டா சிட்டி காரின் முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை

விலை அதிகரிக்கும்

அடுத்த ஆண்டு மத்தியில் புதிய ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. ரூ.9.80 லட்சம் முதல் ரூ.14.16 லட்சம் இடையிலான விலையில் தற்போதைய மாடல் விற்பனை செய்யப்படுகிறது. புதிய மாடலுக்கு கூடுதல் விலை நிர்ணயிக்கப்படும். மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles

English summary
Here are the Top things you should know about the new Honda city car.
Story first published: Tuesday, November 26, 2019, 10:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X