Just In
- 24 min ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 3 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 5 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 5 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
புதிய ஹோண்டா சிவிக் காருக்கு முன்பதிவு அமோகம்!
கடந்த மாத மத்தியில் இருந்து புதிய ஹோண்டா சிவிக் காருக்கு முன்பதிவு துவங்கப்பட்டது. இந்நிலையில், விலை அறிவிப்புக்கு முன்னதாகவே இந்த கார் மிகச் சிறப்பான முன்பதிவு எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.
புதிய ஹோண்டா சிவிக் கார் இந்திய வாடிக்கையாளர் மத்தியில் அமோக ஆதரவை பெற்றிருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
உலக அளவில் ஹோண்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் முக்கியமானது சிவிக் கார். சில ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர், ஹோண்டா சிவிக் காரின் 10வது தலைமுறை மாடல் நேற்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
கடந்த மாத மத்தியில் இருந்து இந்த புதிய மாடலுக்கு முன்பதிவு துவங்கப்பட்டது. இந்நிலையில், விலை அறிவிப்புக்கு முன்னதாகவே இந்த கார் மிகச் சிறப்பான முன்பதிவு எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. முன்பதிவு துவங்கப்பட்டு 20 நாட்களில் 1,100 பேர் இந்த காருக்கு முன்பதிவு செய்துள்ளனர்.
மாதத்திற்கு 500 கார்கள் என்ற அளவில் விற்பனை இலக்கு வைக்கப்பட்டிருக்கும் நிலையில், கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கான இலக்கை விலை அறிவிப்புக்கு முன்னரே இந்த கார் அடைந்துவிட்டது. விற்பனைக்கும் முறைப்படி வந்துவிட்டதால், இந்த காருக்கான முன்பதிவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்பதிவு கணிசமாக இருப்பதால், இனி முன்பதிவு செய்வோருக்கான காத்திருப்பு காலம் இரண்டு மாதங்களை தாண்டும் என்று தெரிகிறது. எனினும், இந்த ரக மாடல்களிலேயே விலை அதிகம் கொண்டதாக வந்திருப்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது.
டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் இருக்கும் ஹோண்டா கார் ஆலையில்தான் புதிய தலைமுறை ஹோண்டா சிவிக் கார் உற்பத்தி செய்யப்படுகிறது. ஹோண்டா கார் நிறுவனத்தின் பிரிமீயம் ரக செடான் மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை இந்த கார் பெற்றிருக்கிறது. 17 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், சன்ரூஃப், சுறா துடுப்பு வடிவ ஆன்டெனா ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.
புதிய ஹோண்டா சிவிக் காரில் 17.7 செமீ தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய செயலிகளை இந்த சாதனம் சப்போர்ட் செய்யும். டிஜிட்டல் இன்ஃபர்மேஷன் க்ளஸ்ட்டர் இதன் முக்கிய அம்சங்களில் ஒன்று.
யானை தந்த வண்ணத்திலான லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, லெதர் உறையுடன் கூடிய 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட் ஆகிய வசதிகள் இடம்பெற்றுள்ளது.
புதிய ஹோண்டா சிவிக் காரில் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 142 பிஎச்பி பவரையும், 174 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பெட்ரோரல் மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. பேடில் ஷிஃப்ட் வசதியும் உண்டு.
இந்தியாவில் முதல்முறையாக டீசல் ஆப்ஷனிலும் வந்துள்ளது. இதன் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 121.6 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. டீசல் மாடல் லிட்டருக்கு 26.8 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
புதிய ஹோண்டா சிவிக் கார் மாடலானது ஆசிய என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் பாதுகாப்பு தர மதிப்பீட்டை பெற்றிருக்கிறது. இந்த காரில் 6 ஏர்பேக்குகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி அசிஸ்ட், இபிடி மற்றும் பிரேக் அசிஸ்ட் தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்படும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், மல்டி ஆங்கிள் ரியர் வியூ கேமரா உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
பெட்ரோல் மாடல் மூன்று வேரியண்ட்டுகளிலும், டீசல் மாடல் இரண்டு வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும். பிளாட்டீனம் ஒயிட் பியர்ல், மாடர்ன் ஸ்டீல் மெட்டாலிக், ரேடியன்ட் ரெட் மெட்டாலிக், லூனார் சில்வர் மெட்டாலிக் மற்றும் கோல்டன் பிரவுன் மெட்டாலிக் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.
புதிய ஹோண்டா சிட்டி கார் ரூ.17.69 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து கிடைக்கும். டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ், ஸ்கோடா ஆக்டேவியா மற்றும் ஹூண்டாய் எலான்ட்ரா கார்களுடன் போட்டி போடும். இதன் ரக மாடல்களில் விலை அதிகமுடைய மாடால் புதிய ஹோண்டா சிவிக் கார் என்பதும் கவனிக்கத்தக்கது.
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!