புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்!

வரும் மார்ச் 7ந் தேதி புதிய ஹோண்டா சிவிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த காருக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவும் துவங்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்!

கடந்த 2013ம் ஆண்டு ஹோண்டா சிவிக் கார் இந்தியாவிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது. விற்பனை சுணங்கியதால் இந்த முடிவை ஹோண்டா கார் நிறுவனம் எடுத்தது. இந்த நிலையில், முற்றிலும் புதிய தலைமுறை ஹோண்டா சிவிக் காரை இந்தியாவில் களமிறக்க அந்நிறுவனம் முடிவு செய்தது.

புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்!

அதன்படி, 10வது தலைமுறை ஹோண்டா சிவிக் கார் வரும் மார்ச் 7ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த காருக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவும் துவங்கப்பட்டு இருக்கிறது. ரூ.31,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்!

ஏற்கனவே விற்பனையில் இருந்த மாடலில் இருந்து முற்றிலும் புதிய டிசைனுக்கு மாறி விட்டது புதிய ஹோண்டா சிவிக் கார். எல்இடி ஹெட்லைட்டுகள், முன்புறத்தில் புதிய க்ரில் அமைப்பு, சி வடிவிலான எல்இடி டெயில் லைட்டுகள் என ஒட்டுமொத்த தோற்றமும் மிக கவர்ச்சிகரமாக இருக்கிறது.

புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்!

புதிய ஹோண்டா சிவிக் கார் 4,656 மிமீ நீளமும், 1,799 மிமீ அகலமும், 1,433 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது. இதன் வீல் பேஸ் 2,700 மிமீ. இதனால், உட்புறத்தில் சிறந்த இடவசதியை அளிக்கும்.

புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்!

இந்த காரில் 7.0 அங்குல டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. தவிரவும், 2 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, புஷ் பட்டன் ஸ்டார்ட் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.

புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்!

முன்புறத்தில் டியூவல் ஏர்பேக்குகள், பக்கவாட்டில் கர்டெயின் ஏர்பேக்குகள் என 6 ஏர்பேக்குகள் உள்ளன, டிராக்ஷன் கன்ட்ரோலுடன் ஒருங்கிணைந்து செயல்படும் வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி சிஸ்டம், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்!

புதிய ஹோண்டா சிவிக் காரில் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 139 பிஎச்பி பவரையும், 174 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் மாடலில் இருக்கும் 1.6 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பெட்ரோல் மாடலில் சிவிடி கியர்பாக்ஸும், டீசல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும் உள்ளன.

புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்!

புதிய ஹோண்டா சிவிக் கார் 171 மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் பெற்றிருக்கிறது. இந்த காரில் 430 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இடவசதி உள்ளது.

புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்!

புதிய ஹோண்டா சிவிக் கார் டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ், ஹூண்டாய் எலான்ட்ரா, ஸ்கோடா ஆக்டேவியா உள்ளிட்ட கார் மாடல்களுடன் போட்டி போடும்.

புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்!

புதிய ஹோண்டா சிவிக் காரை அண்மையில் பெங்களூரில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்தோம். அதன் அடிப்படையில், எமது அனுபவத்தை விவரிக்கும் இந்த காரின் சாதக, பாதகங்களை அலசும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.

Most Read Articles
English summary
Honda Cars India has announced the launch date for the much-awaited sports sedan, the all-new Civic in the Indian market. The new Honda Civic is scheduled to launch in India on the 7th March 2019.
Story first published: Saturday, February 16, 2019, 18:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X